நடிகர் கிங் காங் மனைவி யாரு தெரியுமா…?

வளர்ச்சி குறைவாக பிறந்து தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் கிங்காங்.

இவர் முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த அதிசய பிறவி திரைப்படத்தில் ஒரு சின்ன ஒரு காட்சியில் நடித்து லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் இணையத்தில் வைரல் ஆனது .

இந்த காட்சி இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

குறிப்பாக பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை ரோல்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகராக இவர் பார்க்கப்பட்டு வந்தார்.

அது மட்டும் இன்றி நடன கலைஞராகவும் மேடை நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார். 2000 காலகட்டத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் பிரபலமாகி வைரலாக தொடங்கினார்.

நடிகர் கிங்காங்:

அதன் பிறகு 2007 ஆம் ஆண்டில் வறுமையில் வாடுபடதாகவும் இவருக்கு பெரிதாக வருமானம் கிடைக்கவில்லை எனவும் செய்திகள் வெளியாகியது.

மீண்டும் திரைப்படங்களில் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று நடிக்க தொடங்கினார். இதன் பின்னர் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் பலர் கொடுக்கத் தொடங்கினர்.

போக்கிரி படத்தில் ஒரு நடன காட்சியில் தோன்றினார். அத்துடன் வடிவேலுவுடன் நகைச்சுவை காட்சியின் கருப்பசாமி குத்தகைதாரர், கந்தசாமி போன்ற திரைப்படங்களில் நடித்து மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க ஆரம்பித்தார்.

தொடர்ச்சியாக இவருக்கு காமெடி காட்சிகளும் காமெடி ரோல்களும் கிடைக்க ஆரம்பித்தது.

1988 முதல் பல்வேறு திரைப்படங்களில் நடித்த இவர் கடந்த 2018 வரை கடைசியாக நடித்திருக்கிறார்.

ஷாருக்கான் உடன் கிங் காங்:

பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய காமெடி காட்சியில் ஷாருக்கான் உடன் நெருக்கமாக நடித்திருப்பார்.

அத்துடன் நடிகை சகீலாவுக்கு ஜோடியாக ஒன்னற குள்ளன் என்ற திரைப்படத்தில் இவர் லீட் ரோலில் தொடங்கினார்.

அதன் மூலம் இவர் பாலிவுட் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் இத்திருந்தார். திரைப்படங்களை தாண்டி பல டிவி சீரியல்களிலும் ஸ்டேஜ் பர்பாமென்ஸ் செய்து அசத்தி இருக்கிறார்.

சினிமாவில் மிகச்சிறந்த கலைஞராக பார்க்கப்பட்டாலும் இவருக்கு நிஜ வாழ்க்கையில் பல சோகங்கள் நிறைந்ததாக அமைந்தது.

திருமண வாழ்க்கை:

ஆம் இவர் குள்ளமாக இருப்பதால் இவருக்கு திருமணமே நடக்காது என பலர் கூறி வந்தார்களாம். இவரது தந்தையை இவருக்கு திருமணம் செய்ய வேண்டாம் எனக் கூறி வந்தாராம்.

கிங்காங்கின் அம்மா தான் அவருக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டு கலா என்ற பெண்ணை 2001ம் ஆண்டில் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இவர்கள் திருமணம் வடபழனி முருகன் கோவில் நடைபெற்றது. திருமணமே நடக்காது என்று கூறியவர்கள் மத்தியில் மூன்று பிள்ளைகளுடன் மனைவி குழந்தை குட்டி என மிகுந்த மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam