உடல் எடையை கூட்ட உதவும் உணவுகள்.

சிலர் பார்ப்பதற்கு ஒல்லியாக காற்றடித்தால் பறந்து விடுவார்களோ என்று எண்ணும் அளவிற்கு மிகவும்  மெல்லிய தோற்றத்தோடு காட்சி தருவார்கள். அவர்கள் என்னென்ன உணவுகளை எடுத்து வயிறு நிறைய உண்டாலும் அவர்களுக்கு தசை போடுதல், உடல் குண்டாககுதல் என்பது ஏற்படவே செய்யாது. அப்படி பட்டவர்களின் உடல் எடையைக் கூட்டுவதற்கு உதவி செய்யக்கூடிய சில உணவுக் குறிப்புகளை பார்க்கலாம்.

உடல் எடையை கூட்ட உதவும் உணவுகள்

 தினமும் வேண்டாம் என்று தூக்கி எறியும் பூசணிக்காய் விதைகளை பொடி செய்து பாலில் தினமும் காலை மாலை குடித்துவர உடல் எடை கூடும். அதுமட்டுமல்லாமல் இவரது மேனி பார்ப்பதற்கு மிகவும் பளபளப்பாக மாறி இருக்கும்.

கருணைக்கிழங்கு வாரம் இரண்டு முறை அல்லது மூன்று வேளை 100 கிராம் வீதம் ஒருவர் உணவில் எடுத்துக்கொண்டு வந்தால் நிச்சயமாக அவர் உடற்பருமன் கூடும். இதனை நீங்கள் வீட்டிலேயே செய்து பார்த்தால் உங்களுக்கு மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.

உளுந்தை சார்ந்த உளுந்து வடை, உளுந்தங்களி போன்றவற்றை வாரத்திற்கு மூன்று முறை நீங்கள் உங்கள் உணவோடு சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடை கூடுவதோடு பெண்களின் இடுப்பு எலும்பு பலம் பெற்று இடுப்பு, மூட்டு வலிகளில் இருந்து விடுதலை அடையலாம்.

காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் ஐந்து பேரிச்சம் பழம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் பருகினால் உடல் எடை விரைவில் கூடும். இதே போல மாலையில்  பேரிச்சம்பழம் மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.

எள்ளு மாவு எள்ளு சாதம் நல்லெண்ணெய் இதனை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்கள் ஒல்லியான தேகம் திடீரென புசுபுசுவென சதைப்பற்றுடன் உடல் எடை கூடி கிடைக்கும்.

அதுபோல் கொழுப்பு நிறைந்த பொருட்களையும் நெய், வெண்ணை, பால் சார்ந்த பொருட்களை அதிகளவு தினம் உண்பதின் மூலம் உங்கள் எடை அதிக அளவு கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …