வேலூரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இன்று பாலிவுட்டில் நட்சத்திர நடிகையாக உயர்ந்திருப்பவர் தான் நடிகை ராதிகா ஆப்தே.
இவர் பார்ப்பதற்கு டஸ்கின் அழகில் ஸ்லிம்மான தோற்றத்தில் கவர்ச்சி அழகை கட்சிதமாக காட்டி ரசிகர்களை கவர்ந்திழுப்பார்.
நடிகை ராதிகா ஆப்தே:
ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்புத் திறமையை மெருகேற்றி ரசிகர்களை மிரள வைப்பார். ஒவ்வொரு படத்திற்கும் ஏற்றவாறு,
கச்சிதமாக நடிப்பை வெளிப்படுத்தி இயக்குனருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இலாபத்தை ஈட்டி கொடுத்து ராசியான நடிகையாக இன்று பெயர் எடுத்திருக்கிறார்.
இன்று பாலிவுட்டில் உச்ச நட்சத்திர நடிகையாக உயர்ந்திருக்கும் ராதிகா ஆப்தே சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால்,
தினமும் அன்றாட உணவுக்கும், உடை அணிவதற்குமே திண்டாடி இருக்கிறார். அதைப்பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில்,
மிகுந்த வருத்தத்தோடு தனது தனது வாழ்க்கையில் நடந்த பல மோசமான சம்பவங்களை குறித்து ஏழ்மையில் வாடிய வறுமையை குறித்தும் பதிவிட்டு இருக்கிறார்.
அதாவது, ” எங்கள் குடும்பம் ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டபோது யாரும் எங்களுக்கு வந்து உதவவில்லை. சமையல் சிலிண்டர் வாங்க கூட பணமில்லாமல்,
வாட்டிய வறுமை:
விறகுகளை ஆளுக்கு ஒரு மூலையில் சென்று பொறுக்கி வந்து குப்பைகளை பொறுக்கி வந்து எரித்து அதில் வெறும் அரிசியை பொங்கி உப்பை போட்டு சாப்பிட்ட நாட்கள் எல்லாம் எங்கள் நினைவில் இருக்கிறது.
ஒரு நல்ல ஆடை அணிய முடியவில்லை என்ற வருத்தம் எங்களுக்கு இருந்திருக்கிறது. ஒரு நல்ல வீட்டில் இருக்க முடியவில்லை என்ற வருத்தம் எங்களுக்கு இருந்திருக்கிறது.
அப்படி மோசமான சூழ்நிலையில் இருந்த எங்களது குடும்பத்தை என்னுடைய வாழ்க்கை முறையை மீட்டெடுத்து நல்ல சாப்பாடு வீடு உடையன கொடுத்தது சினிமா தான்.
அந்த சினிமாவுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன். முதன்முறையாக ஒரு படத்தில் ஆடை இன்றி நடிக்க ஒப்பந்தமாக இருந்தேன்.
வாழ்வு கொடுத்த சினிமாவிற்கு நிர்வாணமாக நடிப்பேன்:
அப்போது என் மனதில் இருந்ததெல்லாம் ஒன்றுதான் இது சினிமா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது இந்த சினிமாவுக்காக என்னால் என்ன முடியுமோ அதை கொடுக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நினைப்புதான்.
அதை தவிர என் மனதில் எந்த ஒரு குற்ற உணர்ச்சியோ நெடுநலோ வருத்தமோ இல்லவே இல்லை என பதிவு செய்திருக்கிறார் நடிகை ராதிகா ஆப்தே.
மேலும், பணத்திற்காக இதையெல்லாம் செய்கிறாயே என்று என்னிடம் பலரும் கேள்வி எழுப்புகிறார்கள் அவர்களை பார்த்து நான் ஒரே ஒரு கேள்வி எழுப்புகிறேன்.
எங்கள் குடும்பம் ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு கொண்டு இருந்த பொழுது உடல்நிலை சரியில்லாத போது மருந்து வாங்க கூட காசு இல்லாமல் நாங்கள் அவதிப்பட்டு கொண்டிருந்த பொழுது,
நீங்கள் எல்லாம் எங்கே சென்றீர்கள்? யாராவது உதவினீர்களா? ஆனால் தற்போது மட்டும் வரிசையாக வந்து கேள்வி எழுப்புகிறீர்கள்…
இது உங்களுக்கே சரியாகப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ராதிகா ஆப்தே இவருடைய இந்த பேச்சு குறித்து உங்களுடைய கருத்தை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்கள்.
தமிழில் பிரகாஷ்ராஜ் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த தோனி திரைப்படத்தின் மூலமாக இவர் நடிகையாக அறிமுகமானார்.
இந்த படத்தில் சிறந்த துணை நடிகைகாண தேசிய விருதும், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதும் இவருக்கு கொடுத்து கௌரவிக்கப்பட்டது.
அத்துடன் கார்த்தி நடிப்பில் வெளிவந்த ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.
ரஜினி கொடுத்த அடையாளம்:
தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு ரஜினியின் நடிப்பில் வெளிவந்த கபாலி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார்.
அந்த திரைப்படம் தென் இந்திய சினிமாவில் இவரை மிகப்பெரிய நடிகையாக பார்க்கப்பட்டு அவரது நடிப்பு பாராட்டப்பட்டதாக இருந்தது.
அதன் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் பெருவாரியான ஆதரவை பெற்றார் நடிகர் ராதிகா ஆப்தே. இது தவிர அவர் ஹிந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, மலையாளம்,தமிழ் உள்ளிட்ட,
பல மொழி படங்களில் நடித்து இன்று நட்சத்திர நடிகையாக உயர்ந்து மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.