மும்பையில் பிறந்து வளர்ந்து மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பத்தவர் தான் நடிகை பூஜா ஹெக்டே.
இவர் முதன் முதலில் கடந்த 2010 ஆம் ஆண்டில் மிஸ் யூனிவெர்ஸ் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.
அதன் மூலமாக இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. நல்ல அழகான தோற்றம் உயரம் கவர்ச்சியான அழகு ஒன்லி பெல்லி உடல் அமைப்பு இவை அனைத்தும் கொண்டு ஹீரோயினுக்கு ஏற்ற தகுதியான பெண்ணாக திரைத்துறையில் நுழைந்தார்.
மாடல் அழகியாக பூஜா ஹெக்டே:
மும்பையை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் அவர் முதன் முதலில் அறிமுகமானது என்னவோ தமிழ் திரைப்படத்தில் தான்.
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களுள் விசித்திரமான இயக்குனர்களில் ஒருவரான மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த ஜீவாவின் முகமூடி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து திரையுலகருக்கு ஹீரோயின் ஆக அறிமுகமானார் பூஜா ஹெக்டே.
முதல் படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் பேசப்படவில்லை. அந்த படம் அவரை அடையாளப்படுத்தவும் இல்லை. இதனால் அவருக்கு தொடர்ந்து தமிழிலிருந்து வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
அதன் பிறகு தெலுங்கு பக்கம் கவனத்தை செலுத்த ஆரம்பித்த பூஜா ஹெக்டே அங்கு தொட்டதெல்லாம் ஹிட் என அங்கு பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்தார்.
தெலுங்கில் தொடர் வெற்றிகள்:
அல்லு அர்ஜுன் போன்ற பிரபல நட்சத்திர இளம் ஹீரோக்களோடு ஜோடி போட்டு நடித்து பெரும் புகழ் பெற்ற நடிகையாக தெலுங்கில் அவரது நடனம் நடிப்பு உள்ளிட்டவை வெகுவாக ரசிகர்களை வெகுவாக அங்குள்ள ரசிகர்களை கவர்ந்தது.
வெகு சீக்கிரத்திலேயே அந்த மக்கள் அனைவருக்கும் ஃபேவரைட் ஹீரோயினாக பூஜை இடத்தைப் பிடித்தார்.
இதனால் தெலுங்கு சினிமாவில் அவருக்கு அடுத்தடுத்த வெற்றி படங்களின் வாய்ப்புகள் கிடைக்க அங்கு அதிகம் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக இடத்தை பிடித்தார்.
இதனிடை அவ்வப்போது பாலிவுட்டில் கிடைக்கும் படங்களில் நடித்து வந்தார். ஆனால் அதெல்லாம் பெரிதாக சொல்லும் படி அவருக்கு அமையவே இல்லை.
தெலுங்கு சினிமா மட்டுமே அவருக்கு பட வாய்ப்பு கொடுத்து வாழ்க்கை கொடுத்தது. தெலுங்கில் மாபெரும் ஹிட் அடித்த படங்களில் நடித்து தொடர்ச்சியாக அங்கு நட்சத்திர நடிகையாக பலம் வந்தார்.
மீண்டும் தமிழில் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. அதன்படி விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானது. பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் ஹீரோயின் ஆக நடித்தார்.
குட்டை ஆடையில் கும்முனு போஸ்:
ஆனால், அந்த படமும் பூஜா ஹெக்டேவுக்கு பெரும் தோல்வியை தான் கொடுத்தது. மிகப்பெரிய அளவில் பேசப்படவில்லை .
இதனால் அவருக்கு தமிழ் சினிமா ராசி கிடையாது என்றெல்லாம் செய்திகள் வெளியானது. தொடர்ந்து அவர் தற்போது தெலுங்கு சினிமாக்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
இதனுடைய சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை பூஜா ஹெக்டே தற்போது குட்டையான உடைகளை அணிந்து செம ஹாட்டாக போஸ் கொடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் திக்கு முக்காடு செய்துள்ளார்.
அவரின் இந்த கவர்ச்சி அழகை எக்குத்தப்பாக ரசித்த ரசிகர்கள் கமெண்ட் செய்து அவரின் அழகில் சொக்கிப் போய் கிடக்கிறார்கள்.