தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு அதாவது கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஜெயிலர்.
அந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனால் தயாரிக்கப்பட்டு ரஜினிக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது.
இதையும் படியுங்கள்: நான் கல்லூரி மாணவி.. பரவாயில்ல உன் ரேட் என்னன்னு சொல்லுடி.. மோசமான அனுபவம் குறித்து எதிர்நீச்சல் நடிகை..!
இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், விநாயகம், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திர கூட்டங்கள் நடித்திருந்தார்கள்.
ஜெயிலர் திரைப்படம்:
இந்த படம் வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக முத்திரை குத்தப்பட்டது. குறிப்பாக இப்படத்தில் தமன்னாவின் நடனம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
அனிருத்தின் அதகளமான இசையில் வெளிவந்த பாடல்கள் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. இந்த படம் விமர்சனம் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமே இல்லாமல் மிக பெரிய அளவில் வசூல் சாதனையும் குவித்தது.
கிட்டத்தட்ட ரூ. 240 கோடிக்கு மேல் இந்த படம் கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படமாக முத்திரை பதிக்கப்பட்டது.
இந்த படம் இதுவரை சுமார் 600 கோடிக்கு மேல் மொத்த வசூல் வாரி குவித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்து மாஸான ஸ்டைலுடன், ஸ்டண்ட், ஆக்சன் என அதிரடி கிளப்பினார்.
இதையும் படியுங்கள்: யாரவது இப்படி பண்ணுவாங்களா..? கௌதமி பேச்சால் வெடித்த சர்ச்சை..! அட கொடுமைய..!
ரஜினிகாந்த் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் பார்க்க முடிந்ததே படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணமாக பேசப்பட்டது.
குறிப்பாக ஒவ்வொரு காட்சியும் புல்லரிக்கும் வகையில் ரஜினிகாந்தின் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இப்படத்தில் ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பு அவருக்கு ஈடு கொடுத்து நடித்திருந்தார்.
மேலும் இப்படி படத்தில் ரஜினியின் மருமகளாக மிர்னா மேனன் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் அவருக்கு மிகச் சிறந்த அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்தது என்று சொல்லலாம்.
ஹிட் அடித்த பாடல்கள்:
இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் என்று எடுத்துக் கொண்டோமானால் அத்தனை பாடல்களும் மெகா ஹிட் அடித்து ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது.
குறிப்பாக படத்தில் தமன்னா ரஜினியின் ஆட்டம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. தமன்னாவின் கவர்ச்சி நடனம் பலரையும் வெகுவாக கவர்ந்தது என்று சொல்லலாம்.
படத்திற்கு ஈடாக பாடல்கள் பெருவாரியான வரவேற்பை பெற்றது. ஜெயிலர் படத்தில் ரத்தமாரே பாடல் விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார்.
இந்த பாடல் மகன் மற்றும் தந்தைக்கு இடையே உள்ள பாச உறவை வெளிப்படுத்தும் வகையில் செண்டிமெண்டான சாங்காக அமைந்தது.
இந்த அளவுக்கு ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஒவ்வொரு காட்சிகளும் ஒவ்வொரு பாடல்கள் என எல்லாவற்றிலும் மாபெரும் வெற்றி அடைந்தது.
தொடர்ந்து தற்போதைய படத்தின் இரண்டாம் பாகம் மும்முறமாக உருவாக தொடங்கியது. ஆம் இப்படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கி தயாரிக்கிறார்.
ஜெயிலர் 2 டைட்டில்:
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் டைட்டில் தற்போது வெளியாகி அதகளம் செய்துள்ளது. இப்படத்திற்கு “ஹூக்கும்” என்ன டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
இதையும் படியுங்கள்: மாமனார் செய்கிற வேலையா இது..? எவ்வளவு சொல்லியும் கேக்கல.. தனுஷ் விவாகரத்து.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..
ஜெயலலிர் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் மாபெரும் வரவேற்பை பெற்றதால் அதே டைட்டிலை படத்தை இரண்டாம் பாகத்திற்கு வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் முடித்த பிறகு ஜெயிலர் 2 படத்தின் பணிகள் மும்முரமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் நெல்சன் திலிப் குமார் ரஜினி கூட்டணி மீண்டும் இணைய போவதாகவும் இந்த மாபெரும் வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.