இணையத்தில் லீக் ஆன GOAT First Single பாடல்.. ரசிகர்கள் படக்குழு அதிர்ச்சி..!

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (கோட்) படம் உருவாகி வருகிறது. கோட் படத்தின் சூட்டிங் கடந்த ஆறு மாதங்களாக நடந்து வருகிறது.

இரட்டை வேடங்களில் விஜய்

இந்த படத்தில் நடிகர் விஜய், அப்பா – மகன் என்ற இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இதில் அப்பாவுக்கு ஜோடியாக நடிகை சினேகாவும், மகனுக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரியும் நடித்துளளனர், இந்தப் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிரசாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நடிகர் பிரபுதேவா, மைக் மோகன், சுதீப், கஞ்சா கருப்பு, அஜ்மல், வைபவ், ரம்யா கிருஷ்ணன், லைலா, கனிகா, உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் விஜயுடன் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இதையும் படியுங்கள்: நிஜமாவே 42 வயசா..? நம்பவே முடியலையே.. புன்னகையரசி சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

கோட் படத்தின் படப்பிடிப்பு, கடந்த அக்டோபர் 2ம் தேதி சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் பட பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து சென்னை, ஐதராபாத், துருக்கி, திருவனந்தபுரம், புதுச்சேரி, கோவளம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இப்போது ரஷ்யா நாட்டில் உள்ள மாஸ்கோ நகரில் ஷூட்டிங் கடந்த 2 வாரங்களாக நடந்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிவடையும் நிலையில், வரும் 17ஆம் தேதி படக்குழு சென்னை திரும்புகிறது.

செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ்

வரும் செப்டம்பர் 5ம் தேதி கோட் படம் ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழ் புத்தாண்டு தினத்தில் கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள்: குடிக்கு அடிமை.. பேஸ்புக் காதல் தோல்வி.. மனிஷா கொய்ராலாவின் கண்ணீர் கதை..!

இணையத்தில் கசிந்தது

இந்நிலையில் இப்போது இணையத்தில் கோட் படத்தில் இடம்பெற்ற அந்த பாடல் வெளியாகி உள்ளது. இதை பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். நாளை புத்தாண்டு பரிசாக ரசிகர்களுக்கு விஜய் பாடலை ரிலீஸ் செய்ய படக் குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில், இப்படி திடீரென இணையத்தில் இந்தப் பாடல் எப்படி லீக் ஆனது என்பது படக்குழுவினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

முதல் சிங்கிள்

தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 விஜய் நடிப்பில் உருவாகி வரும் The GOAT படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில், முழு பாடலும் இணையத்தில் கசிந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

என்றாலும் விஜய் ரசிகர்கள் இணையத்தில் லீக்கான அந்த பாடலை ரசித்து வைரலாகி வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam