மிகக் குறுகிய காலத்திலேயே டாப் ஹீரோயின் ரேஞ்சுக்கு வளர்ந்து வந்தவர்தான் நடிகை அனு இம்மானுவேல்.
நல்ல உயரம், முட்டை கண்ணழகு, நல்ல தோற்றம் , கவர்ச்சியான உடல் வடிவம் என ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் அறிமுகம் ஆன புதிதுலே கவர்ந்து இழுத்தார்.
தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்த வருகிறார் . கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் அறிமுகமானார்.
அனு இமானுவேல்:
அதன் பிறகு திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். முதன் முதலில் தமிழில் வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். அதை எடுத்து அவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
எப்போதும் மாடல் உடைகளை அணிந்து அவர் எடுத்துக் கொள்ளும் எக்கத்தப்பான புகைப்படங்கள்ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறும் .
அந்த வகையில் அவர் சமீப நாட்களாக தொடர்ச்சியாக கவர்ச்சி கட்டி வருகிறார். இதனிடையே பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து வெளிப்படையாக பேசுகிறார்களே உங்களுக்கு அப்படி ஏதும் நடந்த அனுபவம் உண்டா? என கேட்டதற்கு…
ஆம் எனக்கும் இது போன்ற அனுபவம் என்னுடைய வாழ்க்கையில் நடந்தது. என்னை யாரும் படுக்க அழைக்கவே இல்லை அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிடவே இல்லை என நான் சொல்லி விட முடியாது.
படுக்கைக்கு அழைத்தார்கள்:
ஏனென்றால் நான் சினிமா துறையில் அறிமுகமான புதிதில் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்து இருந்தார்.
எனக்கு மிகப்பெரிய பட வாய்ப்பு தருவதாகவும் அவர் எனக்கு ஆசை காட்டினார். ஆனால் நான் அதை பார்த்து மயங்கி விடாமல் அவருக்கு பயந்தும் விடாமல் என்னுடைய குடும்பத்தினரோடு அந்த பிரச்சனையை எதிர்கொண்டேன்.
ஆனால் நடிகைகள் யாரும் அப்படி செய்வது கிடையாது அதை பொதுவெளியில் வந்து தைரியமாக பேசுவதும் கிடையாது .
இது போன்ற பிரச்சனைகளை நாம் தனியாக எதிர்கொள்வதை விட நமது குடும்பத்தினருடன் ஆலோசித்து பேசி அவர்களின் உறுதுணையோடு இந்த பிரச்சனையை எதிர்கொண்டால் அது சீக்கிரமாக மிகவும் சுலபமாக பிரச்சனைகள் இன்றி முடிந்துவிடும்.
பெண்கள் தைரியமாக இருங்கள்:
எனவே பெண்கள் எல்லோரும் முதலில் தன் குடும்பத்தில் உள்ள நபர்களை நம்புங்கள் பெண்களை இப்படி வளர விடாமல் தடுக்கும் நபர்களை பார்த்து பயப்படாமல் இருங்கள்.
எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து முன்னேறி வரவேண்டும் என அனு இமானுவேல் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.