சினிமாவில் சில நடிகைகள் சிறப்பாக நடித்து, பல படங்களில் வெற்றி பெற்றாலும் ஒரு கட்டத்துக்கு பிறகு, கவர்ச்சியாக நடித்தால் மட்டும் தான் அவர்களால் சினிமாவில் நீடித்திருக்க முடிகிறது.
ஆனால் காமெடி நடிகைகள் மட்டும்தான் எப்போதுமே தங்கள் நடிப்பை மட்டுமே நம்பி, ரசிகர்கள் மனதில் வெற்றி நாயகியாக வலம் வர முடிகிறது. அவர்களிடம் எந்த டைரக்டரும், தயாரிப்பாளரும், நடிகரும் கவர்ச்சியாக நடிக்க சொல்லும் சூழ்நிலை வருவதே இல்லை என்பது இதில் மிகவும் கவனிக்கத்தக்கது.
கோவை சரளா
தமிழ் சினிமாவில் ஆச்சி மனோரமாவுக்கு அடுத்தபடியாக நகைச்சுவை நடிப்பில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை கோவை சரளா. இவர் வெள்ளி ரதம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முந்தானை முடிச்சு
தொடர்ந்து வைதேகி காத்திருந்தாள், முந்தானை முடிச்சு, சின்னவீடு, காதல் பரிசு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
காமெடி நடிகர்கள் செந்தில், கவுண்டமணி, ஜனகராஜ், எஸ்எஸ் சந்திரன், வடிவேலு, விவேக் போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்து. கோவை சரளா மிகப்பெரிய அளவில் முன்னணி காமெடி நடிகையாக மாறினார்.
கமல்ஹாசனுக்கு ஜோடியாக…
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், கோவை சரளா பாலு மகேந்திரா இயக்கிய சதி லீலாவதி படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பலரும் வேண்டாம் என கமலிடம் மறுத்த போது, கோவை சரளா தான் அந்த பழனி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக சொல்லியிருக்கிறார் கமல்.
பல படங்களில் நடிகர் செந்திலுக்கும், கவுண்டமணிக்கும் கோவை சரளா ஜோடியாக நடித்திருந்தார். 500க்கும் மேற்பட்ட படங்களில் கோவை சரளா நடித்துள்ளார்.
செம்பி படத்தில்
சமீபத்தில் கோவை சரளா கதையின் நாயகியாக நடித்த செம்பி படம் வெளியானது. டாப் டக்கர் என்ற படத்திலும் கோவை சரளா நடித்திருந்தார். அது மட்டுமின்றி கார்த்தி, ராகவா லாரன்ஸ் போன்ற முன்னணி ஹீரோக்கள் படங்களில் அம்மா கேரக்டரிலும், நகைச்சுவை நடிப்பிலும் கோவை சரளா சிறப்பாக நடித்து வருகிறார்.
58 வயதில் திருமணம் இல்லை
கோவை சரளாவுக்கு தற்போது 58 வயது ஆகிறது. ஆனால் இன்னமும் அவர் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார், அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இன்னும் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.
நான்கு சகோதரிகள்
கோவை சரளாதான் அவரது குடும்பத்தில் மூத்த மகள். அவருக்கு கீழே நான்கு சகோதரிகள் இருக்கின்றனர். நான்கு சகோதரிகள் திருமண செலவு, நான்கு சகோதரிகள் குழந்தைகளுக்கான கல்வி உதவிகளை எல்லாம் கோவை சரளாதான் கவனித்து செய்து வருகிறார்.
முரட்டு சிங்கிளாக…
அதனால் நடிகை கோவை சரளா, தன் குடும்பம் சார்ந்தவர்களுக்கு உதவி செய்வதையே தனக்கு சந்தோஷம் என்று கூறி, இதுவரை திருமணம் செய்து கொள்ளாமலேயே முரட்டு சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.
58 வயசாகியும் இன்னும் கல்யாணம் பண்ணாமல் இருக்க கோவை சரளா இருக்க காரணம், அவரது நான்கு சகோதரிகள், அந்த குடும்பங்களை தன்னுடைய சொந்த பராமரிப்பில் கோவை சரளா கவனித்துக் கொள்கிறார் என்கிற ரகசியம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.