நகுல் எங்கிட்ட இதுவரைக்கு பேசமா இருக்க காரணம் இது தான்.. ராஜகுமாரன் வேதனை..!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரும் நடிகருமான ராஜகுமாரன் நடிகை தேவயானியை கடந்த 2001 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர் இயக்கிய பல படங்களில் தேவயானி நடிக்க வைத்தார். முதன் முதலில் அவர் சூரியவம்சம் திரைப்படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியபோது தேவயானியின் மீது அவருக்கு காதல் மலர்ந்தது.

தேவயானி மீது மலர்ந்த காதல்:

அதன் பிறகு தேவயானி மீது ஒரு நல்ல ஈர்ப்பு இருக்கவே தொடர்ந்து தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் தேவயானியை நடிக்க வைத்தார்.

இதனிடையே தேவயானிக்கும் ராஜகுமாரனின் நல்ல குணமும் அவரது மனமும் பிடித்து போக அவரும் அவர் மீது காதலில் விழ ஆரம்பித்தார்.

இப்படி அவர்கள் காதல் சென்று கொண்டிருக்க ஒருநாள் திடீரென அவர்கள் வீட்டிற்கு தெரியவந்தது.

ஆனால் தேவியானின் பெற்றோர்கள் இந்த திருமணத்திற்கும் இந்த காதலுக்கும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அதையும் மீறி தேவயானி தனது காதலனோடு ராஜகுமாரனை கரம் பிடிக்க வீட்டின் சுவர் ஏறி குதித்து ஓடி வந்து திருமணம் செய்து கொண்டதாக அன்றைய செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

சுவர் ஏறி குதித்து ரகசிய திருமணம் செய்த தேவயானி:

திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில் கடந்த 2001 ஆம் ஆண்டு தேவயானி மற்றும் ராஜகுமாரனுக்கு ரகசிய திருமணம் நடைபெற்றது.

படப்பிடிப்பின் போது இருவரும் காதலித்து வந்தாக கூறப்பட்ட நிலையில் இவர்களது திருமணம் அவ்வளவு ரகசியமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ராஜகுமாரன் சொந்த ஊர் பக்கம் சென்று அவர்கள் குடி பெயர்ந்தார்கள்.

அந்தியூர் என்ற கிராமத்தில் மிக பிரம்மாண்டமான பண்ணை வீடு ஒன்றைக் கட்டி அங்கு மிகவும் இயற்கை சார்ந்த முறையில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். சமீபத்தில் கூட அவர்களோடு குடும்பமாக சேர்ந்து பேட்டி கொடுத்திருந்தது குறிப்பிடுத்தக்கது.

23 வருடங்களாக பேசாத நகுல்:

இதனிடையே தேவயானி திருமணம் செய்து கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு மேல் இன்னும் தேவயானியின் தம்பி நகுல் தன்னிடம் பேசுவதே கிடையாது என ராஜ்குமார் பேட்டி ஒன்றில் மிகுந்த வருத்தத்தோடு கூறி இருக்கிறார்.

அதற்கான காரணம் ரஜினிகாந்தின் மகள்கள் தானாம். ஆம், லதா ரஜினிகாந்த் சொந்தமாக பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். அந்த பள்ளியில் தான் நகுல் படித்திருந்தார்.

அதே பள்ளியில் ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவரும் படித்து வந்தார்கள். நகுலுக்கு அவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்தார்கள்.

ரஜினி மகள்களால் வந்த பகை:

நான் தேவயானியை காதலித்து திருமணம் செய்து கொண்ட போது அதை சௌந்தர்யாவும் ஐஸ்வர்யாவும் நகுலிடம் கூறி கிண்டல் அடித்திருக்கிறார்கள்.

அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிய நகுல் அதன் பிறகு என்னுடன் பேசவே கூடாது என மனதில் தீர்க்கமான முடிவெடுத்துவிட்டார் போல அதனால் தான் என்னிடம் இத்தனை ஆண்டுகள் வரை பேசவே இல்லை எனக் கூறியிருக்கிறார்.

சில வருடங்கள் கழித்து என் மாமியார் மற்றும் குடும்பத்தினர் என்னை ஏற்றுக் கொண்டாலும் இன்றுவரை நகுல் என்னை ஏற்றுக் கொள்ளவே இல்லை என பேட்டி ஒன்றில் மிகுந்த வருத்தத்தோடு பேசியுள்ளார் ராஜகுமாரன்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam