சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளி வந்த படையப்பா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
வசூலை வாரி குவித்த இந்த படையப்பா திரைப்படத்தை பற்றி ஜெயலலிதா என்ன சொன்னார் என்ற விவரத்தை விரிவாகவும், விளக்கமாகவும் இந்த படத்தை இயக்கிய கே எஸ் ரவிக்குமார் சொல்லி ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
படையப்பா..
படையப்பா திரைப்படமானது இரு வேறு கோணங்களில் பெண்களின் இயல்பு நிலையை சித்தரிக்க கூடிய வகையில் அமைந்திருந்தது. இதில் நீலாம்பரி கேரக்டரில் நடித்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு வெகுவாக பாராடப்பட்டது.
இதற்குக் காரணம் அந்த கேரக்டரின் ஆளுமை நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வைராகியம் தான் என்ற கர்வம், எப்போதும் வெல்வோம் என்ற நம்பிக்கை இவையெல்லாம் அந்த கேரக்டர் ரசிகர்களின் மத்தியில் பேசக் கூடிய அளவு பிரபலமானதற்கு காரணமாக சொல்லலாம்.
அந்த வகையில் அன்று தமிழகத்தை ஆட்சி செய்த சிஎம் ஜெ ஜெயலலிதா அவர் வீட்டிலேயே இந்த திரைப்படத்தை பார்த்து நீலாம்பரி கேரக்டரை வெகுவாக பாராட்டி இருப்பதை பற்றி கே எஸ் ரவிக்குமார் பகிர்ந்து இருக்கிறார்.
ஜெயலலிதா சொன்ன விஷயம்..
அது மட்டுமல்லாமல் இந்த கேரக்டர் உருவாக காரணமாக இருந்தவர் அயன் லேடி என்று அனைவராலும் அழைக்கப்படும் ஜெயலலிதா அம்மையார் தான். இந்த கேரக்டர் உருவாக அவர் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தார் என்பதை வெளிப்படையாக கே எஸ் ரவிக்குமார் போட்டு உடைத்து விட்டார்.
இந்நிலையில் நீலாம்பரி கேரக்டரை பக்குவமாக செய்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு வெகுவாக பாராட்டக்கூடிய வகையில் இருந்ததோடு மட்டுமல்லாமல் அந்த கேரக்டரை மிகச் சிறப்பான முறையில் செய்திருந்ததாக சொன்னதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தின் ஹைலைட்டே நீலாம்பரி தான் என்று கூறியதாக கூறியிருக்கிறார்.
ரகசிய உடைத்த கே எஸ் ரவிக்குமார்..
இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.
மேலும் ரசிகர்கள் நீலாம்பரி கேரக்டரானது ஜெயலலிதாவை முன்னெடுத்து தான் உருவாக்கப்பட்டது என்ற விஷயத்தை அறிந்து கொண்டு ஆச்சரியத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
இன்னும் எத்தனை காலம் ஆனாலும் திரை உலக வரலாறு உள்ளவரை நீலாம்பரி கேரக்டர் என்று பேசும் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.