விஜய் படத்தில் நடித்த குழந்தைகள் அன்றும் இன்றும்..

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மிகப்பெரிய அளவில் தாக்கத்தையும் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய அளவில் பெயரையும் எடுத்த பல குழந்தைகள் கிடு கிடுவென வளர்ந்து ஹீரோயின் ரேஞ்சிற்கு வளர்ந்து விடுகிறார்கள்.

பார்த்த சீக்கிரத்தில் வளர்ந்த அவர்கள் யாருக்கு குழந்தையாக நடித்தார்களோ பின்னர் அவருடனே ஜோடி போட்டு நடிக்கும் அளவுக்கு காலங்கள் மாறிவிடுகிறது.

அப்படி குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி பின்னர் வளர்ந்து ஹீரோயின் ரஞ்சித் உயர்ந்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதுண்டு.

அந்த வகையில் நடிகர் விஜய்யின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த குழந்தைகள் பலர் பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் அவரின் படத்தில் நடித்திருக்கிறார்கள். அது யார் யார் என்று இந்த செய்தியில் பார்ப்போம்.

நடிகை நான்சி ஜெனிபர்

நடிகை ஜெனிஃபர் இவர் குழந்தை நட்சத்திரமாக விஜய்யுடன் நேருக்கு நேர் திரைப்படத்தில் நடித்திருப்பார் இதன் பிறகு விஜய்க்கு மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்து பெயரும், புகழும் தேடித்தந்த கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தார். விஜய்யின் தங்கையாக அந்த படத்தில் ஈர்த்து கலகலப்பான காமெடி காட்சிகள் இன்று வரை யாராலும் மறக்கவே முடியாது.தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஜெனிஃபர் இப்போ சீரியல்களில் நடித்த வருகிறார்.

நடிகை ஸ்ரீலேகா:

அடுத்ததாக விஜய் நடித்த பூவே உனக்காக இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் ஸ்ரீலங்கா இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். அதன் பிறகு வளர்ந்த பிறகு இவர் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பழமொழி படங்களிலும் நடித்து வந்தார். பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இப்போ திருமணம் ஆகி செட்டில் ஆகி விட்டார்.

மாஸ்டர் மகேந்திரன்:

மின்சார கண்ணா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் மகேந்திரன். இப்படத்தில் மிக சுட்டி பையனாக,க்யூட்டான தோற்றத்தில் நடித்த இவர் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களை குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். மீண்டும் பல வருடங்களுக்குப் பிறகு விஜய் உடன் வளர்ந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் சின்ன வயசு கேரக்டரில் நடித்திருந்தார். அதி பார்த்து மகேந்திரனா இது என்று பார்த்து பலரும் வியக்கும் அளவிற்கு அவரது தோற்றமும் நடிப்பும் மாஸ்டர் படத்தில் சிறப்பாக இருந்தது.

நடிகர் உதயராஜ்:

அடுத்ததாக திருமலை இந்த படத்துல தளபதி விஜய் கூட மெக்கானிக் ஷாப்ல வேலை செய்ற சின்ன பையனா நடித்தவர் தான் உதயராஜ். இவர் குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதற்கு முன்னர் வெளிவந்த கைதி திரைப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து மிகப் பெரிய அளவில் பேசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை நிவேதிதா:

அடுத்தது விஜய் நடிப்பில் வெளிவந்த அழகிய தமிழ் மகன் இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக துறுதுறு என்று நடித்தவர் தான் நிவேதிதா. இவங்க இந்த படத்தை தொடர்ந்து மலையாளம் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். என்ன பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனால் இப்போது செம க்யூட்டாக மிகவும் அழகான தோற்றத்தில் மாறி அடையாளமே தெரியாமல் ஆகிவிட்டார்.

நடிகை நிவேதா தாமஸ்:

அடுத்ததாக குருவி இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் தான் நிவேதா தாமஸ். இவங்க மலையாளம் மற்றும் தமிழில் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். குறிப்பாக மை டியர் பூதம் சீரியலில் நிவேதா தாமஸ் நடித்து மிகப்பெரிய அளவில் 90ஸ் கிட்ஸ்களிடம் பிரபலமானார். தொடர்ந்து பல வருடங்களுக்கு பிறகு இவர் விஜய்யின் ஜில்லா படத்தில் மீண்டும் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

மெர்சல் அக்ஷான்தாஸ்:

மெர்சல் இந்த படத்தில் விஜய்யின் மகனாக நடித்தவர் தான் அக்ஷான்தாஸ். இந்த படத்தில் மிகவும் க்யூட்டாக நடித்திருப்பார். தொடர்ந்து இவர் சீரியஸ் மேன் படத்தில் நவாசுதீன் சித்திக் மகனாக நடித்திருந்தார்.

பேபி நைனிகா:

அடுத்ததாக தெறி இந்த படத்தில் விஜய்யின் மகளாக நடித்தவர் தான் பேபி நைனிகா. அதன் பின்னர் நைனிகா அரவிந்த்சாமியுடன் இணைந்து பாஸ்கர் தி ராஸ்கல் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு பெரிதாக எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. இனிமேல் நடிப்பாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. நைனிகா இப்ப பாக்கவே ரொம்ப அழகா வளர்ந்துட்டாங்க கிடு கிடுவென வளர்ந்து அம்மாவையும் மிஞ்சும் அழகில் வளர்ந்து வருகிறார் நைனிகா.

இப்படி விஜய்யுடன் நடித்த பல குழந்தை நட்சத்திரங்கள் கிடுகிடுமென வளர்ந்து விட்டார்கள். ஆனால் விஜய் இன்னும் பார்ப்பதற்கு அதே இளமையான தோற்றத்தில் பார்த்த அதே மாதிரியே இருந்து வருகிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …