சின்னம்மா என்று தமிழக மக்களால் அழைக்கப்படும் விகே சசிகலாவின் மறைந்த அக்கா வனிதாமணியின் மூத்த மகன் டிடிவி தினகரன் இவர் டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி 1963 ஆம் ஆண்டு பிறந்தவர்.
ஜெயலலிதாவின் மூலம் 1999-ஆம் ஆண்டு பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட இவர் அந்தத் தொகுதியில் வெற்றி பெற்று மக்களவைத் தொகுதிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
டி டி வி தினகரன்..
திருத்துறைப்பூண்டியில் பிறந்த இவர் இவரது அப்பா விவேகானந்தரின் பெயரை இணைத்து டிடிவி தினகரன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார்.
இதையும் படிங்க: “குத்துறதுக்கு தயாராக நிக்குறீங்க போல…” ராய் லட்சுமி போஸ்.. டபுள் மீனிங்கில் கலாய்க்கும் ரசிகர்கள்..!
இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக மாறிய டிடிவி தினகரன் 19 95-ஆம் ஆண்டு தனது தாய் மாமாவின் மகள் அனுராதாவை ஜெயலலிதாவின் தலைமையில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆகி பல ஆண்டுகள் இவருக்கு வாரிசு இல்லாத காரணத்தால் பல கோயில்களுக்கு சென்று வழிபட்டு குழந்தைக்காக காத்திருந்தார்கள்.
இந்நிலையில் அன்னிய செலாவணி வழக்கில் டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு எழுந்த போது இவர் தான் சிங்கப்பூர் நாட்டின் குடிமகன் என்பதை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவால் 2011 ஆம் ஆண்டு டிடிவி தினகரன் உள்ளிட்ட வி கே சசிகலாவின் 12 குடும்ப உறுப்பினர்கள் நிரந்தரமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.
தினகரனின் மகள் ஜெய ஹரிணி..
டிடிவி தினகரனும் அவர் மனைவியும் தவமாய் தவமிருந்து 1999-ஆம் ஆண்டு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஏற்கனவே டிடிவி தினகரன் ஜெயலலிதாவின் மீது பற்றுடன் இருந்த காரணத்தால் அவர் பெண் குழந்தைக்கு ஜெயஹரிணி என்ற பெயரை சூட்டினார்.
இந்த குழந்தை பிறந்த பிறகு தான் கட்சியில் எந்த பொறுப்பும் கிடைக்காமல் இருந்த தினகரனுக்கு பெரிய குள தொகுதியில் போட்டியிடக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதற்குக் காரணம் தன் குழந்தை தான் என்பதில் தீவிரமான நம்பிக்கையோடு தினகரன் இருந்தார்.
மேலும் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்ட விகே சசிகலா டிடிவி தினகரன் பிப்ரவரி 2017 துணை பொது செயலாளர் ஆக நியமிக்கப்பட்டார்.
இதுவரை வெளி வராத அதிர்ச்சி தகவல்கள்..
இந்நிலையில் தற்போது தினகரன் வசித்து வரும் சென்னையில் உள்ள அடையாறு இல்லத்திற்கு தனது மகள் ஜெய ஹரிணியின் பெயரைத் ஜெய ஹரிணி இல்லம் என சூட்டி இருக்கிறார்.
20 வயதில் ஜெயஹரிணி கல்லூரியில் படித்து இருக்கிறார். இவருக்கு புகைப்படம் பிடிப்பதில் அதிக ஆர்வம் காணப்படுகிறது. இவரது தந்தையை சந்திக்க வரக்கூடிய தொண்டர்களை வீட்டுக்குள் இருந்த படியே பல்வேறு கோணங்களில் புகைப்படங்களை பிடித்து விடுவார்.
இதனை அடுத்து புகைப்படத் துறையில் ஆர்வம் மிக்க இவர் அப்பாவின் தொண்டர்களை புகைப்படம் பிடிக்கும் போது மீடியாக்களின் கேமராக்களில் சிக்கிவிட்டார். இந்நிலையில் தனது அரசியல் சாயம் தன் மகள் மீது படியக்கக் கூடாது என்பதில் தீவிரமாக தினகரன் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அடுத்து தனது மகள் சாதாரண நடுத்தர வர்க்க குடும்பப் பெண் போல வளர வேண்டும் என அவரது அப்பா விருப்பம் கொண்டு இருக்கிறார். இந்த விஷயத்தை அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: “தனியா இருந்தா நம்ம இஷ்டத்துக்கு அதை பண்ணலாம்..” ரகசியம் உடைத்த டிக்டாக் இலக்கியா..!
மேலும் தன் மகளுக்கு திருமணம் முடித்த நிலையில் தன் மகள் பற்றி இதுவரை தெரிந்து கொள்ளாத விஷயங்கள் வெளி வந்துள்ளது. இதனை அடுத்து இணையத்தில் தற்போது தினகரன் மகள் பற்றிய செய்திகள் வேகமாக பரவி வருவதோடு அவரைப் பெற்ற அவரைப்பற்றி இதுவரை தெரியாத தகவல்களை தெரிந்து கொண்ட ரசிகர்கள் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.