1990களில் தென்னிந்தியாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஷகிலா. 1994 இல் முதன் முதலில் பிளே கேர்ள்ஸ் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில்தான் இவர் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன. 1998 வரையில் தமிழ் சினிமாவில் நடித்து வந்த ஷகிலா அதன் பிறகு மலையாள சினிமாவில் நடித்த தொடங்கினார்.
மலையாள எண்ட்ரி:
அதற்கு பிறகு தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டுமே நடித்து வந்தார் ஷகிலா. 2000 மற்றும் 2001 ஆகிய இரண்டு ஆண்டுகள் சகிலாவிற்கு அதிக வாய்ப்புகள் வந்த காலம் என்று கூறலாம். 2000 ஆண்டு மொத்தம் ஏழு படங்களில் நடித்தார் ஷகீலா.
ஆனால் 2001 ஆம் ஆண்டு மட்டுமே ஷகிலாவின் நடிப்பில் 21 திரைப்படங்கள் மலையாளத்தில் வெளியாகின. தமிழ் சினிமாவில் கூட எந்த ஒரு நடிகரும் ஒரே வருடத்தில் இத்தனை திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததில்லை என்று கூறலாம்.
அந்த அளவிற்கு அப்பொழுது வரவேற்பு பெற்ற நடிகையாக ஷகிலா இருந்து வந்தார். அதே சமயம் சர்ச்சைக்குரிய ஒரு நடிகையாகவும் அவர் பார்க்கப்பட்டார். அதன் பிறகு வெகு காலங்கள் தெலுங்கு சினிமாவும் தமிழ் சினிமாவும் மலையாள சினிமாவும் தொடர்ந்து சகிலாவை ஒரு தவறான பிம்பத்திலேயே திரைப்படங்களில் காட்டி வந்தன.
மாறிய பிம்பம்:
அதன் பிறகு இணையமெல்லாம் வளர்ந்த காலகட்டத்திற்கு பிறகு தற்சமயம் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ஷகிலா அந்தப் பார்வையில் இருந்து வெளிவந்துள்ளார் என்று கூறலாம். குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் அவர் பங்கு கொண்ட பொழுது ஷகிலா குறித்த மக்களின் பிம்பம் மாறி இருந்தது.
அதையும் தாண்டி முந்தைய தலைமுறையினர்தான் சகிலாவை தவறான பிம்பத்தில் பார்த்தவர்களாக இருந்தனர். இப்போது உள்ள தலைமுறை குக் வித் கோமாளியில் பங்கு கொண்டவராகவே சகிலாவை பார்க்கின்றனர் என்பதால் அது தன்னுடைய அடையாளத்தை மாற்றி இருக்கிறது என்று சகிலாவே ஒரு முறை பேட்டியில் கூறியிருந்தார்.
அண்ணன் நடிகருடன்:
இந்த நிலையில் ஒரு பேட்டியில் ஷகிலா பேசும்போது என்னுடன் நடிக்கும் சக நடிகர் ஒருவரை எப்போது நான் அண்ணா என்றுதான் அழைப்பேன். அவரை எனது அண்ணன் போலவே நினைத்து வந்தேன். ஆனால் அவருடன் படுக்கையறை காட்சியில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அப்போது அவருக்கு மிகுந்த தர்ம சங்கடமாகிவிட்டது. பிறகு நான் அவரிடம் சென்று இது நம் தொழில் அண்ணா எனக் கூறி அந்த காட்சியில் நடிக்க வைத்தேன் என கூறியுள்ளார் ஷகிலா.