கண் பார்வையை இயற்கையாக சரி செய்ய முக்கிய குறிப்புகள்.

உடல் உறுப்புகளிலேயே மிக முக்கியமான  உறுப்பாக திகழ்வது கண்கள். ஆனால் இன்றைய தலைமுறையை பார்த்தால் அவர்களுக்கு கண்பார்வையில் பலதரப்பட்ட கோளாறுகள் இளம்வயதிலேயே தோன்றுவது இயல்பான ஒன்றாகிவிட்டது. 

ஏனென்றால் கண்களுக்கு அதிகமான வேலைகளை கொடுப்பதுடன் அதிக நேரம் லேப்டாப், கம்ப்யூட்டர் ,மொபைல் போன் என தொடர்ந்து பல மணி நேரம் கண்களைக் கொண்டு உற்றுநோக்கி செய்யக்கூடிய பணிகளை செய்வதால் அவர்களுக்கு கண்பார்வையில் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகிறது.

அத்தகைய கண் பாதிப்புகளிலிருந்து இயற்கையாகவே சில வழிமுறைகளை பின்பற்றும் போது பார்வையில் ஏற்படும் குறைபாடுகளை மிக எளிதில் சரி செய்யலாம். அதைப் பற்றிய விரிவான விஷயத்தைப் பற்றி இந்த கட்டுரையில் உங்களுக்காக நான் சில குறிப்புகளை தருகிறேன். 

இதனைத் தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தி வந்தால் உங்கள் கண்களை நீங்கள் மிக  எளிதாகவும் பாதுகாக்கலாம்.

இனிவரும் கோடையில் அதிக வெப்பத்தால் கண் எரிச்சல் கண்களில் சிவப்பு தன்மை ஏற்படும் இதனை சரிசெய்ய முள்ளங்கி, தக்காளி, வெள்ளரி, கொத்தமல்லி போன்றவற்றை சம அளவு எடுத்து சிறிது உப்பு கலந்து வாரம் இருமுறை குளித்து வந்தால் கண் எரிச்சல் கண்ணில் ஏற்படக் கூடிய சிவப்பு, சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் எரிச்சல் குணமாகும்.

நந்தியாவட்டப் பூக்களை இரவில் நீரில் ஊற வைத்து காலையில் அந்த நீரைக் கொண்டு கண்களை கழுவினால் கண் எரிச்சல் கண் சிவப்பு நீங்கும். இதே பூக்களை இரவில் உறங்கும் போது கண்களில் கட்டி வைத்து படுத்தால் கண் சோர்வு நீங்கும்.

 

பார்வையை தெளிவாக்கும் திரிபலாசூரணம் , வில்வ இலை சாறு எடுத்து கண்களில் விட்டால் கண் எரிச்சல் நீங்கும். நெல்லிக்காய் சாற்றினை கண்களுக்கு இரண்டு துளிகள் காலை மாலை 21 நாட்கள் தொடர்ந்து விட்டு வந்தால் பார்வை தெளிவாகும் 7நாட்களில் மங்கல் விலகும். 

கண்கள் குளிர்ச்சி பெற வெங்காயம் புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து குளித்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …