ஆமாயா.. இதனால் தான் குக் வித் கோமாளியில இருந்து வெளிய வந்தேன்.. வெங்கடடேஷ் பட் ஓப்பன் டாக்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் ஃபேவரட்டான மக்கள் எல்லோருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக இருந்து வருவது “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி தான்.

வயது வித்தியாசம் இன்றி எல்லோருக்கும் பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டு வருவது குக் வித் கோமாளி.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சி பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஒரு நிகழ்ச்சியாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

காமெடி கலாட்டாக்களுக்கு பஞ்சமே இல்லாத வகையில் நிகழ்ச்சியை கொண்டு போவதிலும் சரி குக்களுடன் சேர்ந்து கோமாளிகள் செய்யும் அலப்பறைகள் கலாட்டாக்கள் இது எல்லாமே மக்களை வெகுவாக கவர்ந்தது.

இதில் வெறும் சமையல் நிகழ்ச்சி மட்டும் நோக்கமாக கொண்டு செல்லாமல் அதற்கு ஈடாக அதைவிட அதிகமாக கலகலப்பான காமெடியுடன் கொண்டு செல்வது தான் இந்த நிகழ்ச்சி நோக்கமே.

இதன் மூலமே மக்கள் பெருவாரியான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆர்வத்தோடு இருந்த வந்தார்கள்.

சிறு வயது முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சியை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருவது நம்மால் பார்க்க முடிகிறது.

வெளியேறிய வெங்கடேஷ் பட்:

இதுவரை 4 சீசன்கள் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது 5வது சீசனும் சூப்பராகவே போய்க் கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் பல புதிய மாற்றங்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் நடுவராக இதுவரை இருந்து வந்த வெங்கடேஷ் பட் இல்லாதது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கடந்த நான்கு சீசங்களாக வெங்கடேஷ் தனது பணியை மிக சிறப்பாக செய்து வந்த நிலையில் திடீரென அவர் இல்லாமல் போனது. அவரின் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

இவர் வெளியேறியதற்கான காரணம் என்ன?என்பது பரவலாக மக்கள் பேசி வந்தாலும் அதற்கான காரணத்தை அவர் இதுவரை வெளிப்படையாகவே கூறவே இல்லை.

இந்த ஐந்தாவது சீசனில் இயக்குனர், தயாரிப்பாளர் நிறுவனம். நடுவர். கோமாளிகள் என பல புதிய விஷயங்கள் களம் இறங்கி உள்ளது.

இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டதிலிருந்து வெற்றிகரமாகவே சென்று கொண்டிருக்கிறது. இப்படியான நேரத்தில் வெங்கடேஷ் பட் ஏன் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்?

அதற்கான காரணம் என்ன என்பது குறித்து மனம் திறந்து முதல் முறையாக பேசி இருக்கிறார்.

அதாவது நான் கிட்டத்தட்ட விஜய் டிவியில் கடந்த 24 வருஷத்திற்கு மேலாக சமையல் கலை சார்ந்த நிகழ்ச்சிகளில் தொடர்ந்து அவர்களுடன் தொடர்ப்பில் இருந்து வருகிறேன்.

அவங்க இல்லாமல் என்னால் முடியாது:

எனக்கு மீடியா என்பது ரொம்பவே புதுசு கிட்சன் சூப்பர் ஸ்டார், கிட்சன் சூப்பர் ஸ்டார் ஜூனியர், குக் வித் கோமாளி இப்படி பல சமையல் நிகழ்ச்சிகளை நான் விஜய் டிவியில் கிட்டத்தட்ட 15 சீசன்களுக்கு மேலாக இதுவரை நடத்தி இருக்கிறேன்.

இவர்களுடன் சேர்ந்துதான் மீடியா மிஷன்ஸ் நிறுவனம் என்னோடு அவர்கள் பயணத்தை ஆரம்பித்தார்கள்.

மீடியா மிசின்ஸும் நானும் இணைந்து ஒரு நிகழ்ச்சியை செய்கிறோம் என்றால் அது எனக்கு சவுகரியமாக இருக்கும்.

நாங்கள் விஜய் டிவியோடு ஒன்றிணைந்து இருந்து வந்தோம். ஆனால் ஒரு கட்டத்தில் மீடியா மெஷின்ஸ் நிறுவனத்திற்கும் விஜய் டிவிக்கும் இடையே சின்ன தகராறு மனக்கசப்பு ஏற்பட்டது.

அவர்கள் ஒட்டுமொத்தமாக விஜய் டிவியில் இருந்து வெளியேறி விட்டார்கள். அதன் பிறகு என்னால் இந்த நிகழ்ச்சியில் தனிமையாக பயணிப்பது மிகவும் கடினமாக இருந்தது.

எனக்கும் மீடியா மிஷன் இருந்தால் தான் அவர்களுடன் சௌகரியமாக நிகழ்ச்சியை நடத்த முடியும்.

எனவே அவர்கள் வெளியேறினால் நானும் அவர்களோடே சேர்ந்து விஜய் டிவியில் இருந்து வெளியேறினேன் என தெரிவித்து இருக்கிறார் வெங்கடேஷ் பட்.

நான் விஜய் டிவியில் இத்தனை வருடம் சுதந்திரமாக வேலை செய்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர்கள் மீடியா மிஷன் நிறுவனம் தான். தற்போது இந்த விஷயம் வைரலாகி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam