தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் சினிமா பின்புறத்தை கொண்டு திரைப்படத்தில் நடிக்க வந்த வாரிசு.
இவரது அப்பா ஒரு மிகச்சிறந்த இயக்குனர் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அது போலவே இவரது அம்மா சோபாவும் மிகச் சிறந்த பின்னணி பாடகியாக விளங்குகிறார்.
இந்நிலையில் தற்போது தீவிர அரசியலில் களம் இறங்கப் போகும் தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளி வர இருக்கும் கோர்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தளபதி விஜய்..
2026-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் முழு வீச்சில் தமிழக வெற்றி கழகம் மூலம் களம் இறங்கும் நிலையில் கோட் படத்தை அடுத்து தளபதி 69 படத்தோடு சினிமா உலகிற்கு பை பை சொல்லப் போகிறார் தளபதி.
இதனை அடுத்து தனது கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் பரபரப்பாக செயல்பட்டு வருவதோடு நாடாளுமன்றத் தேர்தலை எதிர் கொள்ளாமல் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவை அளித்து காய்களை நகர்த்தி வருகிறார்.
இந்நிலையில் தளபதி விஜயின் அரசியல் பிரவேசத்தை பல்வேறு விதமாக விமர்சித்து வரக்கூடியவர்கள். இவர் அரசியலில் வெற்றி பெறுவாரா? இல்லையா? என்பது பற்றியும் பேசி வருகிறார்கள்.
இத்தகைய சூடான களத்தில் தளபதி விஜய் எதிர்கால முதல்வராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று சிலர் கருத்து கணிப்புகளை சொல்லி வரக்கூடிய வேளையில் இணையத்தில் தற்போது அவரது மாமனார் மற்றும் மாமியாரின் புகைப்படங்கள் வைரலாகி உள்ளது.
நாளைய முதல்வரின் மாமனார் மாமியார்..
அந்த வகையில் நாளைய தமிழக முதல்வரின் மாமனார், மாமியார் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்து இருக்கிறார்கள். மேலும் அண்ணி சங்கீதாவின் அம்மா, அப்பாவின் புகைப்படங்கள் அவர்கள் திருமணத்தின் போது எடுக்கப்பட்டவை தற்போது இணையத்தில் வெளி வந்துள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்து வரும் தளபதியின் ரசிகர்கள் அனைவரும் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை கொடுத்து இருப்பதோடு தளபதியின் மாமியார் பார்ப்பதற்கு சங்கீதாவைப் போல இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
புகைப்படங்களை பாருங்கள்..
இது வரை என்ன தான் தளபதி பற்றி பல விஷயங்களை தெரிந்து இருந்தாலும் தளபதி விஜய்க்கு 1999-ஆம் ஆண்டு சங்கீதாவுடன் திருமணம் நடை பெற்ற சூழலில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இது வரை சங்கீதாவின் பெற்றோர் பற்றி அறிய வாய்ப்பே இல்லை.
அந்த வகையில் தற்போது விஜயின் மனைவி சங்கீதாவின் தாய், தந்தை அதாவது விஜயின் மாமனார், மாமியாரின் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தளபதியின் திருமணத்தின் போது எடுக்கப்பட்டுள்ளது.
அந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது சங்கீதாவின் அம்மா அப்பாவை பார்த்து பரவசம் ஆகலாம். அத்தோடு உங்களுக்கு ஏற்படும் உணர்வுகளைப் பற்றி உங்கள் நண்பர்களோடு பட்டிமன்றம் போட்டு பேசலாம்.