நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். இப்போது த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
அதற்கு முன்பாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை, மலேசியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தற்போது பலத்த சர்ச்சையை கிளப்பி வருகிறது.
அரசியல் களத்தில் விஜய்
ஏனென்றால் நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார். தனது 69வது படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு முதல் கட்சிப் பணிகளில் முழு தீவிரம் காட்ட உள்ளார்.
வரும் 2026ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், தனித்து நின்று 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி மாலை சூட முடிவு செய்து இருக்கிறார்.
மலேசியாவில் விழா
இந்நிலையில் தற்போது விஜய், மலேசியாவில் கோட் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த முடிவு செய்ய காரணம், கடந்த முறை லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, போலீஸ் கடைசி நேரத்தில் விழா நடத்த அனுமதி மறுத்து விட்டது. இதனால் ரசிகர்கள் பலத்த ஏமாற்றம் அடைந்தனர்.
அதன் பிறகு லியோ படம் வெளியாகி, 2 வாரங்கள் ஓடிய பிறகு படத்தின் சக்சஸ் மீட் விழாவாக நடத்தப்பட்டது. எனினும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த அனுமதிக்கவில்லை.
லியோ போல…
இதற்கு அரசியல் காரணங்களும் கூறப்பட்டது; அதேபோல் இந்த முறையும் கோட் படத்தின் இசை வெளியீட்டு விழாவை லியோ போல, நடத்த விடாமல் தடுக்க அரசு தரப்பில் முட்டுக் கட்டைகள் போடலாம்.
அது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்படுமே என்பதால், மலேசியாவில் இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிடப்பட்டதாக தெரிகிறது.
நடிகர் விஜய் தற்போது நடித்த படம் GOAT திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த திட்டமிட்டு இருக்கிறது படக்குழு என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
நடிகர் விஜய் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து முதலில் வெளியாக கூடிய திரைப்படம் GOAT. எனவே இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக பெரும்பாலான ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது ஆடியோ வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த திட்டமிட்டு இருக்கிறது படக்குழு என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
முதலமைச்சர் ஆக வேண்டுமா?
ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவை தமிழ்நாட்டில் நடத்த முடியாது. ஆனால், தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் ஆக வேண்டுமா..? என்று இணைய பக்கத்தில் நடிகர் விஜய் மீதான எதிர்ப்பு கருத்துக்களும் வரத் தொடங்கி இருக்கிறது. இது குறித்து உங்களுடைய கருத்தை பதிவு செய்யலாம்.