தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக பார்க்கப்படுபவர் தான் நடிகை மீனா. இவர் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி அதன் பிறகு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார்.
முதன் முதலில் சிவாஜி கணேசன் நெஞ்சங்கள் திரைப்படத்தின் மூலமாக இவர் அறிமுகம் ஆனார். அதன் பிறகு 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் பெற தொடங்கினார்.
நடிகை மீனா:
தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
குறிப்பாக கதாநாயகியாக. ரஜினி, கமல், விஜய், சரத்குமார் என பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து இவர் நடித்திருக்கிறார்.
இவரது இயக்கத்தில் வெளிவந்த அவ்வை சண்முகி , அன்புள்ள ரஜினிகாந்த், என் ராசாவின் மனசிலே, எஜமான், சிட்டிசன், நாடோடி மன்னன், பெரிய அண்ணா, மரியாதை, மாயி, முத்து, வானத்தைப்போல, வில்லன், உள்ளிட்ட பல்வேறு பல்வேறு திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடித்த படங்களாக பார்க்கப்பட்டது.
தொடர்ந்து நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருந்த மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்ற மென்பொருள் பொறியாளரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் திருமணத்தில் தென்னிந்திய முன்னணி நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள்.
தெறி பேபியான மீனாவின் மகள்:
திருமணத்திற்கு பிறகு மீனாவுக்கு நைனிகா என்ற குழந்தை பிறந்தார். இவர் தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
இயக்குனர் அட்லீ நடிகை மீனா வீட்டிற்கு சென்று உங்களது மகள் நைனிகாவை படத்தில் நடிக்க வைக்க முடியுமா என கேட்டு கதையை கூறும்போது மீனா சற்று யோசித்தாராம்.
அதன்பின்னர் அட்லீ எடுத்துக் கூறி மகளுக்கு நல்ல ஒரு எதிர்காலம் நான் கொடுப்பேன். இதற்கு உத்திரவாதம் என கூறியதையடுத்து மீனா சம்மதித்துள்ளார்.
அந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. ரசிகர்கள் இன்றுவரை நைனிகாவை தெறி பேபியாகவே பார்த்து வருகின்றனர்.
கணவர் மரணம்:
இதனிடையே மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா காலகட்டத்தில் நுரையீரல் தொற்று காரணமாக தனது 2022 ஆம் ஆண்டு திடீரென மரணம் எய்திவிட்டார்.
கணவர் மரணத்தில் இருந்து மீள முடியாத மீனா சில காலம் வீட்டிலேயே முடங்கியிருந்தார். அவரை திரைத்துறையை சேர்ந்த தோழிகள் மற்றும் நண்பர்கள் சென்று ஆறுதல் கூறி அரவணைத்தனர்.
இதனையடுத்து மீனா இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பல நடிகர்களுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்ட வதந்தி செய்தியாக வெளியானது.
பின்னர் மீனா நிகழ்ச்சி ஒன்றில் என்னைப் பற்றி இதுபோன்ற தவறான செய்திகள் பரப்பாதீர்கள். நான் ஒரு குழந்தையை வைத்திருக்கிறேன்.
எனது எதிர்காலம் பற்றி எனக்கு முடிவெடுக்க தெரியும். தயவுசெய்து போன்று பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள்.
நடிகைகளின் வாழ்க்கையில் எந்த எல்லைக்குவேண்டுமானாலும் விளையாடுவீர்களா? என கேள்வி கேட்டிருந்தார். இதை எடுத்து அந்த வதந்திகள் ஓய்ந்தது.
விடாமல் டார்ச்சர் பண்ண மோகன்லால்:
இந்த நிலையில் நடிகை மீனா தனக்கு பிரசவம் நடந்த உடனேயே அடுத்த இரண்டு மாதத்தில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அதை தான் எப்படி சமாளித்தேன்? எப்படி அதில் நடித்தேன்? என்பதை பற்றி பேசி ஒன்று தெரிவித்திருக்கிறார்.
அதாவது மலையாளம் மொழியில் வெளியான விஷயம் திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் ஹீரோவாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் நடிகை மீனா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தான் நடிகை மீனாவிற்கு பிரசவம் முடிந்தது.
இரண்டு மாதத்தில் கைக்குழந்தை படப்பிடிப்பு படத்தின் கதையை கூறிய பிறகு படப்பிடிப்பு கிராமத்தில் நடக்க இருக்கிறது என்பதை தெரிந்த மீனா அங்கு கண்டிப்பாக என்னால் இருக்க முடியாது என மறுத்திருக்கிறார்.
ஏனென்றால் கை குழந்தை இரண்டு மாதம்தான் ஆகிறது. இந்த குழந்தையை வைத்துக்கொண்டு என்னால் அந்த குக்கிராமத்தில் எப்படி சமாளிக்க முடியும்.
முறையான வீட்டு வசதி, மருத்துவ வசதி எதுவும் அங்கு நாம் நினைத்த நேரத்திற்கு கிடைக்க வாய்ப்பு இல்லை.
அதனால் கண்டிப்பாக என்னால் குழந்தைகளை தூக்கிக்கொண்டு அங்கு வந்து நடிக்க முடியாது எனவும் சில காரணங்களை கூறி பட வாய்ப்பு தவிர்த்திருக்கிறார்.
ஆனால் நடிகர் மோகன்லால் நீங்கள்தான் மீனா நடிக்க வேண்டும் என்று விடாப்பிடியாக டார்ச்சர் செய்து நடிகை மீனாவை நடிக்க வைத்திருக்கிறார்.
அவர் கேட்டது போல மீனாவும் அவருடைய குழந்தைக்கும் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் மற்றும் தொலைதொடர்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து எந்த ஒரு குறையும் இல்லாமல் அந்த படப்பிடிப்பில் மீனாவையும் அவருடைய குழந்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் .
நடிகர் மோகன்லால். இந்த தகவலை சமீபத்தில் நடிகை மீனா தன்னுடைய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.
கைக்குழந்தை இருக்குன்னு சொல்லியும் கூட விடாமல் இந்த படத்தில் நீ தான் மீனா நடிச்சாகணும் என டார்ச்சர் பண்ணி நடிக்க வச்சார்.
அதற்கேற்ற உழைப்பை நான் அந்த படத்தில் கொடுத்தேன். படம் வெற்றி பெற்றது மகிழ்ச்சி என பதிவு செய்திருக்கிறார் நடிகை மீனா.