தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு சிறந்த ஜோடியாக பார்க்கப்பட்ட எத்தனையோ பேர் காலத்தால் அழிக்க முடியாத ஜோடியாக பார்க்கப்படுகிறார்கள்.
இவர்கள் மீண்டும் இணைந்து திரைப்படங்களில் நடிப்பார்களா என்ற அளவுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறிவிடும்.
அந்த அளவுக்கு அவர்கள் சூப்பராக கெமிஸ்ட்ரியில் ஸ்கோர் செய்திருப்பார்கள். அப்படி மக்கள் மனதில் இடத்தை பிடித்தவர்கள் தான் 96 ஜானு -ராமு.
ராமு – ஜானு ஜோடி:
இந்த கேரக்டரில் கௌரி கிஷன் மற்றும் ஆதித்யா பாஸ்கர் இருவரும் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தனர்.
இதையும் படியுங்கள்: படுக்கைக்கு அழைத்துள்ளார்களா..? பிரியா பவானி ஷங்கர் கொடுத்த பகீர் பதில்..!
தமிழ் சினிமாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 96 இது ஒரு காதல் அழகிய காதல் திரைப்படம்.
இப்படத்தில் விஜய் சேதுபதி திரிஷா உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
விஜய் சேதுபதியின் ஃபிளாஷ்பேக் காட்சியில் பிரபல பிரபல குணசித்திர நடிகர் ஆன எம் எஸ் பாஸ்கரின் நகர் ஆதித்யா பாஸ்கர் தான் நடித்திருந்தார்.
ஆதித்யா பாஸ்கரின் ரோல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது.
ஆதித்யா பாஸ்கருக்கு ஜோடியாக அந்த படத்தில் கௌரி கிருஷ்ணன் நடித்திருந்தார். இவர்களின் ஜோடி பொருத்தம் எல்லோருக்கும் மிகவும் பிடித்திருந்தது.
ஹாட் ஸ்பாட் காட்சி:
கிட்டத்தட்ட இவர்கள் காதலிப்பதாக கூட கிசுகிசுக்கள் இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஆதித்யா பாஸ்கர் கௌரி கிஷன் இந்த ஜோடி இருவரும் இணைந்து hotspot என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் திருமணத்திற்கு பிறகு நான் மனைவி வீட்டில் தான் வசிப்பேன் ஆண் பெண் இருவரும் சரிசமமானவர்கள் என தன் வருங்கால மனைவியிடம் கண்டிஷன் போடும் இளைஞரின் கதை தான் இது.
இதையும் படியுங்கள்: இன்னும் கல்யாணமே ஆகல.. அதுக்குள்ளே.. அட கடவுளே.. என்ன கன்றாவி இது..? வரம்பு மீறும் வரலட்சுமி சரத்குமார்..!
இதில் கௌரி கிஷன் – ஆதித்ய பாஸ்கர் கணவன் மனைவியாக நடித்திருக்கிறார்கள்.
96 படத்தில் பார்த்ததை விட இவர்களது கெமிஸ்ட்ரி கொஞ்சம் மெச்சூராக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
96 படத்திற்கு இணையாக பிரபஞ்சம் என்று கூறி தற்போது வெளியாகி உள்ள ஹாட்ஸ்பாட் படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
இதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக ஆதித்யா பாஸ்கரின் நடிப்பு படத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டுள்ளது.
ஹாட்ஸ்பாட் படத்திற்காக மீண்டும் இணைந்துள்ள 96 ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஏனெனில் இந்நிலையில் ஹாட்ஸ் பாட் படத்திலிருந்து ஒரு காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் வீட்டோட மாப்பிள்ளையாக ஆதித்யா பாஸ்கர் போவதற்காக கௌரி கிருஷ்ணனின் அம்மாவிடம் அவர் பேசும் ஒரு டயலாக் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
வீட்டோட மாப்பிள்ளையாக நூதன திட்டம்:
அதாவது பெண்கள் திருமணத்திற்கு முன் அம்மா வீட்டில் ராணியாக இருப்பார்கள். ஆனால் புகுந்த வீட்டிற்கு வந்துவிட்டால் அப்படியில்லை.
இதையும் படியுங்கள்: திம்சு கட்டையின் திருவிளையாடல்.. ஒரே நேரத்தில் அப்பா மகன் இருவருக்கும் சுண்ணாம்பு.!
அம்மா வீட்டில் ராணியாக இருப்பார் ஆனால் புகுந்து வீட்டில் ராணி மாதிரி தான் இருப்பார்கள்.
எனவே என் மனைவி ராணி மாதிரி வேண்டாம் ராணியாகவே இருக்க வேண்டும் என்று கூறி தானும் தன் மனைவியும் மனைவியின் வீட்டிலேயே இருக்கலாம் என ஆதித்ய பாஸ்கர் டயலாக் பேசுகிறார்கள்.
அதாவது வீட்டோட மாப்பிள்ளை போவதற்கு இப்படி ஒரு கருத்தினை கூறுகிறார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாக வீட்டோட மாப்பிள்ளை போறதுக்கு இப்படி ஒரு நூதன திட்டமா?
விளங்கும்டா சாமி என நெட்டிசன் ஆதித்யா பாஸ்கரை விமர்சித்துள்ளனர். இதோ அந்த வீடியோ: