திரை பிரபலங்களுக்கு எப்படி மக்கள் மத்தியில் நல்ல பெயரும் புகழும் உள்ளதோ, அது போலவே தற்போது சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விஜேக்களுக்கும் நல்ல பிரபலம் மக்கள் மத்தியில் உள்ளது.
அந்த வகையில் வி.ஜேவாக இருக்கும் ஜாக்குலின் தற்போது ஓரின சேர்க்கையாளர் குறித்து வந்த கமெண்டுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.
அது பற்றிய விரிவான பதிவை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். கலக்கப் போவது யாரு சீசன் 5 மூலம் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் தான் இந்த ஜாக்லின்.
விஜே ஜாக்லின்..
பார்ப்பதற்கே சொக்க வைக்க கூடிய அழகில் இருக்கும் ஜாக்லின் கலக்கப்போவது யாரு சீசன் 5, 6, 7, 8 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார்.
பொதுவாகவே இன்று சின்னத்திரையில் முகத்தை காட்டியவர்கள் வெள்ளித்திரையில் வலம் வரக்கூடியவர்களாக திகழ்கிறார்கள். அந்த வகையில் நடிகையாக ஜாக்லின் மாற சந்தர்ப்பம் அமைந்தது.
அந்த வகையில் இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நயந்தாரா உடன் இணைந்து கோலமாவு கோகிலா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சின்னத்திரை பெரிய திரை என்று இரட்டைக் குதிரைகளில் சவாரி செய்து வரும் இந்த தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி இருக்கிறார்.
ஓரினச் சேர்க்கை குறித்து மோசமான கமெண்ட்..
இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து வந்த மோசமான கமெண்ட் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முகம் சுளிக்காமல் அவர் பதில் அளித்து இருக்கிறார்.
இதற்கு காரணம் இவர் மூன்று தோழிகளோடு இருக்கக்கூடிய புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதை அடுத்து நீங்கள் அந்த மாதிரி ஆளா? என்ற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அவர்களின் சிந்தனை எப்படி இப்படி டேஞ்சராக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார்.
மேலும் பொதுவாக இது போன்ற திரைப்படங்களை வெளியிடுவதால் இது போன்ற எண்ணங்கள் ஏற்படக்கூடிய வகையில் உள்ள கேள்விகள் தான் கேட்கப்பட்டு வருவதாக ஜாக்லின் சொல்லி பலரையும் கவர்ந்து விட்டார்.
பதிலடி பதில் கொடுத்த ஜாக்லின்..
இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் நீங்கள் லெஸ்பியனா? என்று சிலர் பதிவிட்டு இருப்பதை பார்த்து ஆவேசமாக இதில் உங்களுக்கு என்ன உறுத்துது என்ற கேள்வியை முன் வைத்து இருக்கிறார்.
அத்தோடு இது போன்ற மூன்று பேரோடு சேர்ந்திருக்கும் போட்டோவை போட்டால் இப்படித் தான் கமெண்ட் செய்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் அறிவே இல்லை. என்னை மட்டும் இப்படி கூறுவதில்லை. என்னை போலவே பல பிரபலங்களையும் இப்படித் தான் விமர்சனம் செய்கிறார்கள் என பேசி இருக்கிறார்.
ஜாக்குலினின் ஊந்த பரபரப்பு பேட்டி ரசிகர்களின் மத்தியில் பகிரப்பட்டு வருவதோடு அவர் கோபத்தில் நியாயம் உள்ளதாக ரசிகர்கள் கூறி இருப்பது அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பது போல் உள்ளது என சொல்லலாம்.
இதனை அடுத்து இனி மேல் இது போன்ற வேண்டாத விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்துக்களை சொல்லி இருப்பதோடு அது போன்ற நபர்களுக்கு இது உரைத்து இனி மேல் இப்படி செய்யாமல் இருப்பார்களா? என இனி வரும் காலங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.