முதல் கணவர் கொடுத்த வலி.. கணவரை அருகில் வைத்துக்கொண்டே மைனா நந்தினி ஓப்பன் டாக்..!

சினிமா வாழ்க்கையில் நடிகைகளாக இருப்பவர்கள், தங்களது சொந்த வாழ்க்கையில் பல கஷ்டங்களை, துயரங்களை, பல நெருக்கடிகளை, பல வலிகளை கடந்துதான் சினிமாவில் தொடர்ந்து நீடித்து வருகின்றனர்.

அவர்களுக்கும் சராசரி மனிதர்களைப் போன்று பல பிரச்சனைகளும் சவால்களும், சோகங்களும், இழப்புகளும், சிக்கல்களும் வாழ்க்கையில் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.

மைனா நந்தினி

அந்த வகையில் நடிகை மைனா நந்தினி சீரியல்களில், சினிமாவில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவர்.

இவர் நிறைய படங்களில், சின்னத்திரை சீரியல்களில் நடித்திருக்கிறார். சரவணன் மீனாட்சி தொடரில் மைனா கேரக்டரில் நடித்ததால், இவர் மைனா நந்தினி என்றே அழைக்கப்படுகிறார்.

வம்சம் படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார். அதில் கஞ்சா கருப்புவுக்கு அவர் ஜோடியாகவும் நடித்திருந்தார்.
முதல் கணவர் தற்கொலை

மைனா நந்தினியின் முதல் கணவர், திருமணமான சில மாதங்களில் தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு இவர் யோகி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு அவர் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், தனது கடந்த காலத்தில் முதல் கணவர் இறந்தபோது மைனா நந்தினி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார். குறிப்பாக அவரது முதல் கணவரின் தற்கொலைக்கு காரணமே மைனாதான் காரணம் என்றெல்லாம் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

கடுமையான விமர்சனங்கள்

அதுகுறித்து சமீபத்தில் பங்கேற்ற ஒரு நேர்காணலில், மைனா நந்தினி வெளிப்படையாக பேசியிருக்கிறார். இந்த பேட்டியின் போது அவரது 2வது கணவர் யோகியும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது பல விஷயங்களை அவர், மனம் திறந்து பேசியிருக்கிறார்.

சமீபத்தில் தனது கணவர் யோகியுடன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை மைனா நந்தினி கூறியதாவது,

என் மேல நிறைய சர்ச்சைகள் இருந்தது. கடுமையான விமர்சனங்கள் இருந்தது. என்னை பார்க்கும் போது, அவர்களின் பார்வை ஒரு மாதிரியாக இருந்தது. அப்படி ஒரு சூழ்நிலை இருந்தது.

கல்யாணத்துல சந்தோஷம் இல்லே

அப்போது ஒரு பொண்ணுக்கு எதுவெல்லாம் கிடைக்கலையோ, அந்த பொண்ணை மாத்தணும். அதாவது அந்த பொண்ணுக்கு எல்லாமே கிடைக்கணும். அவ கல்யாணத்துல சந்தோஷம் இல்லே. நிறைய சந்தோஷங்களை பார்க்கல.

வெறும் அழுகையை பார்க்கறா, கஷ்டத்தை பார்க்குறா அப்படீங்கற நிலமையில் வீட்டுல இருக்கிற பெற்றோர், இதைப் பத்தி கவலைப்படுவாங்க. மாத்தணுமுன்னு முயற்சி எடுப்பாங்க. இல்லேன்னா நம்ம ரத்த பத்தங்கள் பண்ணும்.

எங்க வாழ்க்கையே எடுத்துக்காட்டு

ஆனா யாருன்னே தெரியாத ஒருத்தர், எனக்கு வாழ்க்கை கொடுத்திருக்கார். இப்படி கூட லைப் மாறும்முன்னு சொல்ற அளவுக்கு மாறி இருக்குது.

அதுவும் அந்த வாழ்க்கை மத்தவங்களுக்கு எடுத்துக்காட்டா இருக்குது. சில தம்பதிகள் கூட, உங்களோட வாழ்க்கை எங்களுக்க எடுத்துக்காட்டா, இருக்குதுன்னு, உங்க வாழ்க்கையை பார்த்து பாசிட்டிவ் விஷயங்களை நாங்க எடுத்துக்கறோமுன்னு சொல்றாங்க.

ராணி மாதிரி பார்த்துப்பார்

நான் என்ன சேட்டை பண்ணினாலும், அவர் குழந்தையை பார்த்துப்பார். என்னை ராணி மாதிரி பார்த்துப்பார், அதற்கு சரியான அர்த்தம் அதுதான் என்று கூறியிருக்கிறார் நடிகை மைனா நந்தினி.

தற்கொலை செய்து கொண்ட முதல் கணவர் கொடுத்த வலி குறித்து தனது 2வது கணவரை அருகில் வைத்துக்கொண்டே மைனா நந்தினி வெளிப்படையாக பேசியிருப்பது வைரலாகி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam