தமிழ் சினிமாவில் அசுரவேகத்தில் வளர்ச்சி அடைந்த நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் திரைப்பட பின்னணி குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை.
முழுக்க முழுக்க தனது திறமையாலும் முயற்சியாலும் முன்னேறி வந்தவர். விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
சின்னத்திரை டூ சினிமா:
கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை மக்களுக்கு வெளிக்காட்டி பின்னர் தன் திறமையின் மூலமாக சினிமா துறையில் நுழைந்தவர் தான் சிவகார்த்திகேயன்.
இவருக்கும் சினிமாத்துறைக்கும் எட்டாத தூரம் தான். ஆனாலும் தனது கனவு, இலட்சியத்தை விடவே இல்லை சிவகார்த்திகேயன்.
முயற்சியை தளரவிடாமல் தொடர்ந்து தனது முயற்சியின் மூலம் தன் கனவை எட்டிப் பிடித்தார் சிவகார்த்திகேயன்.
முதன் முதலாக இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தனது வாழ்க்கையை துவங்கினார்.
முதல் படத்திலேயே அவர் நல்ல நடிப்பை ஸ்கோர் செய்ததால் ஒட்டுமொத்த தமிழ் சினிமா கவனமும் அவர் பக்கம் திரும்பியது.
அசுர வளர்ச்சி அடைந்த சிவகார்த்திகேயன்:
தொடர்ந்து தனுஷின் 3 திரைப்படத்தில் அவரது தோழனாக நடித்திருந்தார். மீண்டும் மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் , மான் கராத்தே,
காக்கி சட்டை, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன் ,சீமராஜா, மிஸ்டர் லோக்கல் ,நம்ம வீட்டுப் பிள்ளை, மாவீரன் இப்படி தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்தார்.
வெகு சீக்கிரத்திலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்தார். மிகப்பெரிய நட்சத்திர குடும்பத்தை சேர்ந்த நடிகர்களாலே சிவகார்த்திகேயன் வளர்ச்சியை ஒன்னும் செய்ய முடியாது என விழிப்புதுங்கி போய்விட்டனர்.
அந்த அளவுக்கு சிவகார்த்திகேயன் மிக குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி அடைந்து விட்டார்.இதன் மூலம் அவருக்கு பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது.
மிகக் குறுகிய கால கட்டத்தில் நட்சத்திர நடிகராக அசுர வளர்ச்சி அடைந்த சிவகார்த்திகேயனை மிகப்பெரிய நட்சத்திர குடும்பத்தின் பின்னணியை சேர்ந்த நடிகர்களாலே ஒன்றும் செய்ய முடியவில்லை.
கங்கணம் கட்டிய சினிமா குடும்பம்:
அவர்களே சிவகார்திகேயனின் வளர்ச்சியை பார்த்து விழிபிதுங்கி நின்றார்கள். இதனால் சிவகார்த்திகேயன் வார்ச்சியை எப்படியாவது அழிக்க வேண்டும் என ஒரு சினிமா குடும்பம் திட்டமிட்டு அதற்கான சதி வேலைகளை செய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் மூன்று நடிகர்கள் சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கை அழிக்க துடித்திருக்கிறார்கள். அதை பற்றி பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு சமீபத்தை பேசி ஒன்றில் கூறியுள்ளது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
அதாவது, சிவகார்த்திகேயன் வளர்ச்சியை அழிக்க நினைத்த அந்த குடும்பம் கிட்டத்தட்ட நான்கு அவரை ஒப்பந்தம் செய்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் அந்த நான்கு படங்களுக்கும் ஒரு சிறிய தொகையை மட்டுமே அட்வான்ஸாக கொடுத்தார்கள்.
சிவகார்த்திகேயனை அழிக்க துடித்த 3 நடிகர்கள்:
அட்வான்ஸ் கொடுத்துவிட்டு ஒப்பந்தம் செய்துவிட்டு படத்தை எடுக்காமல் இழுத்தடித்திருக்கிறார்கள் இதனால் சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்த படங்களின் வாய்ப்புகள் தள்ளிப்போனது.
ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயன் என்ன செய்வது என்று தெரியாமல் அதை தயாரிப்பு நிறுவனத்திடம் சென்று தயவு செய்து படத்தை எடுங்கள் என கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு அவர்களோ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க தாமதமா எடுக்கலாம் என கூறி இருக்கிறார்கள்.
இதனால் கடுப்பான சிவகார்த்திகேயன் என்னை வேறொரு தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அழைக்கிறார்கள் நான் நடிக்க வேண்டும் தயவு செய்து படத்தை எடுங்கள் என கேட்டுள்ளார்.
உடனே அந்த குடும்பம் நீ அங்கு சென்று விட்டு வா என கூறி சிக்கலான தேதியை கொடுத்தார்களாம்.
இதனால் சிவகார்த்திகேயனுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் ஒரு கட்டத்தில் அந்த சிக்கலில் இருந்து வெளியே வந்துள்ளார்.
தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த மீண்டும் விட்ட இடத்தை பிடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இப்படி தனது சொந்த முயற்சியில் வளர்ந்தாலும் அவரை அழிக்க ஒரு மிகப்பெரிய கூட்டமே பின்னணியில் இருந்து வேலை பார்த்துக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது .
இதன் மூலம் பாலிவுட்டில் மட்டும் இல்ல தமிழ் சினிமாவிலும் நெபோட்டிசம் டார்ச்சர் இருப்பது நம்மால் அறிய முடிகிறது.