சினிமாவில் நல்ல கேரக்டரில் நடிப்பவர்களை எல்லாம் நல்லவர்கள் என்றும், மோசமான கேரக்டரில் நடிப்பவர்களை எல்லாம் மிகவும் கெட்டவர்கள் என்றும் 1980களில் தான் நினைத்தார்கள். 40 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அப்படி நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று பார்க்கும்போது, அவர்களது சினிமா குறித்த பார்வையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது தெரிகிறது.
சிவப்பா இருக்கறவன்…
இதற்கு, ஆரியா படத்தில் வடிவேலு காமெடி காட்சியில் சிவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்டா என்று கூறுவதைப் போலவே இருக்கிறது.
சினிமாவில் வில்லன்களாக நடிக்கும் நிஜ ஹீரோக்களும் இருக்கின்றனர். ஹீரோக்களாக நடிக்கும் நிஜ வில்லன்களும் இருக்கின்றனர். எத்தனையோ ஹீரோக்களின் மனைவிகள், அவர்களை விவாகரத்து செய்வது, அந்த ஹீரோக்களின் உண்மை முகத்தை பார்த்த பிறகுதான்.
மணிகண்டன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் மிக முக்கியமானவர் மணிகண்டன். இவர் காலா படத்தில் ரஜினிகாந்த் மகனாக லெனின் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
தொடர்ந்து தசெ ஞானவேல் ஜெய்பீம் படத்தில் மணிகண்டன் கேரக்டர் மிகவும் பேசப்பட்டது. விசாரணை கைதியாக அந்த படத்தில் அவர் லாக்கப்பில் போலீசாரின் கொடூர தண்டனைகளால் பல்வேறு துயரங்களை அனுபவிக்கும் அந்த காட்சிகள் படம் பார்த்த ரசிகர்கள் மனதை வெகுவாக ரணப்படுத்தியது.
இதையும் படியுங்கள்: கவர்ச்சியில் சன்னி லியோனை மிஞ்சிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா அறிவுமணி..!
இதையடுத்து நல்ல நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் மணிகண்டன், அதன்பிறகு குட் நைட் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் மோட்டார் மோகனு என்ற கேரக்டரில் நடித்த அவர், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இரவு நேரங்களில் தூங்கும் போது ஏற்படும் குறட்டை பிரச்சினையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மணிகண்டன் பகலிலும் குறட்டை விட்டு தூங்குவார்.
லவ்வர்
அதன் பிறகு சமீபத்தில் வெளியான லவ்வர் என்ற படத்தில் அவரது நடிப்பு மிகவும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக காதல் காட்சிகளில் உணர்ச்சி மயமான தனது நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
தொடர்ந்து நல்ல கேரக்டர்களில் நடித்து, வளர்ந்து வரும் இளம் நடிகராக மணிகண்டன், பல்வேறு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
கதாநாயகியின் தோழி
இதற்கிடையே லவ்வர் படத்தில் கதாநாயகியின் தோழியாக ஹரிணி சுந்தர்ராஜன் என்பவர் நடித்திருந்தார். இந்த படத்தில் கஞ்சா புகைக்க ஆசைப்படும் பெண்ணாக ஐசு என்ற கேரக்டரில் நடித்த ஹரிணி சுந்தர்ராஜனுக்கு ரசிகர்கள் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து ஹரிணி சுந்தர்ராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்: கவர்ச்சியில் சன்னி லியோனை மிஞ்சிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா அறிவுமணி..!
டிஎம் செய்திருக்கின்றனர்
அதில் அவர், இன்று காலை என்னுடைய எக்ஸ் தளத்தில் சில முட்டாள்கள் டிஎம் செய்திருக்கின்றனர். லவ்வர் படத்தில் இடம்பெற்றுள்ள ஐசு கதாபாத்திரத்தை பிடிக்காததால் என்னை திட்டி வருகின்றனர்.
கேரக்டர் பிடிக்கவில்லை என்றால்
ஒருவர் நடித்த கேரக்டர் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அவரை இழிவாகவும் அவமரியாதையாகவும் பேசுவது பரவாயில்லை என்று அவர்கள் நினைக்கின்றனர் என்று அந்த பதிவில் அவர் வருத்தத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
காலங்காத்தால கொடுமை பண்றாங்க.. மணிகண்டன் பட நடிகை பரபரப்பு புகார் வைரலாகி வருகிறது.
This morning, I woke up to some idiots in my DMs swearing at me because they don’t like Aishu in Lover.
Firstly, that they think it’s okay to be vile and disrespectful towards an actor because they didn’t like a character they played is beyond me.
— Rini (@rinibot) April 10, 2024