தென்னிந்திய சினிமாவின் திரைப்பட நடிகையாகவும் சீரியல் நடிகையாகவும் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர்தான் வித்யா பிரதீப். இவர் கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவராக இருந்தார்.
அங்கு கேரள திரைப்படங்களில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தமிழில் வந்து இவர் சைவம் திரைப்படத்தின் மூலமாக நடித்த அறிமுகமானார்.
நடிகை வித்யா பிரதீப்:
முதல் படம் நல்ல அறிமுகத்தை அவருக்கு கொடுத்தது. தொடர்ந்து பசங்க 2 திரைப்படத்தில் நடித்திருந்தார் அத்துடன் இவர் பல்வேறு சீரியல்களிலும் நடித்த வந்தார்.
மாடல் அழகியாக பல விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் ஏ ஆர் ரகுமான் இசையை ஆல்பத்தில் நடித்த பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார்.
தொடர்ந்து ஒண்ணுமே புரியல, அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், கலரி , மாரி 2, தடம் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
தொலைக்காட்சி நடிகையாக வித்யா பிரதீப்:
கூடவே தொலைத்தாட்சி தொடர்களில் நடித்து வந்த இவர் நாயகி சீரியலில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இதனிடையே இது ரெடி சமூக வலைதளங்களில் எப்போதும் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.
நடிகை வித்யா பிரதீப் மாடல் அழகி, நடிகை என்பதையும் தாண்டி தற்போது அறிவியல். விஞ்ஞானியாகவும் பட்டத்தைப் பெற்று அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
ஆம் இவர் தற்போது டாக்டர் பட்டம் பெற்று விஞ்ஞானியாக ஆகிவிட்டது மிகவும் பெருமையோடு கூறியுள்ளார்.
டாக்டர் பட்டம் வென்ற வித்யா பிரதீப்:
இது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகில் இருக்கும் பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
இது குறித்து வித்யா பிரதீப் கூறியுள்ளதாவது, கடந்த பத்து வருடங்களாக சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தேன்.
நான் சென்னைக்கு எந்த காரணத்திற்காக வந்தேனோ அது நிறைவேறி விட்டது. தற்போது விஞ்ஞானி ஆகவும் ஆகிவிட்டேன்.
இதற்காக கடின உழைப்பு மற்றும் சில தியாகங்களையும் நான் செய்திருக்கிறேன். இப்படி ஒரு இடத்திற்கு வந்திருப்பதற்காக எனக்கான பொறுப்பு இன்னும் மேலும் அதிகரித்து விட்டது.
கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி அறிவியலுக்கும் இந்த சமூகத்திற்கும் பயன்படும் வகையில் முழு மனதோடு பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார் . வித்யா பிரதிப் இவரின் இந்த பதிவுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.