சிவகார்த்திகேயன் வரிசையில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமான கவின் அதன் பின்னர் சீரியல் நடிகராக சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானார்.
அதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது மெல்ல மெல்ல சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த கவின் தொடர்ச்சியாக சீர்களில் நடித்த வந்தார்.
சீரியல் நடிகராக கவின்:
குறிப்பாக கனா காணும் காலங்கள் தொடரில் சிவா என்ற கேரக்டரில் கவின் நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப் பட்டார் .
தொடர்ந்து தாயுமானவன், சரவணன் மீனாட்சி ,வேட்டையாடு விளையாடு, உள்ளிட்ட சில தொடர்களில் இவர் நடித்திருக்கிறார்.
பின்னர் சீரியல் நடிகராகவே தனது வாழ்க்கையை கடத்தி விடக்கூடாது என எண்ணி திரைப்பட வாய்ப்பையும் முயற்சித்து கொஞ்சம் கொஞ்சமாக பெற ஆரம்பித்தார்.
பீட்சா திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து கவின் நடிகராக அறிமுகமானார். பின்னர் இன்று நேற்று நாளை திரைப்படத்திலும் வாய்ப்பு கிடைக்க அதிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் .
2017 வெளிவந்த சத்ரியன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து நடிகராக முத்திரை பதித்தார்.
ஹீரோவாக அறிமுகம்:
இதனிடையே 2019 ஆம் ஆண்டு ஹீரோவாக களமிறங்கி கவின் நட்புன்னா என்னன்னு தெரியுமா திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகையான ரம்யா நம்பீசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுக படமாக அமைந்தது. அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
அதனை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட கவின் அதன் மூலம் பிரபலமாகி திரைப்பட வாய்ப்பை பெற ஆரம்பித்தார் .
குறிப்பாக கதை தேர்வில் அதிகம் கவனம் செலுத்தினார் என்று சொல்லலாம். பிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு கவினுக்கு திரைப்பட வாய்ப்புகள் மளமளவென கிடைத்தாலும் அவர் தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடித்து அதிக கவனத்தை செலுத்தி வந்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு டாடா திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றியை பதித்தார் கவின். அந்த திரைப்படம் அவரின் நடிப்பை எடுத்து கூறியது என்று சொல்லலாம்.
இத்திரைப்படத்தில் கல்லூரி மாணவனாக, சிறந்த கணவனாக , மிகச் சிறந்த அப்பாவாக இப்படி பல விஷயத்தில் தனது நடிப்பை மெருகேற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
வெற்றிவாகை சூட்டிய “டாடா” திரைப்படம்:
அந்த படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கவினின் மார்க்கெட் உயர்ந்து விட்டது. இதனால் அவர் தனது சம்பளத்தையும் டபுள் மடங்காக உயர்த்தி கொண்டார்.
டாடா படத்தின் வெற்றியை அடுத்து கவின் ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் அண்மையில் வெளியாகி திரையரங்கில் சக்கை போடு போட்டது.
அப்படத்தின் வெற்றிக்கு பிறகு கவிஞனுக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
இப்போது கவினின் கைவசம் கிஸ், மாஸ்க் ஆகிய திரைப்படங்கள் உள்ளன. இந்த நிலையில் விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் கதாநாயகனாக கமிட்டாகி புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.
நயன்தாராவுக்கு ஜோடியாகும் கவின்:
இந்த படத்தில் கவின் உடன் இணைந்து அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட வருகிறது.
இப்படத்தை கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறுகிறார்கள்.
குறுகிய காலத்திலேயே கவின் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
மேலும் கவின் நயன்தாராவின் ஜோடியை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.