கட்லெட்

வெயில் காலம் என்றாலும் மழைக்காலம் என்றாலும் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு குறுந்தீனி தான்  இந்த கட்லெட். இதனை  செய்ய பொருட்கள் என்னென்ன அதை எப்படி செய்தால் வீட்டில் அனைவரும் சுவையுடன் உண்ணலாம் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

தேவையான பொருட்கள்

 உருளைக்கிழங்கு கால் கிலோ 

பச்சை பட்டாணி ஒரு கப் கேரட் 150 கிராம் காலிபிளவர் சிறிது 

பீன்ஸ் 100 

பெரிய வெங்காயம் 1

பச்சை மிளகாய் 4

மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்

மஞ்சள் பொடி அரை ஸ்பூன் 

உப்பு 

பிரெட் தூள் 2 கப் 

மைதா ஒரு கப் 

எண்ணெய் 100 மில்லி

செய்முறை

சுத்தம் செய்த உருளைக்கிழங்கு, பட்டாணி, துருவிய கேரட், பீன்ஸ், காலிபிளவர் எல்லாவற்றையும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ள வேண்டும்.

 பின்னர் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

இவை வதங்கியவுடன் வேக வைத்திருக்கும் காய்கறிகளை நன்றாக பிசைந்து விட்டு அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். இந்த கலவையானது சிவப்பு நிறம் வரும் வரை அதாவது பொன் நிறம் வரும் வரை நன்கு வதக்கி கொள்ளவும். பின்னர் கொத்தமல்லி தழையை தூவவும் ஆறிய பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

மைதா மாவை உப்பு போட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் தோசை கல் வைத்து எண்ணெய்யை ஊற்றி அதில் காய்கறி உருண்டையை தட்டையாக தட்டிக் கொள்ளவும். இதனை மைதா மாவில் முக்கி தோய்த்து பிரெட் தூளில்  இரண்டு பக்கங்களும் நன்றாக படுமாறு பிரட்டி எடுத்து பின்னர் எண்ணெய் இல் போட்டு பொரிக்கவும். இப்போது அனைவரும் விரும்பக்கூடிய வீட்டு பதத்தில் கட்லெட் ரெடி.

இந்தக் கட்லெட்டை பொறுத்தவரை அனைத்து காய்களும் கலந்து இருப்பதால் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மிக எளிதில் கிடைக்கும். அவர்களும் விரும்பி உண்ணுவார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …