ஜிவி பிரகாஷ் குமார், சைந்தவி விவாகரத்து இப்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஜிவி பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார், சைந்தவி பல வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர்கள். ஒரு நட்சத்திர தம்பதி. ஒரு மகளை பெற்றெடுத்த நிலையில், அவர்கள் விவாகரத்து என்கிற நிலைக்கு வந்திருப்பது தமிழ் சினிமா துறையை அதிர்ச்சி அடைய வைக்கிறது.
குறிப்பாக இரண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர் என்று ஒற்றுமையான தம்பதியாக வாழ்ந்து வந்த இந்த சூழ்நிலையில், இப்படி விவாகரத்து என்ற முடிவுக்கு வந்திருப்பது குறித்து பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
ஏஆர் ரகுமான்
தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளர் ஜி வி பிரகாஷ்குமார், இவர் ஏ ஆர் ரகுமானின் அக்கா ரெஹானா மகன் என்பது அனைவரும் அறிந்தது.
வெயில் படத்தில் அறிமுகம்
ஜிவி பிரகாஷ் இசை என்பது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானது. வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே பெரிய வரவேற்பை பெற்றார்.
தொடர்ந்து கிரீடம், தலைவா, காளை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தார். சூரரைப் போற்று படத்துக்காக, சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருது பெற்றார்.
அவரது பாடல்கள் அனைவரும் ரசிக்கக் கூடியது. இந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப் ஜிவி பிரகாஷின் தீவிர ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகராக மாறினார்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக உயர்ந்த நிலையில் இருந்த போது, ஜிவி சில படங்களில் ஹீரோவாக நடித்தார். டார்லிங், திரிஷா இல்லைனா நயன்தாரா, பென்சில், எனக்கு இன்னொரு பேரு இருக்கு, ஜெயில், சிவப்பு மஞ்சள், பச்சை, குப்பத்து ராஜா, நாச்சியார், டியர் என பல படங்களில் நடித்திருக்கிறார்.
இதில் ஒரு சில படங்கள் தவிர மற்ற படங்கள் பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும், அவர் நடித்த படங்கள் நஷ்டம் அடையவில்லை. அதனால் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடித்த டியர், கள்வன் என்ற இரண்டு படங்கள் வெளியானது. ஆனால் இரண்டு படங்களுமே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
சைந்தவி திருமணம்
தனது பள்ளிக்கால தோழி சைந்தவி காதலித்து திருமணம் செய்து கொண்டர் ஜிவி பிரகாஷ். இந்த தம்பதிக்கு அன்வி என்ற மகள் இருக்கிறார்.
இந்நிலையில் இருவரும் பிரிந்து வாழ்வதாக சில தினங்களாக தகவல் பரவிய நிலையில், நாங்கள் இருவரும் விவாகரத்து செய்வதாக அவர்களே ஓபனாக ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளனர். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்திருக்கிறது.
அதே நேரத்தில் கடந்த 4 ஆண்டுகளாகவே அவர்கள் இருவரும் சுமூகமான வாழ்க்கையில் இல்லை. ஜிவி பிரகாஷ் நடித்த வந்தது சைந்தவிக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இப்போது நடந்திருக்கும் விவாகரத்து பிரச்னை என்பது கடந்த 4 ஆண்டுகளாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
ஜி வி பிரகாஷூக்கு அறிவுரை
இதுகுறித்து அறிந்த ஜிவி பிரகாஷ் தாய்மாமா ஏஆர் ரகுமான், அவரை அழைத்து பேசியும் இருக்கிறார். குடும்பம் வேறு, தொழில் வேறு. உனக்குத்தான் இசையமைக்க நிறைய படங்கள் வருகிறதே, அதில் கவனம் செலுத்து. ஏன் நடிக்க வேண்டும், இதனால் தானே இப்படி பிரச்னை வருகிறது என்று அறிவுரை சொல்லி இருக்கிறார்.
ஆனால் ஜிவி பிரகாஷ் தனது மாமாவின் பேச்சைக் கேட்கவில்லை. ஜிவி பிரகாஷ் நடிக்க வந்ததில் இருந்து, கணவன், மனைவி இருவருக்கும் இடையே சிறுசிறு விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இருவரும் பேசிப் பேசி காம்ப்ரமைஸ் செய்து கொண்ட நிலையில், ஒரு கட்டத்தில் பிரச்சனை பெரிதாகி விட்டது. அதனால் ஜிவி பிரகாஷ் வீட்டுக்கே வருவதில்லை. அடிக்கடி வெளியிலேயே தங்க ஆரம்பித்தார். இதுவும் விரிசலை மேலும் அதிகமாக்கியது என்று பயில்வான் ரங்கநாதன். கூறியிருக்கிறார்.
புத்திமதி சொல்லி கேக்கலை
தாய் மாமா ஏ.ஆர்.ரஹ்மான் புத்திமதி சொல்லியும் கேக்கல. GV பிரகாஷ் தொடர்ந்து நடித்ததால், சைந்தவி விவாகரத்து வரை சென்று விட்டார் என அதிர வைத்திருக்கிறார் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன்.