கில்லி ரீ-ரிலீஸ் கொண்டாட்டம்.. நடிகர் தாமு வேதனை..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக தற்போது மிகப்பெரிய அந்தஸ்தில் இருப்பவர் நடிகர் விஜய். இவர் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகராக அதிக சம்பளம் வாங்கும் நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவரை ரசிகர்கள் தளபதி என அன்போடு அழைக்கிறார்கள். இவருக்கு பல கோடி ரசிகர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள்.

கில்லி திரைப்படம்;

விஜய் திரைப்படங்களை தாண்டி தற்போது அரசியலில் மும்முரமாக இறங்கி முழு வீச்சில் இறங்கிவிட்டார். இதனிடையே தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் நடித்த வருகிறார்.

இந்நிலையில் விஜய்யின் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் ஹிட் அடித்த திரைப்படமான கில்லி திரைப்படம் 23 வருடங்களுக்கு பிறகு தற்போது ரிலீசில் செய்யப்பட்டு தியேட்டர்களில் பட்டையை கிளப்பி வருகிறது.

இப்படத்திற்கு ரசிகர்களின் அமோக வரவேற்பு பெற்று கிட்டத்தட்ட படம் வெளியான போது எவ்வளவு கொண்டாடினார்களோ அதற்கு ஈடாக தற்போதும் கொண்டாட்டம் திரையரங்குகளில் பார்க்க முடிகிறது.

இப்படத்தில் விஜய் திரிஷா இருவரும் ஜோடியாக நடித்திருந்தார்கள். அதிரடி ஆக்சன் காட்சியில் வெளிவந்த இப்படத்தில் வில்லனாக பிரகாஷ்ராஜ் மிரட்டி எடுத்திருப்பார்.

கில்லி ரீ-ரிலீஸ்:

இப்படம் மிகப்பெரிய மசாலா திரைப்படமாக அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக இருந்தது. குறிப்பாக காதல், செண்டிமெண்ட், ரொமான்ஸ், காமெடி, ஸ்போர்ட்ஸ் என பல விதங்களில் இந்த படம் பட்டையை கிளப்பி வருகிறது.

படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 20 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இப்படத்தில் காமெடி ரோலில் ஓட்டேரி நரி என்ற ரோலில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றவர் தான் நடிகர் தாமு.

இப்படத்தில் அவரது ரோல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு மிகப்பெரிய அளவில் அவரை பிரபலம் ஆக்கியது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரீ ரிலீஸ் பற்றியும் படத்தை ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடுவது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த தாமு மிகவும் வருத்தத்தோடு பேசி இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்து சிந்திக்க வைத்துள்ளது.

தாமு வேதனை:

ஆம் அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது. 20 வருடத்திற்கு முன் வெளியான இந்த படத்தை இப்பொழுது இந்த அளவுக்கு கொண்டாடுகிறீர்கள்.

ஆனால் அதே 20 வருடத்திற்கு முன்னர் நடப்பட்ட மரங்கள் இன்று நமக்கு மிகப்பெரிய மரமாக வந்து நமக்கு நல்ல நிழலை தருகின்றன.

அந்த மரங்களை நட்டவர்களை பற்றி என்றைக்காவது நீங்கள் யோசித்ததுண்டா? அவர்களுக்கு எப்போதாவது நன்றி சொல்லி இருக்கிறீர்களா? என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

இவர் நடிகர் அப்துல் கலாமின் மிகச்சிறந்த நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்துல் கலாம் அவர்களின் கருத்துக்களையும் அவரது கனவுகளையும் ஊர் ஊராக சென்று மக்களுக்கு நனவாக்கி வருகிறார்.

தாமு அப்துல் கலாமை பற்றி நினைவுபடுத்தி இவ்வாறு பேசியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்து சிந்திக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam