என்னதான் காலம் மாறினாலும், வாழ்க்கையில் முன்னேற்றங்கள் பெருகினாலும், டெக்னாலஜியில் மனிதன் பெரிய அளவில் சாதித்து காட்டினாலும், இன்னும் பெண்களின் மனதில் இருக்கும் சில விஷயங்களை மாற்றவே முடியாது என்பதுதான் வாழ்க்கையின் நிதர்சனமாக இருக்கிறது.
அது கிராமப்புறங்களில் இருக்கும் பெண்களாக இருந்தாலும், நகரங்களில் வாழும் மிகப்பெரிய அளவில் படித்த, நவநாகரிக மங்கைகளாக இருந்தாலும் பெண்கள் எப்போதுமே அவர்களுக்குண்டான சில குணாதிசயங்களை மாற்றிக் கொள்வதே இல்லை என்பதுதான்.
மறைமுக மோதல்கள்
இதை மையப்படுத்திதான் டிவி சீரியல்கள் உருவாகின்றன. எப்போதுமே பெண்களுக்குள் இருக்க மறைமுக மோதல்களை, அவர்களுக்கு இடையே உள்ள பொறாமை உணர்வுகளை, அவர்களுக்கிடையே உள்ள மோசமான ஈகோ பிரச்னைகளை மையப்படுத்தி தான் சீரியல் கதைகளை எடுத்து, இயக்குனர்கள் வெற்றி பெற்று வருகின்றனர்.
100 ஆண்கள் வேலை செய்கிற இடத்தில், அவர்களால் ஒற்றுமையாக சந்தோஷமாக இருக்க முடிகிறது. ஆனால் இரண்டு பெண்கள் இருக்கிற இடத்தில் அவர்களால் ஒற்றுமையாக இருக்க முடிவதில்லை என்பதே கசப்பான உண்மை.
உறவு கூட தோற்றுப் போகும்
அதே நேரத்தில் அவர்கள் அக்கா தங்கையாக இருந்தாலும் கூட அவர்கள் பெண்களாக, அவர்களுக்குள் இருக்கிற வேறுபாடு தான் முதலில் ஜெயிக்கிறதே தவிர, அவர்களுடைய உறவில் உள்ள சகோதர பாசம் கூட தோற்றுப் போய் விடுகிறது என்பதுதான் உண்மை.
அதிலும் சினிமா நடிகைகளாக இருப்பவர்கள், ஒரே படத்தில் இணைந்து நடித்தாலும், அல்லது பல படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்திருந்தாலும் அந்த நடிகைகள் மத்தியில் அந்த வித்தியாசம் உணர்வும், வேறுபட்ட அந்த மனநிலையும் இருப்பதும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.
அதனால் பெண்களாக என்றாலே, அவர்களுக்குள் போட்டி மனப்பான்மையும், பொறாமை உணர்வும், ஒருவர் மீது ஒருவருக்கு காழ்ப்புணர்ச்சியும் எந்த காரணமும் இல்லாவிட்டாலும் அவர்களுக்குள் தோன்றுவது அவர்களுடைய இயல்பிலேயே அது வந்து விடுகிறது.
நமீதா
இதையே நடிகை நமீதா கூறிய இந்த விஷயம் வெளிப்படுத்துகிறது. நமீதா தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நாயகியாக வலம் வந்தவர். சத்யராஜ், சரத்குமார், விஜய், அஜீத் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். இப்போது பாஜக ஆதரவாளராக இருந்து வருகிறது.
பில்லா படத்தில்…
நமீதா ஒரு நேர்காணலின் போது கூறியதாவது, பில்லா படத்தில் நடிகை நயன்தாராவோடு நான் சேர்ந்து நடித்தேன். ஆனால், என்னுடைய காட்சிகள் பல படத்திலிருந்து நீக்கப்பட்டு இருந்தது. இதனால் நான் வேதனை அடைந்தேன்.
படப்பிடிப்பு தளத்தில் நான் யாரிடமும் பேசவில்லை என்று கூறுவார்கள். உண்மையை சொல்ல போனால், என்னிடம் யாரும் பேசவில்லை என்பதுதான் உண்மை. நான் தனித்து விடப்பட்டிருந்தேன்.
நயன்தாரா பேசவில்லை
நடிகை நயன்தாராவுடன் சில முறை மட்டுமே பேசி இருக்கிறேன். நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை.. இதுதான் பில்லா படத்தில் எனக்கு கிடைத்த அனுபவம் என பேசி இருக்கிறார் நடிகை நமீதா.
நடிக்கவே விட்டிருக்க மாட்டார்
என்னதான் இருந்தாலும், நயன்தாராவும் ஒரு பெண்தானே. அடிப்படையில் அவருக்கும் நமீதா மீது ஒருவித பொறாமை, காழ்ப்புணர்ச்சி இருந்திருக்கும். அதனால்தான் சமகால போட்டி நடிகையாக நமீதாவை பாவித்து அவருடன் சகஜமாக பேசுவதை, பழகுவதை தவிர்த்திருக்கிறார்.
பில்லா படத்தில் நயன்தாராவோடு நடிச்சேன்.. ஆனால்.. நயன்தாரா என்னிடம் சரியாக கூட பேசவில்லை என்று இப்போது அந்த வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை நமீதா.
பில்லா படம் இப்போது எடுத்திருந்தால், அந்த படத்தில் நடிக்கவே உங்களை நயன்தாரா விட்டிருக்க மாட்டார், அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் என ரசிகர்கள் அவருக்கு பதில் தந்து வருகின்றனர்.