தற்போது திரையுலகப் பிரபலங்கள் மட்டுமல்லாமல் சாமானிய மக்களிடையும் விவாகரத்து அதிகரித்து வந்துள்ளது. அந்த வகையில் சமந்தா, தனுஷ், ஜீவி பிரகாஷ் போன்ற நட்சத்திர தம்பதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல என்று சொல்லக்கூடிய வகையில் தொடர் விவாகரத்துக்கள் ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் யாருமே எதிர்பார்க்காத நிலையில் திடீரென ஜீவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து விஷயமானது தமிழ் சினிமாவை உலுக்கியுள்ளது என்றால் அது மிகையல்ல. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்த நிலையில் இவர்களது விவாகரத்து சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
சமந்தா, தனுஷ், ஜீவி பிரகாஷ் விவகாரம்..
பள்ளியில் படிக்கும் போதே காதலித்த ஜீவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி தங்களது 11 ஆண்டுகால மண வாழ்க்கையை முறித்துக் கொள்ள இருப்பதாக சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இதற்கு ரசிகர்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.
மேலும் இந்த பிரிவு பற்றி பல முறை யோசித்து ஒருவருக்கு ஒருவர் தங்களது மரியாதையை காத்து மன நிம்மதியோடு வாழவும் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகத்தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக சொல்லி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அத்தோடு தங்களது தனிப்பட்ட உணர்வுகளுக்கு அனைவரும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதை பூடகமாக வேண்டி இருக்கக் கூடிய இந்த தம்பதிகள் ஊடகங்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்களையும் எந்த முடிவுக்கு ஆதரவு தரும் படி வேண்டி இருக்கிறார்கள்.
விவகாரத்தை இணைக்கும் புள்ளி..
இதனை அடுத்து ஹாலிவுட் வட்டாரத்தில் திடீர் என அதிகரித்திருக்கக் கூடிய இது போன்ற விவாகரத்துகளுக்கு முக்கியமான காரணங்கள் என்ன என்பது தற்போது தெளிவாக தெரிய வந்துள்ளது.
இதில் முதலாவதாக கோலிவுட் உலகில் ஓபன் ரிலேஷன்ஷிப் தற்போது ட்ரெண்டிங் ஆகி விட்ட நிலையில் இதில் இணையர்களில் ஒருவருக்கு ஓப்பன் ரிலேஷன்ஷிப் விருப்பம் இல்லாத பட்சத்தில் அவர்கள் பிரிய கூடிய நிலை ஏற்படுகிறது.
மேலும் சினிமாவில் கவனத்தை செலுத்தி வரக்கூடிய நபர்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்ட பின் திரைத்துறையில் வளர்ந்து வரும் போது அவர்களது திருமண வாழ்க்கையில் கசப்பு ஏற்படுகிறது.
சினிமாவில் ஏற்படக்கூடிய கிசுகிசுக்களை இயல்பாக எடுத்துக் கொள்வதின் மூலம் தம்பதிகளுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டு பிரிவு ஏற்பட வலு வான காரணமாக அமைகிறது.
அது மட்டுமல்லாமல் தற்போது கோலிவுட் நடிகர், நடிகைகள் திருமண வாழ்க்கையைத் தாண்டி கூடுதல் உறவை வைத்துக் கொள்ள விரும்புவதின் காரணத்தால் திருமண பந்தங்கள் முறிய இதுவும் முக்கிய காரணமாக மாறிவிட்டது.
அட இவ்வளவு விஷயம் இருக்கா?
மேற்கூறிய காரணங்களை உங்கள் மனதில் வைத்து தொடர்ந்து படிக்கும் போது அது பற்றிய அர்த்தம் எளிதாக உங்களுக்கு விளங்கும்.
அத்தோடு ஜீவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டு உள்ளது. அது போல தனுஷ் ஐஸ்வர்யா, சமந்தா நாக சைதன்யா, ஷீலா ராஜ்குமார், விஷ்ணு விஷால் உள்பட பலர் விவாகரத்து செய்து கொண்டனர்.
இன்னும் சில விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் வர உள்ளது. இந்த விஷயம் தற்போது இணையத்தில் பரவலாக பரவி நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.