தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராகவும் டாப் ஹீரோ என்ற அந்தஸ்திலும் இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி.
இவர் முதன் முதலில் தனது அண்ணன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற சூப்பர் ஹிட் ஹீரோவாக பார்க்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.
அடையாளத்தை கொடுத்த ” ஜெயம்” திரைப்படம்:
அதன் பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்த ஜெயம் ரவி,
சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், பூலோகம், டிக் டிக் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது 43 வயதாகும் ஜெயம் ரவி தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சைரன்.
இந்த திரைப்படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஓரளவுக்கு வசூல் பெற்றிருந்த இந்த படம் பெரிதாக பேசப்படவில்லை.
ஜெயம் ரவியின் திருமண வாழ்க்கை:
இதனிடையே நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் இவரது மூத்த மகன் ஆரவ் டிக் டிக் டிக் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ஆர்த்தி பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி சமீபத்திய பேட்டி ஒன்றில்,
ஜெயம் ரவி கூட வாழ்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? என வெளிப்படையாக பேசி இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில்,
அரவிந்த் சாமி கேட்ட கேள்வி… ஆடிப்போன ஜெயம்ரவி:
நடிகர் அரவிந்த்சாமி தொகுத்து வழங்கிய நீங்களும் வெல்லலாம் ரூ .1 கோடி நிகழ்ச்சியில் ஜெயம் ரவி மற்றும் மனைவி ஆர்த்தி இருவரும் ஜோடியாக பங்கேற்றனர்.
அரவிந்த்சாமி நடிகர் ஜெயம் ரவியின் மனைவியிடம், ஒரு நடிகருடன் வாழ்வது எவ்வளவு கஷ்டம்?என கேள்வி கேட்டதற்கு இதற்கு… ஜெயம் ரவி ஏன் சார் இப்படி கேக்குறீங்க என்ன செம ஷாக்கிங் ஆனார்.
பின்னர் பேசிய ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, ஒரு நடிகராக புரிந்துக்கொண்டு வாழ்வது மிகவே மிகவும் கஷ்டம்.
அவர் கூட வாழுறது கஷ்டம்… அதிரவைத்த மனைவி:
திடீர் நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது நாங்கள் சமைத்து வைத்ததை பார்த்து இதெல்லாம் என்ன”? என்ன இதெல்லாம் என்று அதிர்ச்சியாக கேட்டுவிட்டு பின்னர் திடீரென நடுராத்திரியில் கிளம்பி சென்று,
ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு வருவார். அதுதான் நிறைய வாங்கிக்கொண்டு வருகிறார். ஒன்னு ரெண்டு ஐஸ்கிரீம் வாங்கி வர மாட்டார். அப்படியே அள்ளிக் கொண்டு வருவார்.
இந்த அளவிற்கு அவர் நிஜ வாழ்க்கையில் மிகவும் குழந்தை தனமாக நடந்து கொள்வார் என ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அந்த பேட்டியில் கலகலப்பாக பேசினார்.