ஆரம்ப காலத்தில் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க கூடிய நடிகைகள் பின்னாளில் ஹீரோயினியாக அவதாரம் எடுப்பார்கள். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஹீரோயினியாக ஜொலித்தலில் பேபி ஷாலினியும் ஒருவர்.
தன் அற்புத நடிப்பால் அனைவரையும் கவர்ந்த பேபி ஷாலினி ஹீரோவாக நடித்தும் பலரது உள்ளங்களை கொள்ளை கொண்ட அற்புதமான நடிகை. அவரைப் பற்றி அசத்தலான தகவல்களை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
நடிகை ஷாலினி..
குழந்தை நட்சத்திரங்களாக இருப்பவர்கள் பின்னாளில் ஹீரோயின்களாக ஜெயிக்க முடியாது ஆனால் அதை தகர்த்தெறிந்த பெருமை பேபி ஷாலினிக்கு உண்டு. இவரது அப்பா கேரளாவை பூர்விமாகக் கொண்டு இருந்தாலும் சென்னைக்கு வந்து பட வாய்ப்புக்காக காத்திருந்த இவருக்கு வாய்ப்பு கிடைக்காததை அடுத்து தன்னால் சாதிக்க முடியாததை தன் மகள்களால் சாதித்துக் காட்டியவர்.
இதையும் படிங்க: “டே.. ஏன்டா.. இப்படி பண்ற..” வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷாம் செய்த வேலை.. நொந்து போன விஜய்..
ஷாலினி மட்டுமல்லாமல் அவர் தங்கை மற்றும் தம்பி திரைத்துறையில் நடித்திருக்கிறார்கள். எனினும் ஷாலினிக்கு கிடைத்த பெயரை போல அவருக்கு பெயர் கிடைக்கவில்லை. இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படத்திற்காக கேரளா அரசின் விருதை வென்றவர்.
மேலும் ஷாலினி தனது மூன்றாவது வயதிலேயே ஆனந்த கும்மி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
ஷாலினி அஜித் பற்றிய அசத்தலான தகவல்கள்..
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 1997 ஆம் ஆண்டு பாசில் இயக்கத்தில் வெளிவந்த காதலுக்கு மரியாதை எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்வதை அடுத்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.
இந்தப் படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு பாராட்டுக்கள் குவிந்ததோடு மினி என்ற கேரக்டரை பக்குவமாக செய்ததாக அனைவரும் கூறியிருந்தார்கள்.
மேலும் அமர்க்களம் படத்தில் நடிக்க ஷாலினியை சரண் அணுகிய போது அவர் சற்று யோசித்து இருக்கிறார். இதற்கு காரணம் நடித்து நடித்து தனக்கு போர் அடித்துவிட்டது என கூறி இருக்கிறார்.
இதை அடுத்து தல அஜித் ஷாலினிடம் போன் செய்து இந்த படம் உங்களுக்கு நல்ல புகழை கொடுக்கும் நடியுங்கள் என சொல்லி நடிக்க சம்மதத்தை பெற்று தந்தார்.
இதையும் படிங்க: நடிகை அஞ்சலி திருமணம்.. மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..
இதை அடுத்து இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது தான் ஷாலினியின் வாழ்க்கைக்கு திருப்பு முனையாக இந்த படம் அமைந்தது. காரணம் திரையில் காதலித்த அஜித்தும் ஷாலினியும் நிஜ வாழ்க்கையிலும் காதலிக்க ஆரம்பித்தது இந்த படத்தின் மூலம் தான்.
மேலும் இந்த படத்தில் சொந்த குரலில் பாட ஆசை என்ற பாடலை ஷாலினி பாடி அசத்தியிருக்கிறார். மேலும் இந்த படத்தின் சூட்டிங் எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுங்கள் இல்லை என்றால் உண்மையிலேயே நான் காலணியில் காதலித்து விடுவேனோ என்று பயமாக இருக்கு என அதில் இயக்குனரிடம் தெரிவித்திருக்கிறார்.
