தினமும் காலை முதல் இரவு வரை தொடர்ந்து ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு, இரவு நேரம் தான் முழு ஓய்வைத் தருகிறது அந்த நேரத்தில் தான், அவர்கள் தூக்கம் என்ற ஒரு முழுமையான ஓய்வை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பெறுகின்றனர்.
மூன்று நாட்கள் தூங்கா விட்டால்…
மனிதர்கள் உணவு சாப்பிடாமல் பல நாட்கள் உயிர் வாழ முடியும். ஆனால் மனிதர்களால் சில தினங்கள் கூட தூங்காமல் இருக்க முடியாது. அதாவது தொடர்ந்து மூன்று நாட்கள் இரவுகளில், மனிதர்கள் தொடர்ந்து தூங்கவில்லை என்றால் அவர்கள் தன்னிச்சையாகவே பேசத் தொடங்கி விடுவார்கள் என்று மனநல ஆலோசர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் மனிதனுடைய எண்ணங்களின் வேகம், மனதின் அழுத்தம், சிந்தனையில் உள்ள குழப்பம் அந்த அளவுக்கு மனிதர்களை கட்டுப்பாடு இன்றி மாற்ற வாய்ப்பிருக்கின்றது.
அதே நேரத்தில் மனிதர்கள் தூங்குவதன் மூலம், தன் மனதில் உள்ள குழப்பங்களை, அழுத்தங்களை, வாழ்க்கை தரும் பிரச்சினைகளை தூக்கம் வாயிலாக ஒரு தற்காலிக தீர்வை பெறுகின்றனர்.
ஆரோக்கியம் பெறவே தூக்கம்
தூக்கம் அவர்களை ஊக்கப்படுத்தி ஆறுதல் படுத்துகிறது. அதனால் இரவு நேரங்களை தூங்குவதற்கு மிக முக்கியமாக மனிதர்கள் பயன்படுத்தி உடல் ரீதியாக மனரீதியாக ஆரோக்கியத்தை பெறுகின்றனர்.
ஆனால் அதே நேரத்தில், கலைத்துறையில் இருப்பவர்கள் சினிமாவில் இருப்பவர்கள் அந்த இரவு நேரங்களில் தங்களது சிந்தனைகளை ஒருமுகப்படுத்தவும், நல்ல முறையில் தங்களது எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுக்கவும், தங்களது அடுத்தடுத்த செயல்பாடுகளுக்கான திட்டங்களை உருவாக்கவும் பயன்படுத்துகின்றனர் என்பது பலருக்கும் தெரியாது.
இரவு நேரங்களை வீணடிப்பது
பொதுவாக இரவு நேரங்களை பொறுத்தவரை, பெரும்பாலானவர்கள் களியாட்டங்களுக்கு தான் அதை பயன்படுத்துகின்றனர். அதாவது இரவு நேரங்களில் சினிமாவுக்கு செல்வது, சீட்டாட்ட கிளப்புகளுக்கு செல்வது, இரவு நேரங்களில் நண்பர்களுடன் பைக்கில் நீண்ட தூரம் பயணங்கள் செல்வது, இரவு நேரங்களில், நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது,என தொடர்ந்து இரவு நேரங்களை ஒரு உல்லாச நேரமாக பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இரவு நேரங்கள் என்பது ஒரு சக்தி ஊக்கியாக, அந்த நேரத்தை தனது எதிர்காலத்துக்காக பயன்படுத்திக் கொள்வது முக்கியம். நல்ல திட்டமிடல் அதற்கு நல்ல உபயோகமான திட்டங்களை உருவாக்குவது என பலரும் அந்த நேரத்தை பயனுள்ள வகையில் உருவாக்கிக் கொள்கின்றனர். திரைத்துறையில் அப்படிப்பட்ட பல படைப்பாளிகள் இருக்கவே செய்கின்றனர்.
இரவு நேர பார்ட்டிகள்
நடிகர் நடிகைகள் என்றாலே படப்பிடிப்பு முடிந்ததும் இரவு நேரங்களில் பாட்டி பப்பி என சுற்றுவார்கள் என்று தான் தகவல்கள் தெரிந்திருக்கும். ஆனால் அதையும் தாண்டி இரவு நேரங்களில் தங்களுடைய தொழில் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவது, படங்களின் கதை கேட்பது, பாடல் எழுதுவது, இசையமைப்பது மற்றும் அதிக எமோஷன்கள் கொடுக்கக்கூடிய படத்தின் காட்சிகளை படமாக்குவது, கதை எழுதுவது, நடிப்பு திறமையை மேம்படுத்துவதற்கு உண்டான பயிற்சிகள் ஆகியவற்றை முன்னணியின் நடிகர் நடிகைகள், இரவு நேரங்களில் தான் செய்கிறார்கள்.
அமைதியான நேரம்
ஏன் எனில் இரவு நேரம் என்பது ஒரு அமைதியான நேரம். பெரிய இரைச்சல் இல்லாமல் ஊர் அடங்கி இருக்கும் நேரம் என்பதால், அந்த நேரத்தை தங்களுடைய சிந்தனைகளை நிஜம் செய்வதற்கு உழைக்கும் நடிகர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பது பலரும் அறியாத உண்மை.