ஐந்து தலைமுறை நடிப்பு, மிகச் சிறந்த காமெடி நடிகை என 1500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து காலத்தால் அழியாத காமெடி நடிகையாக பார்க்கப்படுவர் தான் ஆச்சி மனோரமா.
மிகச் சிறந்த திறமை வாய்ந்த காமெடி நடிகையாக தமிழ் சினிமாவின் பொக்கிஷமான நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் ஆட்சி மனோரமா.
மன்னார்குடியில் பிறந்தவரான இவர் ஆரம்பத்தில் நாடகங்களில் நடிக்க தொடங்கினார்.இவர் பெண் பிள்ளையாக பிறந்து விட்டதால் அவரது தாய் மற்றும் தந்தையின் வெறுப்புக்கு ஆளாகி வீட்டை விட்டு வெளியேறினார்.
ஆச்சி மனோரமா:
அதன் பிறகு தனியாக வந்து வீடு எடுத்து தங்கி அங்கே படித்து வந்த மனோரமாவுக்கு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது .
அதன் மூலமாக ஒரு சில நாடகங்களில் நடிக்க தொடங்கினார். பாடல் பாடிக்கொண்டே மனோரமா நாடகங்களில் நடித்ததால் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டார்.
அப்போது மனோரமாவுக்கு இருந்த திறமை போல் யாருக்கும் இல்லை என அவர் பெருமைக்குரியவராக பேசப்பட்டு வந்தார்.
இதனிடையே குடும்ப வறுமையின் காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் பெரிய வீட்டில் குழந்தை ஒன்றின் பாதுகாப்பாளராக மனோரமா பணியாற்றி வந்தார்.
அப்போதுதான் அவருக்கு நாடகங்களில் இருந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடர்ந்து அதில் நடித்து வருமானத்தை ஈட்டி வந்தார்.
வீட்டை விட்டு வெளியேறி நாடகங்களில்….
ஒரு கட்டத்தில் சுற்றதாரர் அனைவருக்கும் மனோரமாவின் நடிப்பும் அவரது பாடலும் மிகவும் பிடித்து போக தொடர்ந்து அடுத்தடுத்த நாடகம் வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது.
இப்படித்தான் ஒருமுறை நடிகர் முத்துராமன் உள்ளிட்ட மனோரமாவுக்கு தெரிந்தவர்கள் இருக்கும் நாடக குழுவில் நடிக்க வாய்ப்பு கிடைக்க அதற்காக அவர் ரயிலில் புறப்பட்டு சென்றார்.
அந்த நாடகத்தில் கிட்டத்தட்ட 100 பக்கங்கள் கொண்ட வசனத்தை பேசிக்கொண்டே பாடல் பாடிக்கொண்டே நடிக்க வேண்டும் என மனோரமாவுக்கு முன்னதாகவே கூறப்பட்டிருந்தது.
அதன்படி ரயில் பயணத்திலே நூறு பக்க வசனத்தை மனப்பாடம் செய்து கொண்டே சென்ற மனோரமா அடுத்த நாள் நாடகத்தில் தனது அசத்தலான நடிப்பையும் அத்தனை வசனங்களையும் ஒன்று விடாமல் பேசி நடித்து காட்டி அசர வைத்தார்.
அதனால் அவருக்கு பலதரப்பட்ட பாராட்டுக்கள் கிடைக்க தொடர்ந்து நாடகத்தில் இருந்து வாய்ப்புகள் மனோரமாவுக்கு குவியத் தொடங்கியது.
ரகசிய திருமணம், கர்ப்பம்:
அடுத்தடுத்த நாடகத்தில் நடித்து தொடர்ந்து பிரபலமான நாடக நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை மனோரமாவை எஸ் எம் ராமநாதன் என்ற நாடக குழு முதலாளி காதலிக்க தொடங்கினார்.
மனோரமாவும் அவரின் காதலை நம்பி ஏற்றுக்கொண்டு தனது அம்மாவுக்கு கூட தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின்னர் 9 மாதம் கர்ப்பமாக இருந்த மனோரமா தனது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக வந்திருந்தார்.
அவர் தாய் வீட்டுக்கு வந்ததும் அவரது கணவர் எஸ் எம் ராமநாதன் அவரை பார்க்க வரவே இல்லையாம்.
சரி குழந்தை பிறந்தால் கணவர் வந்துவிடுவார் என மனதை தேற்றிக் கொண்டிருந்த மனோரமாவுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது .
குழந்தை பிறந்து கிட்டத்தட்ட 15 நாட்களுக்குப் பிறகு வந்துள்ளார் அவரது கணவர். தன்னையும் தன் குழந்தையும் பார்க்க வந்திருக்கிறார் என்ற ஆசையில் இருந்த மனோரமாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம் மீண்டும் நாடகத்தில் நடிக்க வேண்டும் அவசரமாக கிளம்பி என்னுடன் வா என கூறி இருக்கிறார் அவரது கணவர்.
அந்த ஆசைக்காக திருமணம் செய்த கணவர்:
அதிர்ச்சியடைந்த மனோரமா, எனக்கு குழந்தை பிறந்து 15 நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் நடிக்க கூப்பிடுவது சரியில்லை. எனது நிலைமை புரிந்து கொள்ளுங்கள் என கணவரிடம் வாக்குவாதம் செய்ய கோபத்தோடு அங்கிருந்து கிளம்பி சென்றிருக்கிறார் எஸ் எம் ராமநாதன்.
கோபம் தணிந்து சில நாட்கள் கழித்து வந்திடுவார் என நினைத்திருந்த மனோரமாவுக்கு பேரதிர்ச்சி கிடைத்திருக்கிறது .
ஆம், அதாவது விவாகரத்து கடிதம் எழுதி அனுப்பி இருக்கிறார் அவரது கணவர். இதைப் பார்த்து அதிர்ந்து போன மனோரமா தனது கணவர் தன்னை உண்மையிலே காதலிக்கவில்லை.
நாடகங்களில் அடிப்பதற்காக தன்னை காதலிப்பது போல் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதை அவர் புரிந்து கொண்டார்.
கணவரால் ஏமாற்றப்பட்ட மனோரமா:
அதன் பிறகு மனோரமா யாரையுமே திருமணம் செய்யாமல் கடைசிவரை தனது மகனுக்காகவே வாழ்ந்து மரணித்தார் என பிரபல பத்திரிகையாளர் சித்ரா லக்ஷ்மணன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
திரைப்படங்களில் பல கோடி ரசிகர்களை சிரிக்க வைத்து மகிழ வைத்தும் வந்த மனோரமாவின் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய துன்பங்களா?
இவ்வளவு துயரங்களை தாண்டி அவர் திரைப்படங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை மனம் மனம் மகிழ வைத்து வந்தாரா என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் இந்த விஷயத்தை பகிர்ந்து வருகிறார்கள்.