80ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் பாண்டியன். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார்.
முதல் திரைப்படமே மாபெரும் வெற்றிப்படமாக அமைய தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
இதையும் படியுங்கள்: டேய் பரமா.. நீ டைரக்ட் பண்ண படங்களாடா இது..? பலரும் அறியாத தகவல்கள்..
அந்தவகையில் புதுமைப்பெண், ஆண்பாவம், நாடோடித் தென்றல், கிழக்குச் சீமையிலே போன்ற படங்கள் இவருக்கு பெயர் பெற்று தந்தன.
நடிகர் பாண்டியன்:
அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுக்க தனது குரு இயக்குனர் பாரதிராவினாலே அடுத்த ரஜினி எனப் பாராட்டப்பட்டார்.
பின்னர் ரஜினி நடித்த குரு சிஷ்யன் படத்தில் நடித்தார். மேலும் அடுத்தடுத்து நல்ல படங்களில் நடித்த பாண்டியனின் ஆண் பாவம் என்ற படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
நாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவந்தார். பின்னர் அரசியலிலும் நுழைந்தார்.
2001 ஆம் ஆண்டு முதல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் சேர்ந்து அக்கட்சிக்காகக் கூட்டங்களில் பேசி வந்தார்.
குடி பழக்கத்தால் அழிந்த பாண்டியன்:
இப்படி தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக ஒரு காலகட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்த நடிகர் பாண்டியனின் கடைசி கட்ட வாழ்க்கை மிகவும் சோகமாக பரிதாபமாக முடிந்துள்ளது.
இதையும் படியுங்கள்:ராகவா லாரன்ஸ் மனைவி யாரு தெரியுமா..? பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..
அதை பற்றி தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்து வளர்ந்து கொண்டு இருந்தபோதே பாண்டியனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.
இதனால் மார்க்கெட் இழந்த அவர் பின்னர் சீரியல்களிலும் செகண்ட் ஹீரோவாகவும் திரைப்படங்களின் நடிக்க ஆரம்பித்தார்.
பாண்டியனுக்கு லதா என்ற மனைவியும் 15 வயதில் ரகு என்ற மகனும் இருக்கிறார். கடைசியாக சினிமாவில் கைவந்த கலை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவரது வாழ்க்கை பாதியிலே அழிந்துப்போனதற்கும் முக்கிய காரணம் தவறான நண்பர்களின் சேர்க்கை தான் என கூறப்படுகிறது.
தவறான நட்பால் மரணம் :
தவறான நட்பினால் குடிப்பழக்கம் அவரை ஆட் கொண்டது. 80 படங்கள் வரை நடித்த அவர் அதன் பின்னர் கதையை சரியாக தேர்வு செய்யாமல் நடப்பை நம்பி சினிமா வாழ்க்கையும் கெடுத்துக் கொண்டார்.
இதையும் படியுங்கள்: விஜய் படத்தில் நடித்த குழந்தைகள் அன்றும் இன்றும்..
அதனால் தான் இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனது சினிமா கெரியரையே அழித்துக் கொண்டாராம். கடைசி கட்டத்தில் தன்னது கெட்ட பழக்கங்களால் உடல்நிலை பாதிக்கப்பட்டு,
மோசமாக க நலிவடைந்து தனியார் மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் பின்னர் அவருக்கு நுரையீரல் செயல் இழந்ததோடு மஞ்சள் காமாலையும் இருந்ததால்,
தன்னுடைய 48 வயதிலேயே மரணம் அடைந்து விட்டார். இவருடைய இறப்புக்கு ரஜினியின் மறுஉருவம் இறந்து போச்சு என்று பிரபல இயக்குனரான பாரதிராஜா உருக்கமாக பேட்டிகளில் கூறியிருந்தார்.