50 கோடியில் துபாயில் பங்களா..? சர்ச்சைக்கு நடுவே போலீசில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்..!

2016 ஆம் ஆண்டு அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடித்த ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை நிவேதா பெத்துராஜ். அந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் நிறைய படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் போன்ற திரைப்படங்களில் வரிசையாக நடித்து வந்தார் நிவேதா பெத்துராஜ். இப்போது வரை தமிழ் சினிமாவில் ஓரளவு வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

பேசப்படும் நாயகி:

 

முதல் திரைப்படம் வெளியான பொழுதே நிவேதா பெத்துராஜ் கொஞ்சம் பேசப்படும் ஒரு கதாநாயகியாகதான் இருந்தார். இத்தனைக்கும் ஒரு நாள் கூத்து திரைப்படம் கொஞ்சம் சோகமான முடிவை கொண்ட ஒரு திரைப்படமாக இருந்தது.

அதேபோல திரையில் வெளியான பொழுதும் பெரிதாக அந்த திரைப்படம் கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும் கூட அந்த படத்தில் நடித்த நிவேதா பெத்துராஜ்க்கு அந்த திரைப்படம் கொஞ்சம் வரவேற்பை பெற்று கொடுத்தது. அதிலும் அடியே அழகே என்கிற ஒரு பாடல் அதில் பிரபலமானது.

சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்:

சமீப காலமாக சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படும் ஒரு நடிகையாக இருந்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அவரது இரண்டாவது திரைப்படமான பொதுவாக என் மனசு தங்கம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்தார்.

அப்படி நடித்திருக்கும் பொழுது அந்த சமயத்தில் நிவேதா பெத்துராஜுக்கு துபாயில் 50 கோடியில் அவர் பங்களா ஒன்று வாங்கி கொடுத்ததாக சவுக்கு சங்கர் ஒரு பேட்டியில் கூறியிருந்ததார். இதனால்தான் சமீபத்தில் நிவேதா பெத்துராஜ் அதிக விமர்சனத்திற்கு உள்ளானார்.

ட்ரெண்டான வீடியோ:

இதற்கு நடுவே அதற்கு பதில் அளிக்கும் விதமாக வீடியோ வெளியிட்ட நிவேதா பெத்துராஜ் இதனால்  நானும் எனது குடும்பமும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். ஆதாரமற்ற தகவல்களை இப்படி பரப்பாதீர்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

 

இந்த நிலையில் தற்சமயம் நிவேதா பெத்துராஜின் வீடியோ ஒன்று அதிக வைரல் ஆகி வருகிறது. காரில் சென்ற நிவேதா பெத்துராஜை நிறுத்திய போலீசார் அவரை மடக்கி அவரிடம் கேள்வி கேட்டு இருக்கின்றனர். இதனால் கோபமான அவர் வீடியோ ரெக்கார்ட் செய்து கொண்டிருப்பவரிடம் கேமராவை தட்டி விட்டு உள்ளார்.

இந்த வீடியோ தற்சமயம் அதிக வைரலாகி வருகிறது சமீப காலமாக இவரை குறித்து பேச்சுக்கள் கொஞ்சம் குறைவாக இருப்பதால் அதை அதிகப்படுத்துவதற்காக அவராகவே இந்த மாதிரி வீடியோவை தயாரித்திருக்கிறார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. எப்படி இருந்தாலும் இந்த வீடியோ தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam