90ஸ் காலகட்டங்களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர்தான் நடிகை சுகன்யா. இவர் தமிழ். மலையாளம். கன்னடம். தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து ஒரு காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.
நடிகை சுகன்யா:
ஆர்த்தி தேவி எனும் இயற்பெயரை கொண்ட இவர் சினிமாவுக்காக தனது பெயரை சுகன்யா என மாற்றிக்கொண்டார்.
முதன் முதலில் இவர் நடித்து வெளிவந்த திரைப்படம் புது நெல்லு புது நாத்து. நெப்போலியன் நடிப்பில் வெளிவந்த இப்படத்தை பாரதிராஜா இயக்கி இருந்தார்.
இந்த படத்திற்காக தான் பாரதிராஜா சுகன்யா என இவரின் பெயரை மாற்றம் செய்து திரையுலையில் அறிமுகம் செய்து வைத்தார்.
பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கும் சுகன்யா தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் இதுவரை சுமார் 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
திரைத்துறையில் நடிகை ஆவதற்கு முன்னர் சுகன்யா பொதிகை தொலைக்காட்சியில் பெப்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதன் மூலம் பேமஸ் ஆகி தான் நடிகையானார்.
“பெப்சி” சுகன்யா:
சுகன்யா நடிக்க வந்ததும் அந்த நிகழ்ச்சியை தொகு வழங்கியவர் தான் உமா. உமா சுகன்யாவை விட படு பேமஸ் ஆகிவிட்டார். இன்று வரை பெப்சி உமா என்றால் அவருக்காக தானே ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
அதற்கு வழி விட்டவர் சுகன்யா தான் என்று சொல்லலாம். தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து பின்னர் நடிகையான சுகன்யா புது நெல்லு புது நாத்து படத்தை தொடர்ந்து சின்ன கவுண்டர், திருமதி பழனிசாமி, செந்தமிழ் பாட்டு, உறுதிமொழி, சின்ன மாப்பிள்ளை, சின்ன ஜமீன் ,வால்டர், வெற்றிவேல், உடன்பிறப்பு, மகாநதி, கேப்டன் ,டூயட் ,இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக சின்ன கவுண்டர் திரைப்படத்தில் சுகன்யாவின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அது இன்று வரை பலரது ஃபேவரட் ஆகவும் இருந்து வருகிறது.
அத்துடன் இந்தியன் திரைப்படத்தில் கமல்ஹாசனின் அம்மாவாக வித்யாசமான கேரக்டரில் நடித்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
தற்போது சுகன்யா நடித்த அந்த ரோலில் தான் பிரியா பவானி சங்கர் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பில் தக்கது.
தொடர்ந்து இப்படி கமல்ஹாசன் விஜயகாந்த் பிரபு கார்த்திக் நடித்த பல சூப்பர் ஹிட் ஹீரோக்களோட நடித்து புகழ்பெற்ற நடிகையாக இருந்தார் சுகன்யா .
ஓராண்டிலே விவாகரத்து:
இதுவரை மொத்தம் ஐந்து விருதுகளை பெற்று சிறந்த நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். அவரது சொந்த வாழ்க்கை என எடுத்துக்கொண்டோமானால் கடந்த இரண்டாம் ஆண்டு ஸ்ரீதர ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் ஓராண்டிலேயே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2003 ஆம் ஆண்டு. சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.
அதன் பின்னர் சுகன்யா யாரையும் திருமணம் செய்யவில்லை. இவர்களுக்கு குழந்தையும் இல்லை. இப்படியான சமயத்தில் சுகன்யாவின் மகள் இவர்தான் எனக் கூறி ஒரு புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள சுகன்யா இது என்னுடைய குழந்தையே கிடையாது. அதை நான் தெளிவாக அந்த புகைப்படத்தை வெளியிடும்போது டுவிட்டரிலேயே விளக்கி இருக்கிறேன்.
என் மகளே இல்லை:
ஆனால், சுகன்யாவை பற்றி ஏதாவது பொய் கிளப்பி விட வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பி விடுகிறார்கள்.
இந்த கேள்விப்பட்ட என்னுடைய தங்கையின் மகளே சித்தியால் நானும் இப்பொது மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டேன் என ஜாலியாக கூறினால்.
நான் என்னுடைய கணவரை திருமணம் செய்த ஓராண்டிலேயே விவாகரத்து செய்து பிரிந்து விட்டேன். இது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். அப்படி இருக்கும்போது எனக்கு எப்படி மகள் என அவர் கேள்வியும் கேட்டு இருக்கிறார்.