80 மற்றும் 90களில் தமிழ் சினிமாக்களில் கொடி கட்டி பறந்த நகுதிகளாக இருந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவர் 1980 கலில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார். அதன் பிறகு 1989 ஆம் ஆண்டு வெளிவந்த வருஷம் 16 திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே கோபித்த வரவேற்பு குஷ்பூவுக்கு கிடைத்ததால் தமிழ் சினிமா ரசிகர்கள் கவனம் அவர் பக்கம் பாய்ந்தது.
நடிகை குஷ்பூ:
தொடர்ந்து 1990களை பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக ஜொலிக்க ஆரம்பித்தார்.
வெற்றி விழா, கிழக்கு வாசல், சின்னதம்பி, அண்ணாமலை, சிங்காரவேலன், ரிக்ஷா மாமா, கேப்டன் மகள், நாட்டாமை உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் குஷ்பு நடித்துள்ளார்.
குறிப்பாக தென்னிந்திய சினிமா ரசிகர்களை பொறுத்தவரை கொழுக் மொழுக் என்ற ஒரு நடிகை கிடைத்துவிட்டால் அவர்களை உச்சத்திற்கு கொண்டு செல்லாமல் விடவே மாட்டார்கள்.
அப்படித்தான் நடிகை குஷ்புவின் கொழுக் மொழுக் அழகு ரசிகர்களை கட்டி இழுக்க மிக குறுகிய காலத்திலேயே நட்சத்திர நடிகையாக உயர்ந்து விட்டார்.
பின்னர் 2000 காலகட்டத்தில். விண்ணுக்கும் மண்ணுக்கும், காற்றுக்கென்ன வேலி, பழனி , தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறப்பு தோற்றங்களிலும் நடித்து வந்தார்.
இதனுடைய தனது உடல் எடையை குறைத்து சிக்கென மாறிய குஷ்பூ மீண்டும் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
குஷ்புவின் ரீ என்ட்ரி:
இதைத் தொடர்ந்து திரைப்படம் மற்றும் அரசியல் என இரண்டிலும் பிஸியாக இருந்து வருகிறார் குஷ்பூ.
குஷ்பூ சின்னதம்பி திரைப்படத்தில் நடித்த போது நடிகர் பிரபு உடன் காதலித்து இருவரும் லிவிங் லைப் வாழ்ந்து வந்ததாக கூட அப்போதைய செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
இவர்கள் இருவரும் திரையில் நடித்தால் இவர்களது கெமிஸ்ட்ரி மிகப்பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகும் குறிப்பாக இந்த ஜோடி சிறந்த ஜோடியாக ரசிகர்களால் பார்க்கப்பட்டது.
ரசிகர்களே இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் சிறப்பாக இருக்கும் என தங்களது கருத்துக்களை கூறி வந்த நிலையில் இருவரும் காதலிக்க துவங்கினர்.
பின்னர் திருமணம் செய்யாமலே ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள் என கோலிவுட் செய்திகள் வெளியானது.
ஆனால், அதன் பின்னர் சிவாஜி கணேசன் இவர்களது காதலுக்கு மறுப்பு தெரிவிக்கவே இந்த காதல் முறிந்து போனது.
பிரபுவுடன் லிவிங் லைஃப்:
பின்னர் பிரபு பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன் பின்னர் குஷ்பூ சுந்தர் சியை காதலித்து மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். பல பேட்டிகளின் குஷ்பூ தான் பிரபுவுடன் காதலித்து லிவிங் லைப் இருந்தது உண்மைதான் என வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
ஒரு வேலை சுந்தர் சி என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் நான் பிரபுவை தான் திருமணம் செய்து வந்தேன்.
எங்கள் இருவருக்கும் இடையே புனிதமான காதல் இருந்தது உண்மைதான் என அவர் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.
மகளை நடிகையாக்க தீவிரம்:
இந்த நிலையில் குஷ்பு தனது மகளை எப்படியாவது திரைப்படத்துறையில் ஹீரோயின் ஆக்க வேண்டும் என மும்முரமாக முயற்சித்து வருகிறாராம்.
இதனிடையே பெரிய நட்சத்திர நடிகர் நடிகைகளின் மகனுடனும் அல்லது யாரேனும் மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் தன்னுடைய மகளை ஹீரோயினாக நடிக்க வைத்து விட வேண்டும் என்ற முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.
இதற்காக அவர் தன்னுடைய மகளுக்கு வீட்டிலேயே நடிப்பு பயிற்சி கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட வருகிறது.