தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து மக்களின் மனதில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்துவிட்டு..
அதன் பின்னர் ஆள் அட்ரஸ் தெரியாத அளவுக்கு மார்க்கெட் இழந்து வாய்ப்பு கிடைக்காமல் போன நடிகைகள் ஏராளமானோர் இருக்கின்றனர்.
அந்த லிஸ்டில் இருப்பவர்தான் நடிகை லாவண்யா தேவி. இவர் கிட்டத்தட்ட இவர் 1977 சினிமா துறையில் அறிமுகமாகி பின்னர் தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்தார்.
அதாவது படையப்பா, சங்கமம், ஜோடி, தெனாலி, சமுத்திரம், வில்லன், அலை, திருமலை, கஜேந்திரன் தலைநகரம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் முக்கிய ரோல்களில் நடித்து முகம் அறியப்பட்டார்.
இதையும் படியுங்கள்: இதனால தான் அப்படி நடிக்க ஒத்துகிட்டேன்.. கதறி அழுத நடிகை சினேகா.. என்ன ஆச்சு..?
நடிகை லாவண்யா தேவி:
இப்படி தொடர்ந்து நடித்துக் கொண்ட மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தபோது 2014 பாலா இயக்கத்தில் கடைசியாக ஒரு படத்தில் நடித்து சினிமாவிலிருந்து வெளியேறிவிட்டார்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு பகாசுரன் படத்தில் நடித்திருந்தார் லாவண்யா. அதன் பின்னர் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக தொடர்ந்து கிடைத்த சீரியல்களிலும் சீரியல் நடிகையாக நடித்தார்.
இதனிடையே பேட்டி ஒன்றில் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிவிட்டதாகவும் சினிமாவில் சிறு சிறு ரோல்களில் நடிக்க கூப்பிடும் போது கஷ்டமாகத்தான் இருக்கும்.
பல படங்களில் நான் நடித்த காட்சிகளே படம் பார்க்கும்போது இருக்காது என தனது வேதனையை கூறினார்.
சினிமா துறையில் குணச்சித்திர நடிகைகளுக்கு இருக்கும் நிலைமையை குறித்து இப்படி வெளிப்படையாக பேசி மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகியுள்ளார்.
மேலும் பேசிய அவர் சங்கமம் படத்தின் போது ஆடை மாற்றவே மிகவும் கஷ்டமாக இருக்கும். கேரவன் இருக்காது.
இதையும் படியுங்கள்: இதனால தான் அப்படி நடிக்க ஒத்துகிட்டேன்.. கதறி அழுத நடிகை சினேகா.. என்ன ஆச்சு..?
அந்த சமயத்தில் மணிவண்ணன் சார் தான் அவர்களின் கேரவனை எடுத்து வந்து எடுத்து வந்து நிறுத்தி எங்களை உடைமாற்றம் சொல்லுவார்.
பல படங்களில் ஓப்பனான இடத்தில் உடல் மாற்றவே பயந்து பயந்து மாற்றுவோம். பல படங்களில் ஹீரோயினாக நடித்து கேட்டிருக்கிறார்கள்.
நடிக்க வந்ததுக்கு அந்த தொழில் செய்திருக்கலாம்:
ஆனால் பெரிய படங்கள் கேட்கவில்லை. சிறுசிறு பட்ஜெட் படத்தில் தான் கேட்டாங்க அதிலும் பல கண்டிஷன் போடுவார்கள்.
குறிப்பாக கிளாமராக நடிக்கணும் என்பதை தான் முதல் முதல் கண்டிஷன் ஆக போட்டு நம்ம கழுத்தை அறுப்பார்கள்.
சினிமாவில் வந்ததால் பொருளாதாரத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இதுவே நல்லா படித்திருந்தால் ஆபீஸ்லையாவது போய் அல்லது ஏதாவது தொழில் செய்து சம்பாதித்து இருக்கலாம் என்று தோணும்.
ஆனால் இது மாதிரியான ஒரு அடையாளம் எனக்கு கிடைத்திருக்காது என்று வருத்தத்தோடும் வெளிப்படையாகவும் பேசி மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகியுள்ளார்.