டேய் பரமா.. நீ டைரக்ட் பண்ண படங்களாடா இது..? பலரும் அறியாத தகவல்கள்..

தமிழ் திரையுலகில் இயக்குனர்களாக இருந்த நபர்கள் நடிகர்களாக களம் இறங்கி வெற்றி கண்டிருப்பது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த வகையில் இந்த இயக்குனரும் முதலில் இயக்குனராக இருந்து அதன் பிறகு நடிகராக மாறியவர்.

இதையும் படிங்க: ஒரு அஞ்சு நிமிஷம் வச்சிக்குவேன்.. அவங்க அம்மா கேட்ட கூட விட மாட்டேன்.. ஷகீலா ஓப்பன் டாக்..!

பன்முகத் திறமையை கொண்ட இவர் திரைப்பட இயக்குனராக இருந்ததோடு மட்டுமல்லாமல் ,திரைக்கதை எழுத்தாளராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும், சிறந்த நடிகராகவும் விளங்கியிருக்கிறார். அவரைப் பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

டேய் பரமா.. நீ டைரக்டர் பண்ணுனா படங்களாடா..

மேற்கு தொடர்ச்சி மலையின் அழகு கொஞ்சும் தேனி மாவட்டத்தில் இருக்கும் கூடலூரில் பிறந்து மதுரையில் வளர்ந்த இந்த இயக்குனர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணக்கியல் படித்தவர்.

பட்டப் படிப்பை முடித்த பிறகு உதவி இயக்குனராக சக்தி சிதம்பரம் மற்றும் உபேந்திரா ஆகியோரிடம் இணைந்து பயிற்சியினை பெற்ற இவர் விஷால் நடித்த திமிரு என்ற மசாலா படத்தில் 2006-ம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானார்.

மாயாண்டி குடும்பத்தார் என்ற படத்தில் நடிகராக அறிமுகமாகி அனைவரது மனதிலும் நீங்காது இடத்தைப் பிடித்த அந்த ஹீரோ யார்? என்பதை இப்போது நீங்கள் கண்டுபிடித்தீர்களா? நிச்சயமாக கண்டுபிடித்து இருப்பீர்கள் அவர் தான் நடிகர் தருண் கோபி.

இவர் நடிப்பதற்கு முன்பு பல படங்களை இயக்கி இருக்கிறார். அது பற்றிய விரிவான விவரங்களை தற்போது படித்து தெரிந்து கொள்ளலாம்.

இயக்குனராக தருண் கோபி இயக்கிய படங்கள்..

விஷாலை வைத்து 2006 – ஆம் ஆண்டு திமிரு என்ற வெற்றி படத்தை ஆறு கோடி பட்ஜெட்டில் எடுத்தார். இந்த படம் இவருக்கு 25 கோடி அளவு வசூலை செய்து கொடுத்ததை அடுத்து இவர் அடுத்ததாக 2008 – ஆம் ஆண்டு சிலம்பரசன் மற்றும் வேதிகா நடித்த காளை திரைப்படத்தை இயக்கினார். சுமார் எட்டு கோடி அளவு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 15 கோடி அளவு வசூலை தந்தது எனினும் ஒரு பிளாப் படமாகவே இருந்தது.

இதனை அடுத்து மேலும் சில படங்கள் எடுக்க முயற்சி செய்தும் அவரது முயற்சியை பலனளிக்காத காரணத்தால் 9 இயக்குனர்களோடு சேர்ந்து ராசு மாதவனின் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் 2009-ஆம் ஆண்டு நடிக்கும் வாய்ப்பைப் பெற்று நடித்து அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.

இந்தப் படத்தில் இவர் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிய உல்லாசம்கா உற்சாகம் காவின் தமிழ் ரீமேக்கை இயக்க முயற்சி செய்தார். எனினும் இந்த முயற்சி இவருக்கு தோல்வியில் முடிந்தது.

மேலும் இவர் நடிப்பில் பல படங்கள் எடுக்கப்பட்ட போதும் அந்த படங்கள் ஏதும் திரையில் வெளிவராத காரணத்தாலும் அடுத்தடுத்து டைரக்ட் செய்த படங்கள் அனைத்தும் தோல்வியை தந்ததாலும் இனி இயக்குனராக எந்த படத்தையும் இயக்கப் போவதில்லை, நடிப்பு பணிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப் போவதாக கூறியிருந்தார்.

இதையும் படிங்க: படுக்கைக்கு அழைத்த காமெடி நடிகர்.. கேரவேனுக்குள் அழைத்து சென்று குமுறு கஞ்சி காச்சிய அரண்மனை கிளி பிரகதி..!

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் டேய் பரமா நீ டைரக்ட் பண்ண படங்களாடா இது.. என்று தருண் கோபி பற்றி அறிந்திடாத தகவல்களை அறிந்து கொண்டு அந்த தகவல்களை தங்கள் நண்பர்களோடும் ஷேர் செய்து இணையத்தில் பரவலாக பேசப்படும் செய்தியாக மாற்றிவிட்டார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam