பொங்கல் ரிலீஸ் ஆக வெளி வந்த வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜயின் அம்மாவாக நடித்த நடிகை ஜெயசுதா பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
தமிழ்நாட்டில் பிறந்த இவர் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்த இவருடைய அத்தை ஒரு நடிகையாக விளங்குகிறார்.
மேலும் இவர் ஆந்திர பிரதேசத்தில் உள்ள சிக்கந்தராபாத் தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை திகழ்ந்தவர்.
நடிகை ஜெயசுதா..
நடிகை ஜெயசுதா தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து சமீபத்தில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளி வந்த வாரிசு திரைப்படத்தில் விஜயின் அம்மாவாக நடித்தார்.
குணசித்திர வேடத்தில் அதிகளவு நடித்து இருக்கக்கூடிய ஜெயசுதா அண்மை காலமாக இளம் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.
ஏற்கனவே பல திரைப்படங்களில் இவர் ஹீரோயினியாக நடித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இந்த சூழ்நிலையில் இப்போது இளம் ஹீரோகளுக்கு அம்மாவாகவும், அக்காவாகவும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.
மேலும் நடிகை ஜெயசுதா இரண்டு முறை திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவருடைய இரண்டாவது கணவர் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து இந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி பலர் மத்தியிலும் பல்வேறு வகையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
அவன் ஒரினச்சேர்க்கையாளன்..
இந்நிலையில் பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானை இவருக்கு மிகவும் பிடித்திருந்ததாம். அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருந்ததார். ஆனால் அது நடக்காது என்று தெரிந்த போது அந்த ஆசையை அவர் விட்டுவிட்டார்.
அத்தோடு தெலுங்கு நடிகர் ஒருவர் மீது இவருக்கு இனம் தெரியாத ஈர்ப்பு இருந்ததாக சொல்லி இருக்கக்கூடிய அவர் பிரபல டாக்டரை காதலித்த விஷயத்தையும் பக்குவமாக அந்த பேட்டியில் வெளிப்படுத்தினார்.
தெரியாம காதலிச்சிட்டேன்..
அது போல பிரபல பாடகர் ஒருவரையும் இவர் காதலித்திருக்கிறார். அதன் பின் தான் தெரிந்தது அந்த பாடகர் ஓரினச்சேர்க்கையாளர் என்று அதன் பிறகு அவரையும் வேண்டாம் என்று பிரிந்து விட்டார்.
இப்படி அவர் தன் வாழ்க்கையில் நடந்த காதல் அனுபவங்களை பற்றி சுவாரசியமாக பேசி இருப்பதோடு மட்டுமல்லாமல் தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பதாகவும் அதனை அடுத்து காங்கிரஸை விட்டு விலகி பாஜகவில் இணைய இருப்பதாகவும் சில செய்திகள் வெளி வந்துள்ளது.
இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது.
இதற்கு காரணம் திரைப்படங்களில் வருவது போல பலரையும் காதலித்த நடிகை ஜெயசுதா வாழ்க்கையில் செட்டிலாகாமல் பட்ட கஷ்டங்களை பற்றி அவர்கள் நண்பர்களோடு இணைந்து பேசி வருகிறார்கள்.
அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக தற்போது பரவி வருவதை அடுத்து இந்த விஷயத்தை நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.