ஆபரேஷனுக்கு அப்புறம் இருப்பேனான்னு தெரியாது… இயக்குனரிடம் கூறிய நடிகர் அஜித்குமார்..! பரபரப்பு தகவல்கள்..!

பேய், அமானுஷ்யம், காமெடி இது மூன்றையும் கலந்து சுந்தர் இயக்கி தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் திரைப்படம் தான் அரண்மனை.

அரண்மனை 1 ,அரண்மனை 2 ,அரண்மனை 3 ,அரண்மனை 4 என அடுத்தடுத்து தொடர்ச்சியாக தொடர்கதை போன்று இந்த திரைப்படம் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

தொடர் கதையான அரண்மனை:

அண்மையில் கடந்த மே மூன்றாம் தேதி அரண்மனை 4 திரைப்படம் திரையரங்கில் வெளியாகிய ஓரளவுக்கு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

காமெடிக்கு பஞ்சும் இல்லாத வகையில் இந்த படத்தை எடுத்திருக்கிறார் சுந்தர்சி. இப்படத்தை குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவிஸ் தான் தயாரித்திருக்கிறது.

இப்படத்தில் சுந்தர்சியுடன் தமன்னா, ராசி கண்ணா, சந்தோஷ் பிரதாப், ராமச்சந்திரராஜு, கோவை சரளா யோகி பாபு உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள் .

குறிப்பாக வி டிவி கணேஷ், டெல்லி கணேசன் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் காமெடி கதாபாத்திரங்களில் வெளுத்து வாங்கி இருக்கிறார்கள்.

அரைத்த மாவையே அரைத்த சுந்தர் சி:

பேய் திரைப்படங்களின் வரிசையில் வெளிவந்துள்ள என்ற இந்த 4வது பாகம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.

ஒரே மாதிரியான அனுபவத்தை தருவதாகவும் அரச்ச மாவையே அறைதிருப்பது போல் இருப்பதாகவும் ஆடியன்ஸ் கருத்துக்களை கூறினார்கள்.

காமெடி மற்றும் கலகலப்பான அமானுஷ்யங்கள் நிறைந்த இப்படத்திற்கு அதற்கு ஏற்றது போல் ஹிப் ஹாப் தமிழாவின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

இந்நிலையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தொடர்ச்சியாக கலந்து கொண்டு அது குறித்த பேட்டிகளில் பேசி வரும் சுந்தரி சி சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

உணர்ச்சி இல்லாமல் அப்படி நடந்துக்கொண்டு அஜித்:

அதாவது உன்னை தேடி என்ற படத்தை எடுத்த போது பாடல் காட்சிகளுக்காக நாங்கள் நியூசிலாந்தில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த ஏற்பாடுகள் பண்ணியிருந்தோம்.

அப்போ அஜித் ரொம்ப முதுகுவலி பிரச்சனையா இருக்கு அப்படின்னு சொல்லியும் முதுகில் ஒரு அறுவை சிகிச்சை செய்யணும் அப்படின்னு சொல்லி இருந்தாரு.

எனக்கு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் இன்னும் ஏழு நாட்களில் வெளிநாட்டில் செட்டில் ஆகப்போறாரு.

அதற்குள் நான் ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும். அது மட்டும் இல்லாம அறுவை சிகிச்சைக்கு பின் உட்கார முடியாத நிலை கூட எனக்கு ஏற்படலாம்.

ஆப்ரேஷனுக்கு பின் இருப்பேனான்னு தெரியாது:

இதனால் இப்ப இருக்கும்போதே என்னுடைய எல்லா காட்சிகளையும் எடுத்துகோங்க அப்படின்னு சொன்னார். பிறகு அஜித்தின் இந்த கோரிக்கையை நாங்கள் தயாரிப்பு தரப்பிடம் கூறினோம்.

அவர்கள் சம்மதித்தாலும் இல்லை என்றாலும் அடுத்தடுத்த இழப்புகள் ஏற்படும். அதனால் அது சார் என்கிட்ட கூறினதால் படைபிடிப்பு விரைவா முடிக்க திட்டமிட்டோம்.

அதன்படி தான் நியூசிலாந்தில் 22 மணி நேரம் சூரிய வெளிச்சம் இருந்ததால் இரவு பகல் பார்க்காமல் ஒரே வாரத்தில் அஜித்தின் பகுதிகள் எல்லாவற்றையும் முடித்து படமாக்கி அவரை அனுப்பி வைத்தோம்.

அஜித் அந்த நேரத்தில் உணர்ச்சி இல்லாமல் இருந்தார். நாம் ரோட்டில் நடந்தால் அடுத்தடுத்து அடி எடுத்து வைத்து நடந்து கொண்டே இருப்போம்.

ஆனால் அஜித் தரையை பார்த்துதான் காலடி எடுத்து வைப்பார். காரணம் அவருக்கு கால்களில் உணர்ச்சி இருக்காது.

கால்களை எங்கே எடுத்து வைக்கிறோம் என்ற உணர்வு கூட இல்லாமல் தரையை பார்த்து தான் நடப்பார். அந்த அளவுக்கு மிகுந்த வேதனைக்கு உள்ளாகி அந்த படத்தில் நடித்திருந்தார் அஜித்.

வேதனைப்பட்ட அஜித்:

அத்தனை வேதனைகளையும் கடந்து தான் இன்று சாதனை நடிகராக பார்க்கப்படுகிறார் என சுந்தர் சி அந்த பேட்டியில் அஜித்தை குறித்து மிகவும் பெருமையாக பேசி இருந்தார்.

சுந்தர் சி இயக்கத்தில் அஜித் நடித்து 1999 இல் வெளிவந்த திரைப்படம் தான் உன்னை தேடி. இப்படத்தில் புதுமுக நடிகையாக மாளவிகா அஜித்தின் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இவர்களுடன் சிவகுமார், மௌலி, ஸ்ரீவித்யா ,விவேக் ,வையாபுரி ,கரண், வாசு, ராஜ ராதாகிருஷ்ணன் மனோரமா உள்ளிட்ட பல நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam