சொந்த மகனால் நடுத்தெருவுக்கு வந்த SPB’யின் கண்ணீர் கதை..!

பன்முக திறமையை கொண்ட எஸ்பிபி என்ற மூன்றெழுத்து சொந்தக்காரரான எஸ்பி பாலு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பல திரைப்படங்களில் பின்னணி பாடகராக பணியாற்றி இருக்கிறார்.

திரை உலகில் பாடல் பாடுவதோடு நின்று விடாமல் இசையமைப்பாளராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்த எஸ்பிபி இது வரை சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பதினாறு மொழிகளில் பாடி பாடும் நிலா என்று அழைக்கப்படுகிறார்.

பாடகர் SPB..

பாடகர் எஸ்பிபி தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் ஆறு சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருதுகளையும், ஆந்திர மாநிலத்தின் 25 நந்தி விருதுகளையும், தமிழ்நாடு அரசு விருதுகளையும், ஃபிலிம் பேர் விருதுகளையும் வென்றவர்.

தெலுங்கு குடும்பத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது சகோதரி எஸ்.பி சைலஜாவும் மிகச்சிறந்த பின்னணி பாடகியாக திகழ்ந்தார்.

இவரது மகன் எஸ்.பி.பி சரண் பிரபலமான பாடகராகவும், நடிகராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்கிறார். இவர் திரைப்படங்களை எடுப்பதாக சொல்லி தயாரித்த திரைப்படங்கள் தோல்வியில் முடிந்ததை அடுத்து மிகப்பெரிய நட்டத்தை ஏற்படுத்தினார்.

அது மட்டுமல்லாமல் தீய சகவாசங்களின் காரணத்தால் மது பழக்க வழக்கத்திற்கு ஆளாகி குடி போதைக்கு அடிமையான இவர் வெங்கட் பிரபு மற்றும் அவரது சகோதரர்களோடு இணைந்து இரவு பார்ட்டி என்று பல்வேறு கேளிக்கைகளில் ஈடுபட்டு தனது தந்தை சம்பாதித்த பெரும் பணத்தை வீணாக செலவு செய்தார்.

மகனால் நடுத்தெருவிற்கு வந்த கதை..

என்ன இருந்தாலும் மகன் என்பதை விட்டுக் கொடுக்காமல் பல்வேறு வகைகளில் பக்கத்துணையாக இருந்த எஸ்பிபி தனது மகனின் நடவடிக்கைகளை கண்டித்தும் எதற்குமே மசியாத மகனால் தட்டு தடுமாறி நடுத்தெருவிற்கு வரக்கூடிய நிலைக்கு ஆளானார்.

அது மட்டுமல்லாமல் இரவு விருந்து ஒன்றில் நடிகை சோனாவிடம் நடந்து கொண்ட கேவலமான செயல்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான எஸ்பிபி-யின் குடும்பம் அந்த சிக்கலில் இருந்து வெளி வர நடிகை சோனாவுக்கு ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்ததாக இன்று வரை பேச்சுக்கள் உள்ளது.

எனினும் இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட தனது மகன் இல்லற வாழ்க்கையிலும் சரியாக இல்லாததை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறிய இவர் மகனின் விருப்பத்திற்கு ஏற்ப பட தயாரிப்பு, நடிப்பு என பலவற்றிற்கும் துணையாக இருந்தும் தீய பழக்க வழக்கத்தால் தனது வாழ்க்கையை சீரழித்துக் கொண்ட மகனை எண்ணி வருந்தினார்.

அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..

இதனை அடுத்து கடுமையான உழைப்பின் மூலம் எஸ்பிபி சேர்த்து வைத்த பணத்தினை சிறுக சிறுக கரைத்த எஸ்பிபி சரணின் நடவடிக்கைகள் பற்றி ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டு உறைந்து விட்டார்கள்.

அப்பாவை போலவே திறமை இருந்தாலும் அவரைப்போல பணம் சம்பாதிக்க தெரியாமல் வீணான பழக்க வழக்கங்களால் வீணாய் போயிருக்கும் எஸ்பிபி சரண் தனது அப்பாவின் மனம் குளிரும்படி நடக்காமல் கடைசி நாட்களிலும் கஷ்டப்படுத்திய விஷயம் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு எஸ்பிபி -யின் வாழ்க்கையில் அவரது மகன் இப்படியெல்லாம் நடந்து கொண்டாரா? என்ற ஷாக்கை ஏற்படுத்தி உள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam