நாட்டாமை படத்தின் மிக்சர் மாமா யாருன்னு தெரியுமா…? கே.எஸ்.ரவிக்குமார் ஓப்பன் டாக்..!

90ஸ் காலகட்டங்களில் கே எஸ் ரவிக்குமாரின் திரைப்படங்கள் என்றாலே தனி மவுஸ் இருக்கும். அவரது திரைப்படங்கள் வித்தியாசமாகவும் நகைச்சுவை கலந்தும் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமையும்.

அந்த வகையில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளியின திரைப்படம் தான் ‘நாட்டாமை’ இத்திரைப்படத்தில் சரத்குமார் ஹீரோவாக இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார்.

மேலும், குஷ்பூ , மீனா , மனோரமா, கவுண்டமணி ,செந்தில், வைஷ்ணவி, பொன்னம்பலம்,ராணி ஆகிய பலர் முக்கிய வேடங்களில் நடித்திருப்பார்கள்.

நாட்டாமை திரைப்படம்:

ஊரின் நாட்டாமையாக சரத்குமார் அனைவருக்கும் நீதி வழங்கும் தலைவனாக இருந்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.

இந்த படம் அவருக்கு ஒரு நல்ல பெயரையும் புகழும் ஏற்படுத்திக் கொடுத்தது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் ‘மிச்சர் ” மாமா கேரக்டர் குறித்து பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

மேலும் அந்த கேரக்டர் உருவான விதத்தையும் பற்றியும் அவர் யார் என்பது பற்றியும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார் கே எஸ் ரவிக்குமார்.

நாட்டாமை திரைப்படத்தில் காமெடி நடிகர்களாக செந்தில் மற்றும் கவுண்டமணி நடித்திருப்பார்கள். இதில் கவுண்டமணியின் அப்பாவாக செந்தில் நடித்திருப்பார் .

செந்தில் கவுண்டமணி காமெடி:

செந்தில் தன்னுடைய மகன் கவுண்டமணிக்கு பெண் பார்க்க செல்லும்போது அந்தப் பெண்ணின் அம்மா செந்தில் முன்னாள் காதலி என்றும் செந்திலுக்கு பிறந்தவர் தான் அந்த மணப்பெண் என்பதும் தெரியவரும்.

அப்படி வைத்துப் பார்க்கும்போது கவுண்டமணிக்கு மணப்பெண் தங்கை முறையாகிறது. இது அங்கு சென்ற பிறகுதான் அங்குள்ள எல்லோருக்குமே தெரிய வரும். அங்கு இதனால் மிகப்பெரிய பிரச்சனையே வெடிக்கும்.

இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்து கொண்டிருக்கும்போது கூட்டத்தில் ஒரு நபர் தனியாக உட்கார்ந்து மிச்சம் சாப்பிட்டுக் கொண்டிருப்பார் .

அப்போது அதை நோட்டமிட்ட கவுண்டமணி இவ்வளவு அமர்க்களம் நடக்கும்போது யார் இவன் ஒண்ணுமே நடக்காது போல மிச்சர் சாப்பிட்டுட்டு இருக்கான் ? என கேட்க,

எனக்கே உடனே அந்த மணப்பெண்ணின் அம்மா இவர்தான் உங்க அப்பா விட்டுட்டு போனப்போ என் பிள்ளைக்கு இனிஷியல் பிரச்சனை வரக்கூடாதுன்னு 20 வருஷமா இந்த ஆளுக்கு நான் சோறு போட்டு பார்த்து கிட்டு இருக்கேன் அப்படின்னு சொல்லுவாங்க.

மிச்சர் மாமா கேரக்டர் உருவான விதம்:

அவங்க அப்படி சொல்லும் போது கூட அதை கண்டுக்காம மிச்சர் சாப்பிட்டுட்டு இருப்பார் அந்த மிச்சர் மாமா.

படம் வெளியான சமயத்தில் அந்த காமெடி காட்சி எல்லோராலும் மிகப்பெரிய அளவில் கவரப்பட்டது. இது இன்று வரை மீம்ஸ் கிரியேட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

இந்த நபர் யார் என்பது குறித்து பேசி இருக்கும் கே எஸ் ரவிக்குமார். அந்த மிக்சர் மாமா ஷூட்டிங் ஸ்பாட்டில் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்தார்.

லைட் முன்னாடி உட்கார்ந்து கிட்டு ஐந்தாவது லைட் சுவிட்ச் போடு என்றால் போடுவார், ஏழாவது லைட்டு ஸ்விட்ச் போடு என்றால் போடுவார். அதைத்தவிர வேறு எந்த வேலையும் செய்ய மாட்டார்.

உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டிருப்பார். இதை பார்த்து நான் அவரை திட்டினேன். இப்படியே உக்காந்துட்டு இருக்கியே கொஞ்சம் எழுந்து போய் அந்த லைட்டை மாற்றி வைக்கலாமே?

மிக்சர் மாமா யாருன்னு தெரியுமா?

வேற ஏதாவது வேலை செய்யலாம்ல? என கேட்டதற்கு…. அதெல்லாம் நான் பண்ண மாட்டேன் சார் நான் எலக்ட்ரீசியன் எலக்ட்ரீஷனுக்கான வேலையை மட்டும் தான் செய்வேன் அப்படின்னு சொன்னாரு.

அவருக்கு பதில் மறுத்துப் பேச முடியாமல் மனதிலே வைத்துக் கொண்டேன். பின்னர் உனக்காக ஒரு காட்சி வச்சிருக்கேன் நீ போயிட்டு டிரஸ் மாத்திட்டு வா என்று சொன்னதும் அவர் வந்தார்.

உடனே அவருடைய கையில் மிச்சர் தட்டு ஒன்றை கொடுத்து நான் டேக் என சொல்லும் போது இந்த மிச்சரை வாயில் போட்டு அங்கும் இங்குமாக வாய் அசைத்துக் கொண்டே இரு.

அது மட்டும் போதும் என்று சொன்னேன். நான் சொன்னபடியே அவர் சிறப்பாக செய்தார். படமும் வெளியாகி அவரது காட்சி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இன்று வரை அது மீம்ஸ் கிரேட்டர்களின் டெம்ப்ளேட் ஆக பயன்படுத்தப்பட்டு வருகிறது. படம் வெளியான சமயத்தில் அவர் தாம்பூல தட்டோடு வந்து என்னை பார்த்தார்.

இப்படித்தான் இந்த கேரக்டர் உருவானது என கே எஸ் ரவிக்குமார் மிகவும் ஸ்வாரஸ்யமான விஷயத்தை காமெடியாக கூறினார். இந்த பேட்டி தற்போதைய இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam