விஜய் அரசியல் வருகை.. தெனாவெட்டாக பதில் கொடுத்த நடிகை ஜோதிகா..!

நடிகை ஜோதிகாவுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்த படம் குஷி. எஸ்ஜே சூர்யா இயக்கிய இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். இந்த படத்தில் தான் ஜோதிகாவின் நடிப்பும், நடனக் காட்சிகளும் பெரிய அளவில் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றது.

ஜோதிகா

இதைத் தொடர்ந்து விஜயுடன் திருமலை உள்ளிட்ட சில படங்களில் ஜோதிகா நடித்திருந்தார். அதன்பிறகு அஜீத், விக்ரம், கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருந்த ஜோதிகா, ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது என்று நடிகர் சிவக்குமாரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு, திருமணத்துக்கு பிறகு சில ஆண்டுகள் மட்டுமே சினிமாவில் நடிக்காமல் இருந்தார் ஜோதிகா.

சிவக்குமார் தடை

அதன் பிறகு சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டினார். ஆனால் தொடர்ந்து சிவக்குமார் அதற்கு தடை விதித்ததால், சென்னையில் இருந்தால் இனி சினிமா நடிக்கவே முடியாது என முடிவு செய்த அவர், தனது கணவர் சூர்யாவை அழைத்துக் கொண்டு, தனது பிள்ளைகளுடன் மும்பையில் குடியேறிவிட்டார்.

இப்போது இந்தி படங்களில், ஜோதிகா பிஸியாக நடித்து வருகிறார். அதேபோல் தமிழிலும் சில படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

மருத்துவமனைக்கு கொடுங்கள்

நடிகை ஜோதிகா அவ்வப்போது சமூக கருத்துக்களை மேடைகளில் பேசி வருகிறார். கோவிலுக்கு கொடுக்கும் காசை மருத்துவமனைக்கு கொடுங்கள் என்று ஒரு முறை அவர் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கவில்லை

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், ஜோதிகா வாக்களிக்கவில்லை. சமூகப் பொறுப்புணர்வு குறித்து, பொது இடங்களில் பேசி வரும் ஜோதிகா தேர்தலில் ஏன் வாக்களிக்கவில்லை, தனது ஜனநாயக கடமை நிறைவேற்ற ஏன் முன்வரவில்லை என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.

பிரஸ்மீட்டில்…

இந்நிலையில் நடிகை ஜோதிகா அடுத்து நடிக்க உள்ள ஸ்ரீகாந்த் என்ற படத்தின் பிரஸ்மீட் இன்று நடந்தது.

அதில் கலந்துக்கொண்ட நடிகை ஜோதிகாவுடன் செய்தியாளர்கள், ஏன் நீங்கள் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போட வரவில்லை என்று கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஜோதிகா, நான் வருஷா வருஷம் ஓட்டுப் போடுகிறேன். சில நேரங்களில் வேலையாக, வெளியூரில் இருப்பதால் வர முடியாத சூழ்நிலை ஏற்படும்.

எனக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது

உடல்நிலை சரியாக இல்லாமல் போகும். எல்லா நேரமும் வீட்டில் இருக்க முடியாது. எனக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது, அதற்கும் நான் மதிப்பு கொடுத்து வாழ வேண்டும் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அரசியலுக்கு வர எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா என்று கேட்டதற்கு, என்னை யாரும் கேட்கவில்லை. இப்போது பசங்க படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதையும் கேரியரையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை என்றும் கூறினார்.

விஜய் அரசியல் வருகை

தொடர்ந்து விஜய் அரசியல் வருகை குறித்து கேட்டதற்கு, அவுட் ஆப் தி டாபிக் என்று பதில் அளிக்க மறுத்து விட்டார்.

அவுட் ஆப் தி டாபிக்

தன்னுடன் நடித்த சக நடிகர் என்ற முறையில், ஒரு மரியாதை நிமித்தமாக கூட, அவர் அரசியலுக்கு வந்தது நல்ல விஷயம்தான். மக்களுக்கு நன்மை செய்யும் எண்ணத்தில் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்றால், வரட்டும். வாழ்த்துகள் என்று மிக சாதாரணமாக கவுரமான வார்த்தைகளில் சொல்லி இருக்கலாம்.

ஆனால், அவுட் ஆப் டாபிக் என்று அவர் வெளிப்படையாக கூறியிருப்பது ஜோதிகாவுக்கும், விஜய் மீது பயங்கர கடுப்பு இருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.

குடும்பத்துக்கே கடுப்பு

ஏனெனில் விஜய், சூர்யா இருவருமே சமகாலத்தில் சினிமாவில் அறிமுகமான போதும், விஜய் அளவுக்கு சூர்யா பெரிய அளவில் முன்னேறவில்லை. பெரிய அளவில் தமிழ்நாட்டில் சிறந்த நடிகராக ரசிகர்கள் வரவேற்பு பெறவில்லை என்று சிவக்குமார் குடும்பத்திற்கு ஏற்கனவே விஜய் மீது கடுப்பு உள்ளது.

தெனாவெட்டான பதில்

அந்த கடுப்பின் வெளிப்பாடாக தான் ஜோதிகாவும், விஜய் குறித்த கேள்விக்கு அவுட் ஆப் தி டாபிக் என்ற விமர்சனத்துக்குரிய ஒரு பதிலை தந்திருக்கிறார்.
விஜய் அரசியல் வருகைக்கு இப்படி ஒரு தெனாவெட்டான பதில் கொடுத்த நடிகை ஜோதிகா மீது, விஜய் ரசிகர்கள் ஏகப்பட்ட கோபத்தில் உள்ளனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam