பல பேருடன் தொடர்பு.. பணத்தேவை..விவாகரத்து பண்ணிட்டேன்.. வெளிப்படையாக பேசிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் எப்போது பார்த்தாலும், சில நடிகைகளின் மிகக் கவர்ச்சிகரமான புகைப்படங்கள், குத்தாட்ட வீடியோக்கள் தொடர்ந்து அப்டேட் ஆகி கொண்டே இருக்கும். ஆயிரக்கணக்கான பாலோயர்ஸ் கமென்ட் தெரிவித்து, ஹாட்டின்களை பறக்க விட்டுக் கொண்டே இருப்பார்கள்.

ரேஷ்மா பசுபுலேட்டி

சமூக வலைதளங்களில், மிக முக்கியமான செலிபிரட்டியாக வலம் வந்துக் கொண்டிருப்பவர்தான் பாக்கியலட்சுமி நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஷ்ணு விஷால், நிக்கி கல்யாணி, சூரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கேரக்டரில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்திருந்தார்.

அதன் பிறகு சினிமாவில், அதிக படங்களில் அவர் நடிக்கவில்லை. ஓரிரு படங்களில் மட்டுமே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்கியலட்சுமி சீரியல்

ஆனால் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த பிறகு, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார்.

சினிமாவில், சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், விமான பணி பெண்ணாகவும் அவர் பணிபுரிந்து இருக்கிறார்.

விஜய் டிவியில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரேஷ்மா பசுபுலேட்டி பங்கேற்ற நிலையில், இந்த நிகழ்ச்சி மூலமும் ரேஷ்மா மக்கள் மத்தியில் மேலும் பலமடங்கு பப்ளிசிட்டி அவருக்கு கிடைத்தது.

பிக்பாஸ் வீட்டுக்குள்…

அவர் கொத்தும் குலையுமாக, மப்பும் மந்தாரமுமாக கிளாமர் ஆடைகளில் பிக் பாஸ் வீட்டுக்குள் வலம் வந்து, பார்வையாளர்களை மூடு கிளப்பி விட்டார்.

தொடர்ந்து விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்தில் நடித்த வரும் ரேஷ்மா பசுபுலேட்டி, சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை, குத்தாட்ட வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் சமீபத்தில் கலந்து கொண்டார். அப்போது தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்து அவர் வெளிப்படையாக பேசினார்.

அடிமை போல் நடத்தியதால்…

அப்போது அவர் கூறியதாவது, என் பெற்றோர் பார்த்து எனக்கு முதல் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் என்னுடைய முதல் கணவர் என்னை அடிமை போல் நடத்தியதால் ஒரு கட்டத்தில் வாழ்க்கை வெறுத்துப் போய் அவரிடமிருந்து பிரிந்து விவாகரத்து பெற்றுக் கொண்டேன்.

பாக்ஸருக்கு பல பெண்களுடன் தொடர்பு

பின்னர் அமெரிக்கா சென்று விட்டேன். அங்கு ஒரு பாக்ஸரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கையில் செட்டில் ஆனேன். ஆனால் அந்த பாக்ஸருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது, திருமணத்துக்கு பிறகு தான் எனக்கு தெரிய வந்தது.

ஒருமுறை எனக்கும், அவருக்கும் இது குறித்து சண்டை ஏற்பட்டது. அப்போது அவர் என்னை கடுமையாக தாக்கிவிட்டார். அப்போது நான் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தேன். கடுமையான வயிற்று வலி வந்தது.

மருத்துவமனையில் அட்மிட் ஆனேன்

அப்போது யாரும் எனக்கு உதவ முன்வராதால், நானே காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆனேன். அதன்பிறகு எனக்கு குழந்தை பிறந்தது. கிட்டத்தட்ட 4 மாதம் என் குழந்தை இன்குபேட்டரில் இருந்தான். கடவுள் என் குழந்தையை காப்பாற்றி எனக்கு மீட்டுக் கொடுத்தார்.

இதையடுத்து அந்த பாக்ஸரை நான் விவாகரத்து செய்து விட்டேன். அதன்பிறகு அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து விட்டேன்.

பல மருத்துவமனைகளில் பார்த்து, என் பையனை சரி செய்ய முயற்சித்தேன். தினமும் அவனுக்கு பிசியோதெரபி தர வேண்டும் என்பதால் எனக்கு பணத்தேவை அதிகமாக இருந்தது.

இரண்டு மூன்று இடங்களில்…

அதற்காக இரண்டு மூன்று இடங்களில், வேலை பார்த்து சாப்பிடக்கூட நேரம் இல்லாத சூழ்நிலையில் கஷ்டப்பட்டு என் மகனை காப்பாற்றினேன். நல்ல முறையில் என் மகனை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எனக்கு இருந்தது. அதனால் என் மகனின் வாழ்க்கைக்காக நான் இன்னும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

பல பேருடன் தொடர்பு

பல பேருடன் தொடர்பு வைத்திருந்த கணவரை விவாகரத்து செய்தேன். மகனின் மருத்துவ செலவுக்காக அதிக பணத்தேவை இருந்ததால், சாப்பிடக் கூட நேரமில்லாமல் வேலை பார்த்தேன் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் ரேஷ்மா பசுபுலேட்டி.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam