தமிழ் சினிமாவை பிரபலமான இளம் இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஜிவி பிரகாஷ்.
இவர் குழந்தை பருவத்தில் இருந்தே இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டு தனது தாய் மாமாவான ஏ ஆர் ரகுமான் உடன் பயணித்து வந்ததால் அவரது இசைக்கருவிகளை தொட்டு வளர்ந்ததால் இசை மீதான ஆர்வம் வந்தது.
சிறு வயதிலே குழந்தை பருவமாக இருக்கும் போதே வாசிக்கவும் , பாடவும் கற்றுத்தெறிந்தார் ஜிவி.
பின்னர் தாய் மாமா ஏ ஆர் ரகுமானின் அரவணைப்பில் இருந்து வளர்ந்ததால் இசையை நன்கு கற்றுக் கொண்டார்.
ஜிவி பிரகாஷின் இசை பயணம்:
2006 ஆம் ஆண்டு வெளிவந்த வெயில் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷ் முதல் படத்திலிருந்து ஏகோபித்த ரசிகர்களின் வரவேற்பை பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
குறிப்பாக இவரது இசையில் வெளிவந்த அத்தனை பாடல்களும் வெயில் படத்தில் மாபெரும் ஹிட் அடித்தது.
அதை எடுத்து கிரீடம், பொல்லாதவன், சேவல், அங்காடி தெரு, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் இசையமைத்துள்ளார்.
இரும்புக்கோட்டை, முரட்டு சிங்கம், மதராசபட்டினம், தெய்வதிருமகள், மயக்கம் என்ன, முப்பொழுதும் உன் கற்பனைகள் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இசை அமைத்து மிகச் சிறந்த இசையமைப்பாளராக தென்பட்டு வந்தார்.
இசையமைப்பாளராக உச்சத்தில் புகழ்பெற்ற ஜிவி பிரகாஷுக்கு திரைப்பட வாய்ப்புகளும் தேடிவந்தது. இதனால் நடிகராக அவதாரம் எடுக்க ஆரம்பித்தார்.
நடிகராக அறிமுகம் ஆன முதல் படம்:
முதன்முதலில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெள்ளி வந்த டார்லிங் திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.
அந்த படம் மாபெரும் அளவில் ஈட்டு அடித்தது பேரும் புகழும் அவருக்கு கிடைத்தது. அதை அடுத்து அவர் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நடித்திருந்தார்.
அந்த படம் பாக்ஸ் ஆபிஸ்ல மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து வசூலில் வாரி குவித்தது என்றே சொல்லலாம். தொடர்ந்து ஒரு சில தோல்வி படங்களிலும் விஜய் ஜிவி பிரகாஷ் நடித்தார்.
சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் மீண்டும் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. ஐங்கரன் அடியே ரெபெல் போன்ற திரைப்படங்கள் தொடர் தோல்வி படங்களாக இடம் பெற்றது.
பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, புரூஸ்லி, நாச்சியார், செம, குப்பத்து ராஜா, வாட்ச்மேன், 100% காதல், வணக்கம் டா மாப்பிள்ளை, ஜெயில் போன்ற படங்கள் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.
ஜிவி பிரகாஷ் அமைப்பாளராக இருந்து அதன் பின்னர் நடிகராக அவதாரம் எடுத்தார். இதனிடையே அவர் தனது பள்ளி தோழியான பிரபல பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
2013 ஆம் ஆண்டு இரு விட்டாரின் பெற்றோர்களின் சம்மதத்தின்படி இந்த திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த திருமணத்தில் பல்வேறு திரைத் சேர்ந்த நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொண்டு மன மக்களை வாழ்த்துகின்றனர்.
இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு இவர்களுக்கு அன்வி என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தார். ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் தங்களது கெரியரில் பிஸியாக இருந்து வந்தனர்.
திடீர் விவாகரத்து:
இப்படியான சமயத்தில் தற்போது திடீரென இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக கூறி சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த விஷயம் கோலிவுட்டில் பூதாகரமான விஷயம் ஆகியுள்ளது. இது குறித்த பிரபல பத்திரிக்கையாளரான சபிதா, ஜிவி பிரகாஷ் சைந்தவியின் விவாகரத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து ஒரு ரகசிய உண்மையை போட்டு உடைத்து இருக்கிறார்.
அதாவது கடந்த இரண்டு வருடங்களாகவே இவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்துதே கிடையாது ஒழுங்காக பேசிக்கொள்வது கூட இல்லை.
இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் இருந்தபோது அவர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. ஆனால், ஜிவி எப்போது நடிகராக மாறினாரோ அப்போதே இருவருக்குள்ளும் விரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக நடிகைகளுடன் படுக்கையறை காட்சிகளில் ஜி வி பிரகாஷ் நடித்து வந்தது அவரது மனைவியான சைந்தவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
இது குறித்த இருவருக்குள்ளும் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. அதுமட்டுமில்லாமல் ஜிவி பிரகாஷ் சம்பாதிக்கும் பணம் அத்தனையும் சைந்தவி தனது தாய் வழியாக செலவு செய்து வந்துள்ளார்.
முக்கியமாக தனது தாயின் கண்ட்ரோலில் ஜிவி பிரகாஷ் கொண்டுவர முயற்சித்து இருக்கிறார் சைந்த இது சுத்தமாக அவருக்கு பிடிக்கவே இல்லையாம்.
விவாரத்துக்கு காரணம் மாமியார்:
ஜிவி தமிழ் திராவிட அரசியல் மைண்ட் செட் இருப்பவர் ஆனால் அவரது தாயோ சனாதனத்தை கடைபிடிப்பவர் .
இதனால் தனது மருமகளை சனாதன வழியில் கொண்டு செல்ல அவர் முயற்சித்திருக்கிறார். அதன் முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுவதுதான் அமித்ஷாவை ஜிவி பிரகாஷ் சந்தித்தது.
இந்த சந்திப்பு ஜீவிக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை என்றாலும் கூட மாமியாரின் விடாப்பிடியால் தான் அமித்சாவை சந்தித்தாராம்.
இதெல்லாம் ஜீவிக்கு சுத்தமாக பிடிக்காத காரணத்தால் சுதந்திரமாக வாழ முடிவெடுத்து மனைவி சைந்தவி விவாகரத்து செய்ய முடிவெடுத்தார்.
இவர்களது விவாகரத்து முடிவை கேட்டு விஜய் உள்ளிட்டர் இருவரையும் அமர வைத்து பேசி சமாதானம் செய்தும் கூட விவாகரத்து முடிவை கைவிடவில்லை என பத்திரிக்கையாளர் சபிதா கூறியிருக்கிறார்.