பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்ற விஷயத்தை பகிரங்கமாக தெரிவித்ததை அடுத்து பல்வேறு விதமான விஷயங்கள் இணையத்தில் காட்டு தீயாய் பரவியது.
இந்நிலையில் சுச்சி லீக்ஸ் சென்ற பெயரில் பல திரை உலக பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளி வந்து தனது பெயரை தனது கணவரும் அவரது சகாக்கள் தனுஷ் மற்றும் பலரும் தன்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள் என ஓப்பனாக கூறிய விஷயம் இணையத்தில் வைரலானது.
கார்த்திக் குமார் ஓரின சேர்க்கையாளரா?
ஸ்டாண்டு டப் காமெடியன் மற்றும் நடிகருமான கார்த்திக் குமாரின் முன்னாள் மனைவி சுசித்ரா youtube சேனல் ஒன்றில் பேசினார்.
இதனை அடுத்து பரபரப்பு ஏற்பட்ட நிலை அடங்குவதற்குள் கார்த்திக் குமார் பட்டியல் இன சமூக மக்களை அவதூறாக பேசியதாக வெளி வந்த ஆடியோவினை அடுத்து கண்டனங்களுக்கு உள்ளானார்.
மேலும் கார்த்திக் குமார் சினிமாவை விட்டு விலகி ஸ்டாண்ட் அப் காமெடியனாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்ற வேளையில் அந்த நிகழ்ச்சிகளில் கூட இழிவான காமெடிகளை காமெடி என்ற பெயரில் பேசி வருவதாக பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் வந்துள்ளது.
இதனை அடுத்து இணையதள வாசிகள் அனைவரும் கார்த்திக் குமார் அப்படி செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற ரீதியில் பேசி வருவதோடு யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ் கார்த்திக் குமார் நடித்த சமயத்தில் இருவரும் தனி அறையில் என்னென்ன செய்தார்கள் என்பது பற்றி சுசித்ரா பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கணவனுக்கு வக்காலத்து வாங்கும் இரண்டாம் தாரம்..
இதனை அடுத்து பாடகி சுசித்ராவிற்கு பதிலடி தரக்கூடிய வகையில் கார்த்திக் குமாரின் இரண்டாவது மனைவி அம்ருதா ஸ்ரீனிவாசன் instagram பக்கத்தில் தற்போது போஸ்ட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வகையில் 2017-ஆம் ஆண்டு சுச்சி லீக்ஸ் விவகாரம் விஸ்வரூபமாக வெடித்த சமயத்தில் தன் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தவர் பாடகி சுசித்ரா.
இந்நிலையில் தற்போது சினி துறையில் பலரையும் இழந்து தனி மரமாக இருப்பதாகவும் இதனை அடுத்து விஜய் மற்றும் அஜித் கூட தன் நட்பு வட்டத்தில் இல்லை என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.
விவாகரத்து பெற்றதை அடுத்து கார்த்திக் குமார் 2021-ஆம் ஆண்டு அம்ருதா ஸ்ரீனிவாசன் எனும் நடிகையை திருமணம் செய்து கொண்டார். இந்த நடிகை 16 வயது இளம்பெண் என்பதால் அன்று இணையங்களில் இந்த திருமணம் குறித்து அதிகளவு பேசப்பட்டது.
அம்ருதா ஸ்ரீனிவாசனின் அதிர்ச்சி பதில்..
தமிழ் சினிமாவில் இரண்டு 2014 ஆம் ஆண்டு குறை ஒன்றும் இல்லை என்ற படத்தின் மூலம் அறிமுகமான அம்ருதா ஸ்ரீனிவாசன் அவியல், மேயாத மான், பொன் ஒன்று கண்டேன் போன்ற படங்களில் நடித்தவர்.
தற்போது சுசித்ரா விவகாரம் பேசும் பொருளான நிலையில் தனது கணவர் கார்த்திக் குமாருக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச வார்த்தைகளுடன் போஸ்ட் ஒன்றை போட்டு அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளிவிட்டார்.
அதில் வாழ்க்கை என்பது சிறிது இதில் தேவையில்லாமல் விவாதம் செய்யாமல் டேஷா போச்சுன்னு நகர்ந்து வந்திடு கார்த்திக் குமார் என கேப்சன் கொடுத்துள்ளார் கார்த்திக் குமாரின் இரண்டாவது மனைவி.