அம்மாடியோ இவ்வளவு இருக்கா..
மேலும் தன்னை அஜித் காதலிக்கிறார் என்ற விஷயத்தை தெரிந்து கொண்டு மகிழ்ச்சியில் இருந்த ஷாலினி அவர்கள் இருவரும் தனியாக இடைவேளை சமயங்களில் அமர்ந்து சிரிக்கும் காட்சிகளை அவர்களுக்கு தெரியாமலேயே படப்பிடித்தார் இயக்குனர் சரண்.
மேலும் இந்த படத்தில் ஷாலினிக்கு தன் சொந்த பணத்தில் பொக்கே வாங்கிக் கொடுத்திருக்கிறார் தல அஜித். இதுதான் முதன் முதலில் தன் காதலிக்கு அவர் கொடுத்த பரிசு. மேலும் அஜித்திற்கு என்ன பிடிக்குமோ அத்தனை பொருட்களையும் மொத்தமாக வாங்கி கார் டிக்கியில் வைத்து அஜித்தை ஆச்சிரியத்தில் ஆழ்த்தி நெகிழ்ச்சி அடைய செய்தவர் ஷாலினி.
ஒரு சமயம் அமர்களம் சூட்டிங்கில் அஜித் வீசிய கத்தி ஷாலினி கையை பதம் பார்க்க அதிக அளவு ரத்தம் வருவதை பார்த்து துடிதுடித்து போனார் அஜித். ஆனால் அந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தைரியமாக அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்லி இருந்த அவரின் நிதானத்தை பார்த்து ஆச்சரியமடைந்திருக்கிறார் அஜித். ஒரு பெண்ணால் இவ்வளவு அமைதியாக பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியுமா? என்று அப்போது அவருக்கு தோன்றியுள்ளது.
அவரின் தந்தை பார்த்தால் என்ன ஆகும் என்று நினைத்து அந்த படத்தின் யூனிட்டே பகிர்ந்து கொண்டிருந்த நிலையில் ஷாலினியின் தந்தையோ சின்ன வயசுல இருந்தே ஷாலினி நடிக்கும் படங்களில் அவருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டுச்சுன்னா அந்த படம் நிச்சயம் ஹிட்டுதான் அதனால இந்த படமும் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும். சகுனமும் சூப்பரா இருக்கு என்று பாராட்டி அனைவரும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
இந்த சம்பவம் நடந்த மறுநாளே அஜித் தன் காதலை ஷாலினியிடம் நேரடியாகவே தெரிவித்திருக்கிறார். அஜித்தை பிடிக்கும் என்பதால் என் வீட்டில் வந்து பேசுங்கள் என்று கூறி இருக்கிறார். ஆனால் அஜித் பேசுவதற்கு முன்பே ஷாலினி தன் பெற்றோர்களிடம் பேசி திருமணத்திற்கு சம்பந்தமும் வாங்கி விட்டார்.
ஷாலினி தன் காதல் பற்றி சொல்லும் போது காதல் என்பது இலக்கு அல்ல. அது ஆரம்பம் அமர்க்களம் படத்தில் அஜித் எனக்கு ஹீரோன்னு சொன்னப்ப அப்படியான்னு சாதாரணமா நினைச்சேன். ஒரே மாசம் தான் அவர் தான் என் உலகம் என்று சொன்னார்.
மதம் இவர்களின் காதலுக்கு ஒருபோதும் தடையாக இருக்கவில்லை என்பதும் இவர்கள் யாரும் மற்றவர்களுக்காக மதமும் மாறவில்லை என்பதும் ஆச்சரியமான விஷயம். அஜித் ஷாலினி திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் 2000 ஆண்டு ஏப்ரல் 24-ஆம் நாள் சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு அனுஷ்கா என்கிற ஒரு பெண் குழந்தையும் ஆத்விக் என்கிற ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.