2007 ஆம் ஆண்டு வந்த கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த அஞ்சலிக்கு தெலுங்கை விடவும் தமிழ் சினிமாவில்தான் அதிக வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைத்தன.
கற்றது தமிழ் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் அதில் அவர் நடித்த ஆனந்தி என்கிற கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது அதனை தொடர்ந்து அங்காடி தெரு, ரெட்டை சுளி, தூங்காநகரம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமாவில் கிடைத்த வெற்றி:
ஆனால் 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் அவர் நடித்த திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியது. அதற்கு பிறகு அவர் நடித்த எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
தற்சமயம் கூட தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி. இந்த நிலையில் இவர் தெலுங்கில் நடித்துள்ள கேம்ஸ் ஆப் கோதாவரி என்கிற திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படம் குறித்து பேட்டி ஒன்றில் அவர் பேசும்பொழுது அதிக கஷ்டப்பட்டு நடித்த படம் வெளியாகும் பொழுது எப்பொழுதுமே ஒரு சந்தோஷம் இருக்கும்.
நடித்து வரும் படங்கள்:
அதே திரைப்படம் வெற்றி பெற்றுவிட்டால் அந்த சந்தோசம் பல மடங்கு அதிகமாகிவிடும். கேங்க்ஸ் ஆப் கோதாவரி திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன்.
அந்த திரைப்படமும் சீக்கிரத்தில் வெளியாகும். அதனை தொடர்ந்து ராம் இயக்கத்தில் நிவின் பாலியுடன் நடித்திருக்கும் ஏழு கடல் ஏழுமலை படமும் ஜூலை மாதத்தில் வெளியாக இருக்கிறது. சினிமாவை மொழியால் பிரித்துப் பார்க்கும் பழக்கம் எனக்கு கிடையாது.
திருமண நிலை:
எனவே அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறேன் என கூறுகிறார் அஞ்சலி. அப்பொழுது அவரிடம் திருமணம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்ட பொழுது ஏற்கனவே இணையத்தில் எனக்கு மூன்று நான்கு திருமணங்களை செய்து வைத்துவிட்டனர். முதலில் இதுபோன்ற திருமண வதந்திகள் இணையத்தில் வலம் வரும் பொழுது எனது குடும்பத்தினர் கொஞ்சம் அதை கண்டு பயந்தனர்.
ஆனால் போக போக அவர்களுக்கு இது எல்லாம் பழகி விட்டது. இப்பொழுது நானே ஒரு பையனை அழைத்துச் சென்று அவரை காதலிக்கிறேன் என்று கூறினால் கூட எனது வீட்டில் நம்ப மாட்டார்கள். எனக்கு இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டி இருக்கிறது அதனால் இன்னும் தாமதமாகதான் திருமணம் செய்வேன் என்று கூறி இருக்கிறார் நடிகை அஞ்சலி.