தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகையாக கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் சாக்ஷி அகர்வால். இவர் அண்ணா யுனிவர்சிட்டியில் ஐடி துறையில் நன்கு படித்த பட்டம் பெற்று,
தங்கப்பதக்கத்தை வென்று அதன் பிறகு ஐடி கம்பெனி ஒன்றில் மாத சம்பளமாக ரூ. 2.5லட்சம் வாங்கிக்கொண்டிருந்தார்.
மாடல் அழகியாக சாக்ஷி அகர்வால்:
அந்த சமயத்தில் சினிமா மீது இருந்த ஆர்வத்தால் திரைப்படத்துறையில் நுழைய வேண்டும் என முயற்சித்து தனது பெற்றோர் சம்பந்தத்துடன் திரைப்படத்துறையில் நுழைந்தார்.
குடும்பத்தை சேர்ந்த அனைவரும் நன்கு படித்து ஒரு நல்ல வேளையிலும் தொடர்ந்து பல லட்சம் மதிப்பு கொண்ட பிசினஸ் செய்தும் வருகிறார்கள்.
இப்படியான நேரத்தில் சாக்ஷி மட்டும் திசைமாறி சினிமா பக்கம் வந்துவிட்டார். இவர் முதன்முதலில் பெங்களூரில் மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி அதன்மூலம் சினிமா வாய்ப்பு தேடித் துவங்கினார்.
தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வரும் இவர் சினிமா நடிகையாக ஆவதற்கு முன்னர் பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
ராஜா ராணி படத்தில் அறிமுகம்:
குறிப்பாக விளம்பரங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே கடந்த 2013 ஆம் ஆண்டு பிரபல இயக்குனரான அட்லீயின் இயக்கத்தில் ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.
அந்த ரோல் அவ்வளவாக பேசும் படியாக இல்லை என்றாலும் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது என்றே சொல்லலாம்.
அந்த படத்தை தொடர்ந்து காலா, விசுவாசம், சிண்ட்ரல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் ஒரு நடிகையாக ஒரு படத்தில் நடிக்கும் போது தாங்கள் எவ்வளவு இன்னல்களை அனுபவிக்க வேண்டி இருக்கிறது என்பதை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அதாவது, நான் கேஸ்ட் 2 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது.
அப்போது அங்கு மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் குளிர் இருந்தது. அந்த சமயத்தில் குட்டி ஸ்கர்ட் மற்றும் குட்டி சர்ட் மட்டும் அணிந்து கொண்டு தண்ணீரில் இறங்கி என்னுடைய கணவரை தேட வேண்டும் .
மாதவிடாய் வலியோடு அதை செய்ய சொன்னாங்க:
அந்த காட்சி அந்த காட்சியின் போது எனக்கு பீரியட்ஸ் வேறு இருந்தது. பயங்கரமான குளிர் வேறு அந்த சமயத்தில் பீரியட்ஸ் வலியோடு நான் அந்த தண்ணீரில் இறங்கி அந்த நடித்துக் கொடுத்து,
அதுமட்டுமில்லாமல் அந்த படத்திற்காக எனக்கு குறைந்த சம்பளம் தான் பேசப்பட்டிருந்தது. நான் ஏன் அவ்வாறு சிரமப்பட்ட நடிக்க வேண்டும் என நீங்கள் கேட்கலாம்.
என்னை நம்பி தயாரிப்பாளர் இதை இயக்குனர்கள் இந்த கதாபாத்திரத்தை கொடுக்கும் போது அவர்களுக்கு நான் அந்த வேலையை சரியாக செய்து முடிக்க வேண்டும் என்ற ஒரு வெறியன் இருந்தது.
எனக்கு சினிமாவில் அதிக ஆர்வம் இருக்கு. சினிமா மீது ஒரு பற்று இருப்பதால் தான் இதுபோன்று என்னால் நடிக்க முடிகிறது என வெளிப்படையாக பேசினார்.